இடுபொருள்கள் (வேளாண்மை) 799
அதிவேகத் தாக்குதல்களினால் சில சமயங்களில் உள்ளுறுப்புக்கள் பாதிக்கப்பட்டுச்சில சிக்கல்கள் ஏற் படுவதுண்டு. அவற்றையும் கண்டறிந்து குணப் படுத்துவது மிக முக்கியம். சிறுநீர்ப்பைப் பிளவு (rupture of the bladder), சிறுநீர்க் குழாய்ப் பிளவு (rupture of the urethra), மலக்குடல் காயம் (injury to rectum) போன்றவை ஏற்பட்டால் கட்டாயம் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்வது மிக முக்கிய யானது. இடுப்புக் கிண்ண முறிவு. தொடை எலும்பின் மேற்பகுதியிலுள்ள பந்து போன்ற தலைப்பகுதி (head of femur) இடுப்புக் கிண்ணத்தில் சுழல்கிறது. தொடை எலும்பின் தலைப்பகுதியில் பலத்த தாக்கு தல் ஏற்பட்டால் அதன் விளைவாக இடுப்பெலும் புக் கிண்ணம் முறியலாம். தாக்குதல் மிகப் பலமாக இடுபொருள்கள் (வேளாண்மை) 799 பகுதி முறிந்து விலகியிருப்பதுடன் இடுப்பு மூட்டும் விலகியிருப்பது என்பனவாகும். இவற்றைக் கண்டறிய ஊடுகதிர்ப்படம்,எடுப்ப துடன் (computed tomography) என்ற சிறப்புப் படமும் தேவைப்படும். இழுவை முறையில் முழங் காலுக்குக் கீழ் ஆணி பொருத்திப் பளு மூலம் நேராகவும், தொடை எலும்பின் மேல் பகுதியிலுள்ள பெரிய முண்டில் (greater trachanter) ஆணி பொருத் திப் பளு மூலம் பக்கவாட்டிலும் இழுத்து, விலகிய கிண்ணப் பகுதிகளை நேர் செய்யலாம். சில வேளைகளில் இது போன்ற இழுவை முறை யில் எலும்புப் பகுதிகளைச் சரி செய்ய முடியாவிட் டாலும், நோயாளி இளம் வயதினராக இருந்தாலும். அல்லது அந்தப் பக்கத் தொடை எலும்பும் சேர்ந்து முறிந்திருந்தாலும், அறுவை சிகிச்சை முறையின் மூலம் கிண்ணப் பகுதியைச் சரி செய்வது சாலச் சிறந்தது. இடுப்புக் கிண்ண முறிவுகள் ஒட்டிய பின்பும், மூட்டு முழுவதும் பொருத்தமுடையதாக congruency of joint) இராது. புதிதாக வளர்ந் துள்ள முகிழ் எலும்பு (callus) சொர சொரப்பாக இருக்கும். ஆகவே தொடை எலும்பின் தலைப் பகுதியாகிய பந்துக் கிண்ணத்தில் சுழலும்போது குருத்தெலும்புகள் உராய்ந்து தேய்ந்து விரைவில் மூட் டுத் தேய்வு (osteo arthrosis) ஏற்படுவதுண்டு. எம். சி. இராசமாணிக்கம் படம் 3. இடுப்புக் கிண்ண முறிவு இடுப்பு மூட்டு விலகல் இல்லை இருந்தால் இடுப்புக் கிண்ணம் முறிவதோடு தொடை எலும்பின் தலைப் பகுதியே இடுப்பு வளையத்திற் குள் சென்றுவிடலாம். சில வேளைகளில் உள்ளுறுப்பு களையும் பாதித்து இறப்பும் ஏற்படலாம். ஆகவே இடுப்புக்கிண்ண முறிவுபற்றி அறிவது மிக அவசியம். நூலோதி I. Last, R, J., Anatomy, Regional and applied, 6th Edition, The English Language Book Society & Churchill Livingstone, Edinburgh, Singapore, 1978. 2. Romanes, G.J. Cunninghams Manual of Practical Anatomy, Volume II, 14th Edition, The English Language Book Society, Oxford, Press, oxford, 1977. படம் 4. இடுப்புக் கிண்ண முறிவு இடுப்புமூட்டு விலகி தொடை எலும்பின் தலைப் பகுதி இடுப்பு வளையத்திற்குள் புகுந்துள்ளது. இடுப்புக் கிண்ண முறிவுகளை 3 வகைகளாகப் பிரிக்கலாம். அவை, 1. பளுவைத் தாங்காத கிண்ணப் பகுதி முறிவு, 2. பளுவைத் தாங்குகின்ற கிண்ணப் பகுதி முறிவு, 3 பளுவைத் தாங்குகின்ற கிண்ணப் இடுபொருள்கள் (வேளாண்மை) வேளாண்மையில் பயிர்விளைச்சலைப் பெருக்க றுதுணைக் காரணிகள் தாம் இடுபொருள்கள். இடுபொருள்களைச் சிக்கனமாக ஈடுபடுத்தும் தொழில் நுணுக்கமும், பயிர் நிருவாகத் திறனும் பெற்றிருந் தால்தான். இவற்றின் முழுப் பலனையும் அடைய முடியும். நல்ல விதை, தக்க எரு, தேவைக்கேற்ற பயிர்ப்பாதுகாப்பு, மருந்துகள் களைக்கொல்லிகள் நீர் பாசன வசதி போன்றவை இடுபொருள்கள் ஆகும்