இடுப்பெலும்பு முறிவு 797
கோணம்). இடுப்பறையின் பக்கச் சுவர்களின் குணம் ஆகியவற்றை அளவிடலாம். ஊடுகதிர்ப்படம் மூலம் விளிம்பின் குறுக்கு விட்டத்தைத் துல்லியமாக அளக்க முடியும். மகப் பேறு இப்படித்தான் நடைபெறக்கூடும் என்ற எதிர் பார்ப்பை ஒரே ஒரு விட்ட அளவை மட்டும் வைத்துக் கூறுதல் சரியன்று. இடுப்பெலும்பின் எல்லா மட்டங் களின் விட்ட அளவுகளைக் கொண்டே சாலச்சிறந்த முடிவுக்கு வர முடியும். இவ்விட்ட அளவுகளைக் கால்டுவெல் மலாய்க் கருவி மூலம் துல்லியமாக அளக்கலாம். குழந்தையின் தலையின் விட்டத்தை அளக்கும் முறை. குழந்தையின் தலையின் விட்டத்தை அளந்து பொருந்தாமை உள்ளதா என்பதை அறியலாம். இதை அறியக் கேளா ஒலியலை (ultra sonar) என்ற புத்தம் புதிய கருவி தற்காலத்தில் வந்துள்ளது. இக் கருவியைக் கொண்டு குழந்தையின் தலையின் பக்க உச்சி முனைப்பின் இடை வெளியைத் துல்லிய மாக அளக்க இயலும். ஊடுகதிர்ப் படத்தால் கருவிற்குப் பல தீங்குகள் வருகின்றன என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால் ஊடுகதிர்ப் படங்களை மிகவும் அவசிய மான கட்டத்தில் எடுக்க வேண்டுமேயன்றி நடை முறையாகக் கருவுற்ற எல்லாப் பெண்களுக்கும் எடுக்கக் கூடாது. நின்ற நிலை பக்கவாட்டிலிருந்து எடுக்கும் கதிர்ப்படம் பொருந்தாமையை மதிப்பிடப் போதிய தகவல்களைத் தருவதால் கூடியவரை அல் வொரு படம் எடுப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவ முறை. இப்பொருந்தாமையில் ஏற்படும் விளைவுகளைக் காண்கையில் பேறுகாலத்தின் பொழுது தாய் சேய் இருவரின் உயிரைக் காப்பாற்று வதற்குச் சில முறைகளைக் கையாளுவது மிகவும் அவசியம் என்பது உறுதியாகிறது. இம்முறைகளில் பேறு காலத்திற்குரிய நாள் வருமுன்னரே, குழந்தை முழு வளர்ச்சி அடையுமுன்னே புணர்வாய் வழி மகப்பேறு உண்டாக வாய்ப்பு அளித்தல், பேறுகாலத் தில் புணர்வாய் வழி மகப்பேற்றிற்கு வாய்ப்பு அளித்தல், சிசேரியன் அறுவை முறைமூலம் குழந்தை யை எடுத்தல், குழந்தை இறந்துபோய்க் கருப்பை யின் வாய் திறந்திருந்தால் அதற்கான கருவி கொண்டு குழந்தையின் மண்டை ஒட்டைத் தகர்த்துக் கூறுபடுத்திக் குழந்தையை வெளியே எடுத்தல் போன்றவை முக்கியமானவையாகும். நூலோதி லோகசுந்தரி செல்வராஜ் I. Jones, D. L., Fundamantals of Obsterics and Gynaecology, Vol.II, The English Language Book Society, Oxford, 1980. இடுப்பெலும்பு முறிவு 797 2. Mudaliar, A.L., Krishnamenon M.K., Clinica Obstetrics, 8 th Edn., Orient Longaman, Madras. 1978. இடுப்பெலும்பு முறிவு இடுப்பெலும்பு உடலின் நடுப்பகுதியில் ஒரு கிண்ணம் (basin) போன் று அமைந்து, உடலின் மேற்பகுதி பளு முழுவதையும் தாங்கிக் கொண்டு, இரண்டு கால்களின் மேல் அமர்ந்துள்ளது. சாதாரணத் தா குதல் (violence) களினால் அவை முறிவதில்லை பலத்த நேரடித் தாக்குதல்களாலும் அல்லது தொடை எலும்பு வழியாக வரும் பலத்த தாக்குதல்களினா லும் அவை முறிகின்றன. அ படம் 1. இடுப்பெலும்பு முறிவுகள் அ.நிலையான எலும்பு முறிவுகள் படம் . நிலையற்ற எலும்பு முறிவுகள் அ.1. மேல் இஸ்கியப் பியூபிய இணைப்பு முறிவு 2. கீழ் ஸ்கியப் பியூபிய இணைப்பு முறிவு 3. இடுப்புக் கிண்ண முறிவு 4. இலியம் எலும்பு முறிவு 5. இலியம் எலும்பின் கீழ் முன்முனை முறிவு. இடுப்பு வளைய முறிவின் குத்து நிலை வெட்டுமுகத்தில் இலியம்,பியூபிஸ், இஸ்கியம் ஆகிய மூன்று எலும்புகளிலும் முறிவு ஏற்பட்டு மேல்பக்கமாக விலகியுள்ளது. இடுப்பெலும்பு முறிவுகளை மூன்று வகைகளா கப் பிரிக்கலாம். அவை, 1. வளர்ச்சித் தகடுப் பகுதி இழுப்பு முறிவு (avulsion fracture of the epiphysis), 2.இடுப்பு வளைய முறிவு (fracture of the pelvic ring). 3. இடுப்புக் கிண்ண முறிவு (fracture of the acetabulum) என்பனவாகும். வளர்ச்சித் தகடுப் பகுதி இடுப்பு முறிவு. இடுப் பெலும்பின் உச்சி (iliac crest), இடுப்பெலும்பின்