உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/785

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடிமின்னல்‌ 761

யிலிருந்து குறைந்தது 30 செ.மீ. தொலைவில் மின் காப்புப்பொருளால் கட்டிடத்துள்மழைநீர் நுழையா மல் தாங்கப்பட வேண்டும். வெடிப்பொருள் சேமிப்புக் கிடங்குகள். இக்கட்டி டங்களிலிருந்து 15 மீட்டர் தொலைவிற்குள் கொடிக் கம்பம், மின்கம்பம் போன்ற மின்கடத்தி எதுவும் இருக்கக் கூடாது. இக்கட்டிடத்திற்கு நிலத்தடி மின் வடம் (underground cable) மூலமே மின்னிணைப்பு இருக்கவேண்டும். இக்கட்டிடத்திற்கு வரும் தண்ணீர்க் குழாய் போன்றவை சுமார் 150 மீட்டர் தொலை விற்குப் பல இடங்களில் தரையிணைப்புச் செய்யப் பட வேண்டும். இக்கட்டிடத்திற்குள் இருக்கும் உலோகப் பகுதிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று மின் கடத்தியால் இணைக்கப்பட்டுக் குறைந்தது இரண்டு இடங்களிலாவது தரையிணைப்புச் செய்யப் பட வேண்டும். உயரமான, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காற்று மறிப்பான்களை அமைத்து. கட்டிடம் முழு தும், பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் இருக்கும்படி 7மீ முதல் 10 மீட்டர் இடைவெளியில் குறுக்கும் நெடுக் குமாக மின்கடத்திகளைப் பந்தல் அமைப்பது போல் அமைக்க வேண்டும். மரங்களுக்கு இடிதாங்கி. வரலாற்றுச்சிறப்புமிக்க மரங்களை இடி தாக்காவண்ணம் இடிதாங்கி அமைப் பதுண்டு. மரத்தைச் சுற்றி, இரு மின் கடத்தும் வளையங்களை, சற்று இடை வெளியில் புதைத்து ஒன்றோடொன்று நன்கு இணைக்கப்பட வேண்டும். மரத்தின் நடுத் தண்டின் உச்சிக்கு மேலே காற்று மறிப்பான் அமைத்துத் தரை இணைப்புடன் இணைக் கப்படவேண்டும். மரத்தின் முக்கிய கிளை ஒவ் வொன்றுக்கும் காற்றுமறிப்பான் அமைத்து, நடுத் தண்டிலிருந்து வரும் முக்கிய கீழ்க்கடத்தியுடன் இணைக்கப்படவேண்டும். அவை இந்த நீண்ட கம்பி வேலிகள். நீண்ட கம்பி வேலிகளில் ஓரிடத்தில் இடி தாக்கினாலும் வேறிடத்தில் வேலி அருகில் வரும் உயிர்கட்கு ஆபத்து நேரும். இதைத் தவிர்க்க வேலியில் 300 மீட்டருக்கொருமுறை, 60 செ.மீ. அகல இடைவெளி விடவேண்டும். இடைவெளியை மரம் போன்ற மின்காப்புப் பொரு ளாலான கதவால் அடைக்கலாம். எப்போதும் ஈரம் இருக்கும் தரையாக இருந்தால் 150 மீட்டருக்கு ஒரு முறையும் ஈரமற்ற தரையாக இருந்தால் 75 மீட்ட ருக்கு ஒரு முறையும், வேலியைத் தரையிணைப்புச் செய்ய வேண்டும். சோதித்தல். சாதாரண கட்டிடங்களின் இடி தாங்கிகள் ஆண்டுக்கு ஒரு முறையும் வெடிப்பொருள் சேமிக்கும் கட்டிடங்களின் இடிதாங்கிகள் ஆறுமாதத் திற்கு ஒரு முறையும் சோதிக்கப்பட வேண்டும். உச் சியிலிருந்து தரை இணைப்பு உட்பட இடிதாங்கி அமைப்பின் மொத்தத் தடை 10 ஓமிற்குக் குறை இடிமின்னல் 761 வாக இருக்கவேண்டும். இத்தடை அதிகமாக இருக்க, தரை மின்முனை முக்கிய காரணமாகும். எனவே தரை மின்முனையின் தடையைக் குறைக்க வேண்டும். உள்ள ஒரு கட்டிடத்திற்கு இடிதாங்கி அமைக்க அவ் விடத்தின் இடிபற்றிய புள்ளி விவரங்களை அறிய வேண்டும். பொருளாதார அடிப்படையில் ஆதாய மற்ற தென்றாலும், வெடிப்பொருள்கள் கட்டிடங்களுக்கு இடிதாங்கிகள் அவசியமாகும். இடி இடிக்கும்போது வீடு, பேருந்து, தொடர் வண்டி, (train) - முதலியவற்றிற்குள் உயிரினங்கள் இருப்பது பாதுகாப்பானது. இடியின்போது, வீட்டில் புகை போக்கி, தொலைபேசி, தண்ணீர்க்குழாய், மின்சாத னங்கள் இவற்றிலிருந்து விலகி இருக்கவேண்டும். வீட்டிற்கு வெளியில் இருந்தால் தனித்த மரத்தடியில் இருப்பதை விட, மரக்கூட்டத்தினடியில் இருப்பது ஓரளவு பாதுகாப்பானது. அல்லது வெட்டவெளி யில் இருக்கலாம். இடியின்போது நீரில் இருப்பது, இருப்புப்பாதை, மற்றும் இரும்புவேலி இவற்றின் அருகே இருப்பது அல்லது உயர்ந்த குன்றின் உச்சி யில் இருப்பது ஆபத்தானவை. இடிமின்னல் கு. நல்லதம்பி வானத்தில் மேகக் கூட்டங்கள் அதிகரித்துக் கருக்க ஆரம்பிக்கும் போதும் மழை பெய்யும்போதும் கண் ணைப் பறிக்கும் மின்னலுடன் இடியோசை ஏற்படு கிறது. இடியும் மின்னலும் வான மண்டலத்தில் நிகழும் அதிகமான மின்சாரப் பாய்ச்சலின் விளைவு களாகும். உண்மையில் இடியும் மின்னலும் வெவ் வேறானவை அல்ல. மின்சாரம் பாயும்போது இரண் டும் ஒரே சமயத்தில் வெளிப்படுகின்றன. மின்னூட் டம் பெற்ற மேகம் (charged cloud) கணநேரத்தில் அதிகமான மின்சாரத்தைப் பாய்ச்சுகிறது. இதனால் வெப்பம் அடைந்த காற்று திடீரெனப் பெரும் ஒலி யுடன் விரிவடைவதால், அது இடி முழக்கமாகக் கேட்கிறது. இடியோசை ஒலி அலைகளாக வருவ தால் மின்னலை நாம் கண்டதற்குப்பின் சிறிது நேரம் கழித்து அது நம் காதுகளை எட்டுகிறது. மேகங்கள் மின்னூட்டம் பெறுதல். காற்றில் நீர்த் திவலைகள் அடங்கிய மேகக் கூட்டம் நகர்ந்து செல்லும்போது மேகமானது மினனூட்டம் பெறு கிறது. மேகத்திலுள்ள நீர்த்திவலைகள் காற்றில் உராயும்போது மேகத்தின் மேற்பகுதி நேர் அயனி (positive ions) மின்னூட்டம் கொண்டும் கீழ்ப்பகுதி எதிர் அயனி (negative ions) மின்னூட்டம் கொண் டும் இருக்கும். பொதுவாகக் காற்றில் ஒரு செ.மீ. இல் 1000 நேர் அயனிகளும் அதற்குச் சமமான எதிர் அயனிகளும் உள்ளன. புவியில் இயற்கையாய் அமைந்துள்ள மின்புவம் மேகத்திலுள்ள மழைத் .