உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/784

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

760 இடிதாங்கி, கட்டிட

760 இடிதாங்கி, கட்டிட 777 படம் 5. கட்டிட இடிதாங்கி கீழ்க் கடத்தி 3. 1. காற்று மறிப்பான் 2. நில மின்முனை தாக்காத பாதுகாப்பான பகுதியாகும். இவ்வாறே படம் 5 இல் கூர்மையான நுனியுள்ள ஒரு மின்கடத்தி (உலோகக் கம்பி) ஒரு கட்டிடத்தின் உச்சியில் நிறுத் தப்பட்டுள்ளது. இது காற்று மறிப்பான் (air interceptor) எனப்படும். மின்சாரம் கொண்ட மேகம் கட்டிடத்தின் மேல் வரும்போது, அது காற்று மறிப் பான் வழியாகப் பாயும். காற்று மறிப்பானின் அடிப் பாகத்திலிருந்து, ஒரு மின் கடத்தியை இணைத்து, அதன் மற்றொரு முனையை, கட்டிடத்தினின்றும் சற்றுத் தூரத்தில் அமைக்கப்பட்ட நில மின்முனை யுடன் (earth electrode) இணைத்துவிட வேண்டும். காற்று மறிப்பானுக்கும், தரையிணைப்புக்கும் இடை யிலுள்ள கடத்தி, கீழ்க்கடத்தி (down conductor) எனப்படும். மேகத்திலுள்ள மின்சாரம் கட்டிடத்தின் வழியே பாய்ந்து அதனைச் சேதப்படுத்தாமல் காற்று மறிப்பான், கீழ்க்கடத்தி மற்றும் தரைமின்வாய் வழியே தரைக்குப் போய்விடும். சுருங்கச் சொன் னால், மேகத்தில் சேரும் மின்சாரம் கட்டிடத்தின் வழியே தரைக்குப் பாய்ந்து கட்டிடத்தைச் சேதப் படுத்தாமல், சிறந்த மின்கடத்தியாலான காற்று மறிப்பான், கீழ்க்கடத்தி, தரைமின்முனை இவற்றின் வழியே மின்சாரம் தரைக்குள் செல்ல ஒரு மாற்றுப் பாதை அமைத்துக் கொடுக்கிறோம். இதுவே இடி தாங்கியின் கோட்பாடு ஆகும். காற்று மறிப்பா னின் உச்சியிலிருந்து 45° சாய்வுள்ள கோடுகள் வரைந்தால், கட்டிடம் முழுதும் இச்சாய்வுக் கோடு களுக்குள் அமையும் வண்ணம் காற்றுமறிப்பானின் உயரத்தை அமைத்துக் கொள்ளலாம்; அல்லது ஒன் றுக்கு மேற்பட்ட காற்று மறிப்பான்களை, 15 முதல் 23 மீட்டர் இடைவெளியில் அமைத்துக் கொள்ள லாம். கட்டித்திற்குமேல் காற்றுமறிப்பான் குறைந் தது 30 செ.மீ.உயரமாவது இருக்க வேண்டும். ஒன் றுக்கு மேற்பட்ட காற்று மறிப்பான்கள் இருப்பின், அவற்றை மின்கடத்திகளால் (உலோகக் கம்பி களால்) வலை போல நன்கு இணைக்க வேண்டும். இடிதாங்கிக்கான பொருள்கள். காற்று மறிப்பான், கீழ்க்கடத்தி மற்றும் தரைமின்முனை ஆகியவற் றிற்குப் பயன்படுத்த செம்பு சிறந்த உலோகமாகும். எஃகுக்கம்பியைச் சுற்றிலும் செம்புக் கம்பிகளை வைத்துப் பற்றுவைத்துச் செய்யப்படும் மின்கடத்தி, செம்பு உறைபோர்த்த எஃகு(copper clad steel) எனப் படும். இதனையும் இடிதாங்கியில் பயன்படுத்தலாம் துத்தநாக முலாம் பூசப்பட்ட எஃகினையும் பயன் படுத்தலாம். ஆனால் உப்பங்காற்று அல்லது அரிப்புத் தன்மைகொண்ட வளிமங்கள் உள்ள பகுதிகளில் இதனைப் பயன்படுத்தக்கூடாது. செம்பைவிட அலு மினியம் மலிவானது. எனவே 99% தூய்மையான அலுமினியத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் இது அரிக்கப்படாமல் இருக்க தக்கதொரு மேற்பூச்சுக் கொண்டிருக்க வேண்டும். அலுமினியத்தைத் தரைக்கு அடியிலோ சுவரைத் தொட்டபடியோ பயன்படுத்தக் கூடாது. இவ்வாறே பல புரிகளைக் கொண்ட கம்பியையும் (multi strand wire} தரைக்கு அடியில் பயன்படுத்தக் கூடாது. 100 ச.மீ. வரை அடிப்பரப்புள்ள கட்டிடங் களுக்கு ஒரு கீழ்க்கடத்தி நிறுவலாம். ஆனால் குறைந்தது இரண்டு இருப்பது நல்லது. 100 ச.மீ. பரப் பிற்கு மேற்பட்டால், ஒவ்வொரு 300 ச.மீ. பரப்பிற் கும், அல்லது அதன் பகுதிக்கும் கூடுதலாக ஒரு கீழ்க் கடத்தி நிறுவப்பட வேண்டும். கீழ்க்கடத்திகள் கட்டி டத்தின் வெளிச்சுவர்களைச் சுற்றி, ஒன்றுக் கொன்று சமதூரத்தில் இருக்கவேண்டும். கீழ்க்கடத்திகளில் வளைவு, ஒடிவு, கண்ணிகள் முதலியவை இருக்கக் கூடா. இவையன்றி நேரான பாதையில் தரையிணைப் பிற்குச் செல்ல வேண்டும். கீழ்க்கடத்தி, தக்க பாது காப்புக் கொண்டிருக்க வேண்டும். கூரையிலிருந்து மழைநீர் போன்ற செல்லும் இரும்புக் குழாய் வற்றுடன் து இணைக்கப்படலாம். இரும்புக் குழாய்க்கு உள்ளே இது செல்லக் கூடாது. ஆனால் இடிதாங்கியின் இணைப்புக்களில் அரிப்பு ஏற் படாமல், தார் பூசப்பட்ட துணியால் நன்கு மூடிக் கட்டித், தாரைப் பூச வேண்டும். ஒவ்வொரு கீழ்க்கடத்திக்கும் தனித்தனியே தரையிணைப்பு இருப்பது நலம். தரையிணைப்புக்கள் கட்டிடத் தின் ஒரேபக்கம் அமையாமல், கட்டிடத்திற்கு வெளியே எதிர் எதிர்த் திசைகளில் சமச்சீராக அமைய வேண்டும். கட்டிடத்தில் உள்ள மின் கம்பிகளுக்கு இணை யாக இடிதாங்கி அமையக்கூடாது. அப்படிச் செல்ல நேர்ந்தால் குறைந்தது 2 மீ. இடைவெளி இருக்க வேண்டும். மின் கம்பியும் இடிதாங்கியும் ஒன்றை ஒன்று தொடாமல் செங்குத்தாக அமையலாம். கட் டிடத்தில் உள்ள உலோகத்தாலான தொட்டிகள் குழாய்கள், மாடிப்படிகள், போன்றவை இடிதாங்கி யிலிருந்து 2 மீ. தொலைவில் இருக்க வேண்டும். தீப்பற்றக் கூடிய கூரையுள்ள கட்டிடங்களில் தீ விபத்தைத் தவிர்க்க இடிதாங்கி அமைப்பு, கூரை