உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/791

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடுக்களவன் 767

று இரண்டு மேகங்கள் ஒன்றையொன்று நெருங்கி வரும். அப்போது ஒரு மேகத்திலிருந்து மின்னோட்டம் மற் றொரு மேகத்திற்குப்பாயும். இவ்வாறு மின்னோட்டம் பாயும் போது கண்ணைப் பறிக்கும் ஒளி உண்டா கும். இவ்வொளி மின்னல் எனப்படுகிறது. 1752ஆம் ஆண்டு பெஞ்சமின் ஃபிராங்களின் (Benjamin Franklin) என்பவர் மின்னலை ஆராய்ச்சியின் மூலம் விளக்கிக் காண்பித்தார். வேகம். மேகத்தினூடே தோன்றும் மின்னல் ஒரு நொடிக்கு 1000 மைல் முதல் 85000 மைல் வரை வேகம் கொண்டு புவியை நோக்கி வருகிறது. மின்னல் நேர் கோட்டில் வருவதில்லை. படிப்படியாகத் தங்கித் தங்கி வருகிறது. ஒரு மின்னல் நாற்பது பிரிவுகளாகக் கூடப் பிரிந்து தாக்கும் தன்மையுடையது. மின்னல் பொதுவாக உயரமான இடங்களையே தாக்குகிறது. ஆகையால் தான் உயரமான கட்டடங் களில் இடிதாங்கியை வைத்துக் கட்டுகிறார்கள். இடிதாங்கிகள் கட்டடத்தின் உச்சியிலிருந்து நேரே புவிக்குள் செல்லும் ஒரு செப்புக் கம்பியாகும். இதன் மேல் பகுதி கட்டடத்தை விடச் சற்று உயரத்தில் இருக்கும். கீழ்ப்பகுதி ஒரு செப்புத் தகட்டுடன் இணைக்கப்பட்டுப் புவிக்குள் ஈரமான பகுதியில் ஆழ மாகப் புதைக்கப்பட்டிருக்கும். விளைவுகள், மின்னல் தாக்குவது என்பது அதிக வெளிச்சத்துடன் பெரிய தீப்பொறி தாக்குவதைப் போலத்தான். மின்னல் தாக்கிய சில நொடிகளில் உடலில் இரத்த அழுத்தம் குறைய, மயக்கம் வரும். பிறகு நரம்பு மண்டலம் பழுது அடைந்து உயிர் போவதும் உண்டு. மின்னலால் தாக்குண்டவர் அனைவரும் இந்த நிலைக்குத்தான் ஆளாவார்கள் என்று சொல்வதற்கில்லை. சிலசமயம் சட்டையை மட்டும் இம் மின்னல் கிழித்துவிட்டு உடலுக்கு ஒரு தீங்கும் இழைக்காது போவதும் உண்டு. இதற்கு நேர் மாறாகச் சில சமயம் உடலில் சிறு காயம் கூட இல்லாமல் மரணமும் நேரலாம். மின்னலின் அதிக ஒளியின் காரணமாக விழித் திரை கிழிந்து கண் குருடாவதும் உண்டு. மேலும் விழித் திரையில் வலிப்பு, மறதி, தன்னிலைத் தடு மாற்றம், செவிடு, ஊமை, இரத்தக்கட்டு, உள்காயம. சிராய்ப்பு, புண், எலும்புமுறிவு, ஆகியவை கூடப் பல்வேறு நிலையில் ஏற்படும். சில சமயம் தலை மயிர் மட்டும் பொசுங்கும். மின்னல் என்பது மின் சாரம் தான் மின்சாரம் உலோகங்களில் எளிதில் பாயும்,உடம்பில் உலோகத்தாலான இரும்புக் கச்சை, ஜிப், நகை ஆகியவை அணிந்திருந்தால் அவற்றின் மூலம் மின்னல் பாய்ந்து ஆங்காங்கே பரவலாகப் பரவிச் செடியைப் போல் அமைப்புடைய தீக்காயங் களை உண்டாக்கும்.

முதலுதவி. சாதாரணமாகத் தீக்காயங்களுக்கு வெறும் வெளிப்பூச்சு மருந்துகள் மட்டும் போது மானவை. ஆனால் மூச்சும் இதயத்துடிப்பும் நின்றவர்களுக்கு வாயின் மூலமோ முதுகை அமுக் கியோ செயற்கைச் சுவாசம் (artificialoresoiration) கொடுக்க வேண்டும். இதயத் துடிப்பு இருக்கிறதா என்பதைப் பார்த்து நெஞ்சுக் குழிக்கு இடப்புறம் அமுக்கி இதயத் துடிப்பை உண்டாக்க வேண்டும். ஓரளவு குணமடைந்த பின்னர் நோயாளியை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து, தேவைப் பட்டால் செயற்கைச்சுவாசம் கொடுக்க வேண்டும். இத்துடன் ஆச்சிஜனும் (oxygen) கொடுத்தால் நோயாளி பிழைக்க வழி உண்டு. பாதுகாப்பு. மின்னல் மின்னும் போது து மரத்தடி யில் ஒதுங்கவே கூடாது. மழையில் நனைந்து செல் லும் பொழுது உலோகப் பொருள்களை உட வோடு ஒட்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மழைக்கு உபயோகிக்கும் குடையில் இரும்புப்பிடி இல்லாமல் இருப்பது நல்லது. வெட்ட வெளியில் மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது நனைந்து கொண்டு ஓடக்கூடாது, நிற்கக்கூடாது வீட்டில் திறந்த சாளரக் கதவருகில் நிற்கக் கூடாது. தொலை பேசியில் பேசும்போது வெளியிலுள்ள தொலைபேசி வடங்களுடன் இடிமின்ன லுக்குத் தொடர்பு ஏற்பட்டு மினசாரம் பேசுபவரைத் தாக்கலாம். நூலோதி சு.நரேந்திரன் Parikh, C.K., Parikh, s Text Book of Medical Jurisp rudence and Toxicology, Medical publication, Bombay, 1983. இடுக்களவன் நீளம் என்பது அளவுகோலில் (scale) உள்ளதுபோல் இரு கோடுகளுக்கு இடையேயுள்ள தொலை வென்றோ, ஒரு தண்டில் (rod) இரு முனையின் முகங்களுக்கு (end faces) இடையேயுள்ள தொலை வென்றோ கூறலாம். இரண்டு புள்ளிகளுக்கு அல்லது இரண்டு கோடுகளுக்கு இடையேயுள்ள தொலைவை ஓர் அளவுகோலின் உதவியால் எளிதாக அளக்க முடி யும். ஆனால் இரு இறுதி முனைகளுக்கிடையேயுள்ள நீளத்தையோ ஒரு விட்டத்தின் அளவையோ ஓர் அளவுகோல் கொண்டு கண்டுபிடிப்பது அரிய பிழை யுடைய செயலாகும். இதுபோன்ற செயல்களில் மிகுந்த உதவியாயிருப்பதுதான் இடுக்களவன் ஆகும். இடுக்களவனில் இரு வகையுண்டு. அவை வெளி இடுக்களவன் external caliper) (படம் 1), உள்