உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/812

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

788 இடுப்பு முன்‌ எலும்பு

788 இடுப்பு முன் எலும்பு குதத்தின் உள் தடுப்புச் சுருக்கம், இடுப்புக் குழிப் பின்னலின் மூலம் செல்லும் சேக்ர நரம்பு முடிச்சின் கிளைகளாலும் இயக்கப்படுகின்றன. மலக்குடலும் சிறுநீர்ப்பையும், கழிவுப் பொருள்களால் நிரம்பி விரிந்தால், எரிஜென்டிஸ் நரம்பு மூலம் அந்த உணர்ச்சி உணரப்படுகிறது. வலி உணர்ச்சியும் இதன் மூலமே உணரப்படுகிறது. கருப்பையின் வலி உணர்வு, வயிற்றுக் கீழ் நரம்புகளால் உணரப் படுகிறது. மண்ணீரல் மடிப்புக்குக் கீழ் உள்ள பெருங்குடல் பகுதிக்கும் எரிஜென்டிஸ் நரம்பே செல்கிறது. இப்படியாகத் தானியங்கி நரம்பு மண்டலத்தின் இரு பகுதிகள், தசை இயக்கத்தைக் கட்டுப்படுத்து கின்றன. இடுப்புக் குழித்துளை தானியங்கி நரம்பு கள். சிறுநீர்ப்பையைக் காலி செய்வதற்குப் பயன் படுகின்றன.மண்ணீரல் மடிப்புக்கும் மலக்குடலுக்கும் இடைப்பட்ட பெருங்குடல் பகுதிக்கும் இது செல் கிறது. குடலின் சுரப்பிகளுக்கும் இது உதவுகிறது. தானியங்கி நரம்புகள் சிறுநீர்ப்பை மற்றும் குதத்தின் உட்புறத் தடுப்புச் சுருக்கத்திற்கும், விந்துப்பை இயக் கத்திற்கும் உதவுகின்றன. புதிய கண்டுபிடிப்புக் களின்படி, கருப்பையின் தசைக்கும், உந்து நரம் பாகத் (motor fibres) தானியங்கி நரம்புகள் செயல்படுகின்றன. இறங்கு பெருங்குடலுக்கும் முட்டை, விரை கருப்பையின் உடல் பகுதி முதலியவற்றிற்குமான உணர்ச்சி நரம்புகள் தானியங்கி நரம்புகளேயாகும். எனவே, மலக்குடல், பிராஸ்டேட் சுரப்பி முதலிய வற்றின் வலி 2,3 சேக்ர நரம்பின் துணை தானியங்கி நரம்பின் மூலம் செல்வதால் தொடையின் பின்பகுதி யில் இந்த வலியை உணரமுடியும். சியாடிக் நரம்ப வலியைப் போன்ற மாயத் தோற்றத்தை அளிக்கும். சேக்ரக் கால்வாய் (sacral canal) சேக்ர எலும் பின் நடுவில்ஒரு நீண்ட கால்வாய் போன்ற அமைப்பு உள்ளது. இதன் மூலம், மூளையின் இரு மேற் ரு புறச் சவ்வுகளும் (duramater and arachnoid) இறங்கி வந்து முடியும் இழையாகக் (filum terminale) காக் சிக்சுடன் இணைகின்றன. 5 ஜதை சேச்ர நரம்பு வேர்களும், ஒரு ஜதை காக்சிஜிய நரம்பும் இரக் னாய்டு சவ்வைத் துளைத்துக் கொண்டு வெளி வரு கின்றன. முள்ளெலும்பு உட்புறச்சிரைப் பின்னல் நரம்புகளையும் சவ்வுகளையும் சுற்றி இருக்கின்றன. இடுப்புக் குழியின் நிணநீர் மண்டலம். மிக அதிக மான அளவில் இருக்கும் நிணநீர்ச் சுரப்பிகளும் நாளங்களும் வயதானவர்களிடம் எளிதில் முடியாதபடி இருக்கின்றன. காண வெளிப்புற இலிய சுரப்பிகள் (pelvic lymphatic system). இவை கால்கள் மற்றும் வயிற்றுச் சுவர்ப் பாகங்களிலிருந்து நிணநீரை வடிப்பதுடன் சிறு நீர்ப்பை கருப்பை மற்றும் ப்ராஸ்டேட்டிலிருந்து நேரிடையாக நாளங்களைப் பெறுகின்றன. உட்புற இலியச் சுரப்பிகள் (internal iliac nodes). உட்புற இலியத் தமனி அதன் கிளைகளுடன் சேர்ந்து காணப்படுகிறது. இடுப்புக் குழியின் உள் உறுப்புகளிலிருந்து நிணநீரைப் பெறுவதுடன் பிறப்புப் பகுதி இடுப்பின் பின் பகுதி, தொடையின் பின்பகுதி ஆகியவற்றின் நாளங்களையும் பெறுகிறது. வெளிப்புற உட்புற இலியச் சுரப்பிகள், பொது இலியச் சுரப்பிகளில் இணைகின்றன. சேக்ர சுரப்பிகள் (sacral nodes). உட்புறப் பக்க வாட்டுச் சேக்ரத் தமனிகளுடன் இருக்கும், இவை இடுப்புக் குழியின் வெளிச்சுவர், மலக்குடல், சிறு நீர்ப்பையின் கழுத்து ப்ராஸ்டேட் கர்ப்பப்பை வாய் (cervix) ஆகியவற்றிலிருந்து நிணநீரைப் பெற்றுப் பொது இலியச் சுரப்பிகளில் வடிக்கின்றன். இவை தவிர, அகலத் தசைநரர் (broad ligament) மலக்குடல், மற்றும் சிறுநீர்ப்பையின் மென்படலங் களில் சிறு சுரப்பிகள் இருக்கின்றன. நூலோதி ந. கங்கா 1. Last, R.J., Anatomy, Regional and Applied, 6th Edition, The English Language Book society, Churchill Livingstone, Edinburgh 1978. 2. Romanes, .G.J., Cunninghams Manual of Practical Anatomy, volume II, 14th Edition, The English Language Book Society, Oxford Press, Oxford, 1977. இடுப்பு முன் எலும்பு க இடுப்பு முன் எலும்பு, (pubis) என்பது இடுப்புக் குழியின் முன் பகுதியாகும். இதனை வெளிப்பகுதி, உட்பகுதி எனத் தனித்தனியே விவரிக்கலாம். இடுப்பு முன் எலும்பின் உடற்பகுதி, நாற்கோண வடிவ முடையது. பக்கவாட்டில் மேற்புற இறகாக (superior ramus) இது துருத்திக் கொண்டு, இலிய மற்றும் இஸ்கிய எலும்புகளை அசிடா புலத்தில் சேர்கிறது. ஆப்டுரேட்டார் துவாரத்திற்குக் கீழ், கீழ்ப்புற இறகு (inferior ramus) இஸ்கிய எலும்புடன் இணைகிறது. இடுப்பு முன் எலும்பின் இணைப்புப் பகுதி முட்டை வடிவில் இருக்கிறது. இது ஒருவித மெழுகுத் திசுவால் மூடப்பட்டிருக்கிறது. அதுவே இடுப்பு முன் எலும்பு இணைப்பு (symphysis pubis) எனப்படும், மென் மூட்டாகும் (cartilagenous joint). உடலின் மேற் பகுதி குவிந்து, இடுப்பு முன்எலும்பு உச்சி (pubic crest) என்று அழைக்கப்படுகிறது.