766 இடி மின்னலால் காயம்
768 இடி மின்னலால் காயம் சிறிது அதிக உயரத்துடன் தூண் போன்ற கம்பி கூர்மையான முனை கொண்டு அமைக்கப்பட்டு இருப் பதைக்காணலாம். கட்டிடத்தின் மேலிருக்கும் கம்பித் தூணிலிருந்து தடித்த செப்புப் பட்டை இணைக்கப் பட்டு அடிப்பகுதிவரை கொண்டுவரப்பட்டு நன் றாகத் தரையிடப்பட்டு இருக்கும். இக்கம்பிப் பட்டை கட்டடத்தின் வெளிச்சுவரில் அமைக்கப்பட்டு இருக் கும். இக்கம்பித்தூண் கட்டடத்தின் உயரத்துக்கும் மேலே நீட்டிக் கொண்டிருப்பதால் மேலே நகரும் மேகங்களுக்கு மிக நெருங்கி மின்னல் ஏற்படின் அழி வின்றி அதைத் தன்வழியே இழுத்து மின்சாரத்தைத் தரைக்கு அனுப்பிவிடுகிறது. இம்மாதிரியான கம்பித் தூணைக் காற்றுமுனைக் கம்பி (air terminal) என் றும், இடிதாங்கி (lightning arrester) என்றும் அழைக் கின்றார்கள். அகன்ற கட்டிடங்களுக்கு, அதன் ஒவ் வொரு மூலைகளிலும், முனைக்கம்பிகள் அமைக்கப்பட வேண்டும். அத்தனை முனைகளையும் இணைத்து ஒரு செப்புப்பட்டையை மட்டும் மேலேயிருந்து கொண்டு வந்து தரையிடலாம். மிகவும் அகலமான கட்டடங் களில் மேல்பரப்பு முழுதிலும் கிடைக் கம்பிகள் அமைக்கப்பட்டுப் பல செப்புப் பட்டைகளைக் குறிப் பிட்ட இடைவெளியுடன் மேலிருந்து கீழே கொண்டு வந்து தரையிட வேண்டும். இடிதாங்கியிலிருந்து தரைக்குக் கொண்டு வரப் படும் செப்புப்பட்டை 2. 6செ.மீ. அகலமும் 2.0செ.மீ. தடிப்பும் கொண்டிருக்க வேண்டும். உறுதியான அமைப்புக்காக அப்பட்டையின் தடிமனை அதிகரித் துக்கொள்வதும் உண்டு. தொலைக் காட்சி ஆன்டெ னாக்களையும் இடிதாங்கியுடன் இணைக்க வேண் டியது இன்றியமையாததாகும். வீடுகளுக்கு அடியில் உலோகக் குழாய் இருந்தால் அதை இடிதாங்கிக் கடத்தியுடன் இணைக்க வேண்டும். இல்லையெனில் இடிதாங்கிக் கடத்திக்கும் குழாய்க்கும் இடையில் மின் பாய்வு ஏற்பட்டுக் குழாய் அழிவுறும். மின்னல் பாயும் போது பல சமயங்களில் மின்சாரம் வழங்கல் தடைப் படுகிறது. மின்கடத்தும் கோபுரங்களைத் (transmiss- ion towers ) தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க மின் னல் இறக்க முனைகள் (lightning discharge terminals) ஆங்காங்கே அமைக்கப்பட்டுத் தரையிடப்பட்டி ருக்கும். மின்கடத்தும் கோபுரங்களில் தரைக் கம்பி (ground wire) ஒன்று இணையாக அமைக்கப்பட்டுக் கோபுரத்தின் வழியாகத் தரையிடப்பட்டிருக்கும். கோபுரம் தாங்கியிருக்கும் கடத்திகளில் மின்னலினால் மின்னழுத்தம் மிகாதபடித் தரைக்கம்பி காக்கிறது. மின் சாதனங்களின் வெளி மூடிகளைத் தரையிடுவதன் காரணமும் இதுவே. பாது பல உயர்மின்னழுத்தக் கடத்திகளிலிருந்து தூண்டு சுருள் (chocking coil) இணைக்கப்பட்டுத் தரையிடப்பட்டிருக்கும். மின்னலின்போது உயரும் நிலை மின்னழுத்தத்தை (static voltage) இத்தூண்டு சுருள் தரையிடுவதன் மூலம் குறைக்கிறது. தூண்டு சுருள் இரும்புத் தகடுகளாலான கட்டையில் காப்பி டப்பட்ட செப்புக் கம்பிகளால் சுற்றப்பட்டிருப்ப தால் அதிக மின் தூண்டல் கொண்டிருக்கும். இதன் அதிகத் தூண்டலினால் மின்கோபுரத்தில் ஓடும் சாதாரண மின்னழுத்தம் தரையிடப்படாது. மழைக் காலத்தில் மேகங்கள் மின்கடத்திகளில் தூண்டப் படும் நிலைமின் எதிர் ஊட்டத்தை மட்டும் குறைக் கின்றன. மின் சாதனங்களான மின்னோடிகள் (motors), மின் மாற்றிகள் (transformers) முதலிய வற்றை மின்னலிலிருந்து பாதுகாக்கும் முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மின்மாற்றிகளில் கடத்தி களுக்கிடையில் ஏற்படும் மின்னழுத்தம் மின்னலின் போதும் குறித்த அளவைத் தாண்டாதபடி வடிவ மைக்கப்படுகின்றன. கடத்திக்கும் தரைக்கும் இடையே மின்கொண்மிகளை(capacitors) இணைப்ப தால் திடீரென அதிகரிக்கும் மின்னழுத்தமும் ஊட்ட மும் தரையிடப்படுகின்றன. மேலும் விரிந்த இடை வெளிக் கம்பி மட்டுப்படுத்தியையும் (horn cap arrester) மின்கடத்திகளுடன் இணைத்துத் தரையிடு வதன் மூலம் திடீரென உயரும் மின்னழுத்தம் தரையை அடைகிறது. தைரைட் என்னும் செயற்கையாகத் தயாரிக்கப் பட்ட ஒரு வகைக் கூட்டுப் பொருளாலான தரைட் மட்டுப்படுத்தி (thyrite arrester) மாறும் மின் தடை யாகச் செயல்பட்டு மின்னலின்போது அதிகரிக்கும் மின்னழுத்தத்தைத் தரையில் பாய்ச்சுகிறது.ஒன்றன் மேல் ஒன்றாக மின்காப்பிக்குள் (insulator) அடுக்கப்பட்ட தைரைட் தட்டுகள் மினகடத்திக்கும் தரைக்கும் இடையில் இணைக்கப்பட்டிருக்கும். கடத் தியில் அளவான மின்னழுத்தம் ஓடும்போது தைரைட் அதிக மின் தடையைப் பெறுவதால் மின் னோட்டம் தரைக்கு வருவதில்லை. கடத்தியில் மின்னலின்போது மின்னழுத்தம் அதிகமாக உயர உயர தைரைட்டின் மின்தடையும் வெகுவேகமாகக் குறைவதால் அம் மின்னழுத்தம் அதிகப்படி மின் சாரத்தைத் தைரைட் வழியாகத் தரையில் செலுத்தி விடுகிறது. எனவே, மின்னலின் போதும் கடத்தியில் மின்னழுத்தம் ஒரே சீராக உள்ளது. இவ்வாறாக மேலே கூறிய இடிதாங்கிகள், மட்டுப்படுத்திகள் மூலம் திடீரென உயரும் மின்னழுத்தத்தைத் தரைக்குச் செலுத்திப் பாதுகாப்புப் பெறலாம். ஜி.குருசாமி நூலோதி 1. Subramanian, Brijeal N. Electricity and Magne- tism, Ratan Prabash Mandei, Delhi, 1983. இடி மின்னலால் காயம் மழைக்காலத்தில் 2000, 3000 மீட்டர் உயரத்தில் மேகத்தில் மின்னல் உண்டாகிறது. சில சமயங்களில்