உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/820

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

796 இடுப்பெலும்புக்‌ குழியும்‌, பொருந்தாக்‌ கபாலமும்‌

796 இடுப்பெலும்புக் குழியும், பொருந்தாக் கபாலமும் இப் பும் ஒன்றோடொன்று பொருந்துகின்றனவா என்ப தை மதிப்பிட வேண்டும். பொருந்தினால் பொருந்தாமை இல்லை எனச் சொல்லலாம். மன்றோக்கர் முல்வர் முறை (பொருந்தாமையை மதிப் பிடும் முறை). வலப்பக்கம் நின்று கொண்டு இப் பொருந்தாமையை மதிப்பிடல் வேண்டும். மருத்துவர் இடக் கையால் குழந்தையின் தலையை இடுப்பறை யின் விளிம்பில் பிடித்துக்கொண்டு, வலக் கையின் முதல் இருவிரல்களைப் புணர்வாயில் விட்டு அக்கை யின் பெருவிரலால் குழந்தையின் தலை இடுப்பறை யின் விளிம்பில் பொருந்துகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். இம்முறையில் குழந்தையின் தலை இடுப் பறையினுள் தாராளமாகச் செல்கிறதா அல்லது விளிம்பின் மேல் அமர்ந்துகொள்கிறதா என்பதை மதிப்பிடல் மூலம் சற்றுப் பொருந்தாமை, மிகப் பொருந்தாமை, சாலமிகப் பொருந்தாமை என்று மூன்று தரங்களாகப் பிரிக்கலாம். அயன்டோனால்டு முறை. இம்முறையில் கருவுற்ற பெண் முதுகுப் புறம் படுத்து முழங்கால் மூட்டுக் களை உயர்த்தி நன்றாக அகலப் பிரித்த நிலையில் மருத்துவர் அப்பெண்ணின் வலப்புறம் நின்று கொண்டு இப் பொருந்தாமையை மதிப்பிட வேண்டும். மருத்துவர் தம் இரண்டு கைகளின் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது விரல்களால் குழந்தையின் தலையின் முன் முனைப்பையும், பின் முனைப்பையும் பிடித்துக்கொள்ள வேண்டும் இடக் கையின் ஆள்காட்டி விரலைப் பியூபிக் இணையத்தின் மேல் வைத்துக் கொண்டு, தம் பெரு விரலால் குழந்தையின் உச்சி முனைப்பைப் பின் புற மாக அழுத்த வேண்டும். குழந்தையின் தலையை நன்றாகப் பிடித்த நிலையில் தம்முடைய உதவி யாளரிடம் குழந்தையின் புட்டத்தில் கைகளை வைத் துக் கொண்டு தாயின் இடுப்பறையை நோக்கி அழுத்தும்படிக் கூற வேண்டும். அவர் அவ்வாறு உச்சி முனைப்பைக் கீழ்ப்புறமாகவும், பின்புறமாக வும் தள்ள வேண்டும். செய்கையில் இவ்வாறு குழந்தையின் தலையின் முன்முனைப்பும், பின் முனைப்பும் இடுப்பறை விளம்பில் தாராளமாகப் பொருந்துகின்றனவா என்பதை மதிப்பிட வேண்டும். பியூபின் இணையத்தின் மேலுள்ள ஆள்காட்டி விரலால் பொருந்தாமையின் தரத்தை மதிப்பிடலாம். குழந்தையின் உச்சி முனைப்பு இடுப்பறையினுள் தாராளமாகப் பொருந்தினால், பொருந்தாமை இல்லையெனக் கொள்ளலாம். ஊடுகதிர்ப் படம் மூலம் இடுப்புக் கூட்டின் விட்டம் அளக்கும் முறை. இம் முறையில் இடுப்பறையின் எல்லா மட்டங்களிலும் உள்ள முக்கியமான விட்டங் களை நான்கு ஊடுகதிர்ப் படங்களால் துல்லியமாக அளக்கலாம். அவ்விதம் அளந்து பொருந்தாமை எந்த அளவு உள்ளது என்பதை நிர்ணயிக்கலாம். நின்ற நிலையின் பக்கவாட்டிலிருந்து எடுக்கப்படும் ஊடுகதிர்ப்படம். தாயை நிற்க வைத்து அவளது பக்க வாட்டிலிருந்து ஊடுகதிர்க் குழாயை, புட்ட இருப்பை எலும்புமுள்ளை மையங்கொண்டு இப் படத்தை எடுக்கவேண்டும் துல்லியமாக அளப்பதற்கு அளவுகள் பொறிக்கப்பட்ட அளவுகோலைத் தாயின் இரண்டு புட்டத்திற்கும் இடைவெளியில் வைத்துக் கொள்ளவேண்டும். சரியானமுறையில் எடுக்கப்பட்ட படத்தில் இரண்டு புறக் கிண்ணங்களும் சற்றேறக் குறைய அதேபோல் பதிந்து காணப்படும். இப்படம் மூலம் எல்லா மட்டங்களிலும் உள்ள முன்பின விட்ட அளவுகள், இடுப்பறையின் ஆழம்,விளிம்பு பியூபிக் இணைப்பின் சாய்வளவு, விளிம்பு மட்டத்திற்கும் இருக்கை எலும்பு முனை ஆகியவற்றிற்குமுள்ள தூரம், திரிக எலும்பின் நீளம், அதன் வடிவம், சாய்மானம், அது தட்டையாக உள்ளதா என்று காணுதல், உண்மையானதும் போலியானதுமான திரிக முன் முனைப்பு, முன்பின் விட்டத்தின் பின் ஆரம் இவற்றை அறியலாம். இவை தவிரக் குழந்தை யின் தலைக்கும் விளிம்பிற்குமுள்ள உட்பத்தம் எப் படியுள்ளது அல்லது குழந்தையின் தலையின் இடுப்பு நிலை, அது விளிம்புடன் பொருந்திய அளவு, குழந் தையின் இருபுற உச்சி முனைப்புகளின் விட்ட அளவு இவற்றை அறியவும் பயன்படுகிறது. இதிலிருந்து பொருந்தாமையின் தரத்தைக் கண்டுபிடிக்கலாம். இடுப்பின் விளிம்பின் மேலிருந்து கீழ்நோக்கி எடுக் கும் படம். ஊடு கதிர்ப்பட இருக்கையின் மேல் தாயை உட்காரவைத்து அவளது முதுகை 35° முதல் 40' சாய்ந்து கொடுத்துச் சரியான இடுப்பின் நிலை கிடைத்தபின் பியூபிக் எலும்பின் கிளையை மையங் கொண்டு ஊடுகதிர்ப்படம் எடுக்க வேண்டும். படம் சரியாக எடுக்கப்பட்டால் பியூபிக் எலும்பின் மேல் கிளைகளின் எல்லைக் கோடுகள் ஒன்றின் மேல் மற்றொன்று சேர்ந்தாற்போல் காணப்படும். இதில், விளிம்பின் வடிவம், மிக அதிகமாக குறுக்கு விட்டத்தின் நீளம், புட்ட எலும்பின் இரு புற முட்களுக்கும் இடையிலுள்ள விட்டம் குழந்தை யின் இருப்பு நிலைஆகியவற்றைக் கண்டுபிடிக்கலாம். விளிம்பின் நேர் முன்பின் முன்பின் ஊடுகதிர்ப் படம். கருவுற்றவரை மல்லாந்த நிலையில் படுக்க வைத்து நேராக எடுக் கப்படும் இக்கதிர்ப்படம் மூலம் இடுப்பறையின் பக்கச் சுவர்களின் போக்கையும், இருக்கை எலும் பின் இருமுட்களுக்கும் இடையே உள்ள விட்டத் தையும் அளக்கலாம். வெளிவாயிலின் ஊடுகதிர்ப்படம். இருக்கைக் கழலையின் மீது ஊடுகதிர் எந்திரக் குழாயை மையங்கொண்டு இப்படத்தை எடுக்க வேண்டும். தில் பியூபிக்கின் கீழ் வளைவு (கீழ் வளைவின்