உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/811

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடுப்புக்‌ குழியின்‌ சதைத்‌ திசுக்கள்‌ 787

சார்ந்த பகுதிகளுக்கும் இதன் மூலம் இரத்தம் செல் கிறது. பிறப்புக் கால்வாய்த்தமனி. உட்புற இலியத் தமனி யின் கிளையாக அல்லது சில சமயங்களில் கருப் பைத் தமனியின் கிளையாக வெளிவரும். இத்தமனி பிறப்புக் கால்வாயின் மேற்பகுதிக்கு இரத்தம் அளிக் கிறது. இடுப்புக்குழிச் சிரைகள். மலக்குடல் சிரைப்பின் னல், முதுகு முள்ளெலும்பு உட்புறச் சிரைப்பின் னல் போன்றவை இரத்தத்தை எடுத்துச் செல்கின் றன. கிருமிக்கட்டி (septic emboli) அல்லது சிறு புற்று நோய்க் கட்டிகள் போன்றவை இந்தச் சிரைப் பின் னல்கள் மூலம் உட்சென்று முதுகு முள்ளெம்பைத் தாக்க வாய்ப்பு உண்டு. எனவே இடுப்புக் குழியில் முதன்மைப் புற்று நோய்க் கட்டி இருந்தால், கிளைக் கட்டிகள் உடலின் மேல் பாகங்களுக்குப் பரவ ஏதுவாகும். இடுப்புக் குழியின் நரம்புகள். ஆப்டுரேட்டார் நரம்பும், சேக்ர நரம்புப் பின்னலும், அதன் கிளை களும் தானியங்கி நரம்பு மண்டலத்தின் கீழ்ப்புறப் பகுதிகளும் இடுப்புக் குழியில் உள்ள முக்கியமான நரம்புகளாகும். ஆப்டுரேட்டார் நரம்பு. லம்பார் நரம்புப் பின்ன லின் கிளையான இது, சோவாஸ் தசைக்குள் உரு வாகிறது. தொடைகளுக்குச் செல்லும் இந்த நரம்பு சேக்ர இலிய மூட்டுக்கு உட்புறமாக இடுப் புக் குழி விளிம்பைக் கடந்து இடுப்புக் குழியின் பக் கச்சுவர்கள் வழியாகச்செல்கிறது. முட்டைக்கும் இதற் கும் இடையே இடுப்புக்குழி வெளி வபை இருக்கிறது. எனவே முட்டையில் ஏற்படும் வலி, தொடைகளில் உணரப்படலாம். இந்த நரம்புடன் ஆப்டுரேட்டார் தமனியும் சிரையும் சேர்ந்து செல்கின்றன. சேக்ர நரம்புப் பின்னல். 4 ஆவது லம்பார் நரம்பு, நரம்புப் பின்னலுக்குத் தன் கிளையைக் கொடுத்த பிறகு 5 ஆவது லம்பார் நரம்புடன் இணைந்து லம்போச் சேக்ரத்தண்டு என்ற நரம்பாக மாறுகிறது. இது இடுப்புக் குழி விளிம்பைத் தாண்டிக் கீழிறங்கி முதல் நான்கு சேக்ர நரம்புகளுடன் இணைந்து சேக்ர நரம்புப் பின்னல் தோன்றுகிறது இது ஓர் அகலமான முக்கோண வடிவமானது. பைரி பார் மிஸ் தசையின் மேல் இருக்கிறது. இடுப்புக் குழி வெளி மென் படலத்தால் மூடப்பட்டுள்ளது. இதன் மேல் பாகத்தைச் சிறுநீரக உட்குழாய் கடக்கிறது. இந்த நரம்புப் பின்னல் மூலம் உடலின் கீழ்ப் பகுதிகளுக்கு நரம்புகள் செல்கின்றன. இடுப்புக் குழி மற்றும் அதனைத் சார்ந்த உறுப்புகளின் நரம்பு இணைப்பினைக் கீழே காணலாம். 1, 2 சேக்ர நரம் பின் சிறு கிளையாகப் பைரிபார்மிஸ் தசைக்கு நரம்பு கிடைக்கிறது. ஊடுருவும் தோல் நரம்பு (perforating cutaneous nerve) தொடையின் பின்புறத் தோல் று.க. 3-50g இடுப்புக் குழியின் சதைத் திசுக்கள் 78 நரம்பு (posterior cutaneous nerve), புடண்டல் நரம்பு (pudental nerve), 4 ஆவது சேக்ர நரம்பின் சில கிளைகள், சியாடிக் நரம்பு (sciatic nerve), ஆப்டு ரேட்டார் இன்டெர்னஸ் தசையின் நரம்பு, நான்கு தலை தொடைத்தசையின் {quadratus femoris ) நரம்பு, மேற்புற மற்றும் கீழ்ப் புற க்ளூட்டியல் ஆகி யவை இடுப்புக் குழியைக் கடந்து கீழ்நோக்கிச் செல் கின்றன. 4,5 சேக்ர நரம்புகளும், காக்சிஜிய நரம் புப் பின்னலாகி, காக்சிஜியத் தசைக்கும், காக்சிஜிய எலும்பு முனையைச் சுற்றியுள்ள தோலுக்கும் செல் கின்றன. காக் சேக்ர தானியங்கி நரப்புத் தண்டுகள் (sacral sympathetic trunk). இவை, இடுப்புக் குழி விளிம் பைத் தாண்டி, சேக்ர எலும்பின் குழியில் இருக்கின் றன. ஒவ்வொன்றிலும் நான்கு தனிப்பட்ட நரம்பு முடிச்சுகள் இருக்கின்றன. சேக்ர எலும்பின் பக்க வாட்டுடன் இணையாக இருக்கும். இவை, சிக்ஸ் எலும்புக்கு முன்னால் ஒரு சிறு கட்டியாக இணைந்து. இம்பார் நரம்புமுடிச்சு(ganglion impar), என்ற பெயருடன் இருக்கிறது. இதன் உட்புறக் கிளைகள் கீழ்ப்புற வயிற்றின் கீழ் நரம்புப் பின்ன லுடன் (inferior hypogastric) இணைகின்றன. இந்தப் பின்னல் இடுப்புக் குழி நாம்புப் பின்னல் என்னும் பெயர்கொண்டது. இதில் ஒன்று சிறியாதாக, சேக்ர முண்டின் மேல் உள்ளது. இதில் நரம்பு முடிச்சுகள் இல்லை. இதை வயிற்றின் கீழ்ப் பின்னல் என்று கொள்ளலாம். நரம்பு முடிச்சுகளுடன் கூடிய பெரிய பின்னல் டக்ளசின் பைக்கு அருகில் உள்ளது. பின்னல் என்று இதை இடுப்புக் குழி நரம்புப் கூறலாம். வயிற்றின் கீழ்ப்பின்னல். இடுப்புக்குழியின் பக்கச் சுவர்களுக்கு அருகில், மலக்குடலுக்குப் பக்கத்தில் இடுப்புக்குழி வெளிப்புற மென்படலத்திற்குள் இருக்கும் இது 2,3 அல்லது 3,4 சேக்ர நரம்புகள் வழியாக இதன் துணையான தானியங்கி நரம்புப் பிரிவுகள் (parasympathetic nerve components ) செல் கின்றன. என்பன. இவையே எரிஜென்டிஸ் நரம்புகள் இந்தப் பின்னலின் உள் உறுப்புக்கிளைகள் (visc eral branches) கட்டுக்கட்டாக அமைந்துள்ள நார்த்திசுக்களுக்கு இடையில் செல்கின்றன. இத்து டன் உட்புற இலியக் தமனி சிரை செல்வதால், இந்தக் கட்டுக்கள் தசைநார்களாக அழைக்கப்படுகின்றன. உதாரணமான, சிறுநீர்ப்பை பக்கவாட்டுத் தசை தசைநார்கள் நார்கள், மலக்குடல் பக்கவாட்டுத் (lateral ligaments of the bladder and rectum) போன்றவை. சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலின் தசைகள், எரிஜென்டிஸ் நரம்புகள் (nervi erigentes ) மூலம் இயக்கப்படுகின்றன. சிறுநீர்ப்பையின் உள் தடுப்புச் சுருக்கத்தின் (internal spincter) தசைகள், வயிற்றுக் கீழ் நரம்பினாலும் (hypogastric nerve