800 இடுபொருள்கள் (வேளாண்மை)
800 இடுபொருள்கள் (வேளாண்மை) நல்விதை. பருவத்திற்கேற்ற (season) வயது டைய ரகங்கள், பருவத்தில் தோன்றும் பூச்சிகள். நோய்கள், மழை, குளிர், காற்றுப்போன்று பிரச்சி னைகளை மனத்தில் இருத்தி இவற்றைத் தவிர்க்க வும் அல்லது தாங்கவும் தகுதி கொண்ட ரகங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நன்கு முற்றிய, கலப்பு இல்லாத, மிகுந்த முளைப்புத்திறன் கொண்ட விதை களே நல்விதைகளாகும். எரு. தொடர்ந்து பயிர் செய்வதால், மண்ணில் சேமித்து வைத்திருந்த ஊட்டச்சத்துகள் குறைந்து வருவதை ஈடுசெய்ய, ஊட்டச்சத்துக்கள் அடங்கிய கழிவுப்பொருள்களையும் வேதி உரங்களையும் எரு வாக இடவேண்டும். இவை உயிர் விளைச்சலைப் பெருக்குவதற்கு முக்கிய இடுபொருகளாகும். இவற் றில் இயற்கை எருக்கள், வேதி உரங்கள், உயிர் உரங்கள் என மூவகை உண்டு. இயற்கை உரங்கள் என்பன கிடைக்கும் அன்றாட வேளாண்மையில் பண்ணைக் கழிவுப் பொருள்களும் (farm waste) பசுந்தாள் உரப் பயிர்களும், செடி, மரங்கள் இவற் றின் தழைகளும் அடங்கும். தொழு எரு, கூட்டு எரு, ஆட்டுக்கிடை எரு (sheep penning), பன்றி எரு என்பன விவசாயிகளால் பயன்படுத்தப்படும் இயற்கை எருக்களாகும். தக்கைப் பூண்டு, சணப்பு, சஸ்பேனியா போன்றவை பசுந்தாள் உரப்பயிர் களாகும். வேதி உரங்கள் முக்கியமாக மூன்று வகைப்படும். தழைச்சத்து (N), மணிச்சத்து (P), சாம்பல் சத்து (K), உரங்கள் என்பவையாகும். இலையாவும் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் வேதி உரங்கள். யூரியா (urea) அமோனியம் சல் பேட்டு (ammonium sulphate), அமோனியம் குளோ ரேட்டு (ammonium chlorate) போன்றவை தழைச் சத்து உரமாகும். சூப்பர் பாஸ்பேட்டு(super phosph- ate), ராக் பாஸ்பேட்டு (rock phosphate) என்ற உரங் கள் மணிச்சத்து உரங்கள். பொட்டாசிய உரங்கள் (murate of potash) சாம்பல் சத்து உரங்களாகும். அத்தோடு நுண்ணூட்டச்சத்தைத் தரும துத்தநாக சல்பேட், கந்தக உரங்கள், செம்பு சல்பேட்டு போன்ற வையும் வேதி உரங்களைச் சார்ந்தவையே, இவற்றை அடியுரமாகவோ, மேல் உரமாகவோ வேளாண் வல்லுநர்களின் பரிந்துரைப்படி இடவேண்டும். உயிர் உரங்கள். மண்ணில் வாழும் நுண்ணுயிர் களின் (சில வகைப் பாசிகள், பாக்டீரியாக்கள் போன்றவை) உதவியால் காற்று மண்டலத்தில் அதிக அளவில் பரவி வளிம நிலையில் இருக்கும் தழைச்சத் தைப் பயிர்களுக்குக் கிடைக்கும்படிச் செய்யும் உரங் கள் தாம் உயிர் உரங்கள். நீலப் பச்சைப்பாசி (blue green algae), அசோலா (asolla), அசெட்டோபாக்டர் (asatobactor ) அசோஸ்பைரில்லம் போன்றவை உயிர் உரங்களாகும். இவற்றை உரமாகப் பயன்படுத்துவ தால், வேதி உரங்கள் மூலம் அளிக்கப்படும் தழைச் சத்தின் அளவைக் குறைத்து, உரமிடுவதற்காகும் செலவைக் கணிசமாகக் குறைக்க முடியும். களைக் கொல்லிகள் : களைக் கொல்லிகளும் இடு பொருள்களில் ஒன்றாகும். களைகள் முளைக்கும் தறுவாயில் (முளைக்கும் முன்போ அல்லது பின்போ) (pre emergence, post emergence) அவற்றைச் சில வேதிப்பொருள்களால் கொன்றுவிட முடியும். இந்த வேதிப்பொருள்களைத்தான் களைக்கொல்லிகள் (her- bicides) என்கிறோம். நெல், சோளம், கம்புபோன்ற தானியப் பயிர்களுக்கும், பருத்தி, பயறுவகைகள் போன்ற இருவிதை வகைப் பயிர்களுக்கும் வெவ் வேறு வகையான களைக்கொல்லிக களை உபயோகிக்க வேண்டும். போன்ற பயிர்ப் பாதுகாப்பு மருந்துகள். பயிர்களில் தோன் றும் நோய்களையும் பூச்சிகளையும் கட்டுப்படுத்த உபயோகிக்கப்படும் மருந்துகள் இடுபொருளில் ஒன் றாகும். செரசான் (cerasan), அக்ரசான் (agrosan), கேப்டான் (capton) போன்றவை விதைகளால் பரவும் பூசண நோய்களைத் தடுக்கும் மருந்துகளாகும். பயிரில் விழும் பூசண நோய்களுக்குப் பெவிஸ்ட்டின் (bevistin) (henosan), ஹநோசான் டைதேன் (dithane), செம்பு ஆக்சைடு (copper oxide), செப்பு ஆக்சி குளோரைடு (copper oxichloride), கந்தகம் (sulphur) போன்ற மருந்துகளை இடுகிறார்கள். பாக்டீரியா அக்ரிமைசின் (agrimycin) கொல்லிகளும் இவ்வகையைச் சார்ந்தவையே. பூச்சிக்கொல்லி மருந்துகளும் பல உண்டு. சில மருந் துகள் பூச்சியின் மேல்பட்டாலே அவற்றைக் கொல் லும் (contact insecticide) திறன் கொண்ட நஞ்சு களாகும். சில குடல் நச்சுத்தன்மை (stomach poison ) உடையவை. இதை உட்கொள்ளும் பூச்சிகளும், பயி ரின் சாற்றை உறிஞ்சி வாழும் பூச்சிகளும் சாகடிக் கப்படுகின்றன. கார்பரில் (carberyl), டைகுளோரோபாஸ் (dicglorophos), பாரத்தியான் (parathian), ஃபென்தியான் (fenthion), மாலதியான் (malathion), பாஸ்போமிடான் (phos- pinomedon), எண்டோசல்பான் (endosulphon) மானோ குரோடோபாஸ் (monocrotophos), போ ரேட்டு (borate) போன்றவை பூச்சிக்கொல்லி மருந்து களாகும். டி.டி.டி,பி.எச்.சி. நீர்ப்பாசனம். வேளாண்மைக்கு மிக இன்றியமை யாத நீர்ப்பாசனமும், இடுபொருளாகக் கருதப்படு கிறது. நீர்த் தட்டுப்பாடான நிலையில் சிக்கனமான நீர்ப்பாசன முறைகளைக் கடைப்பிடித்து, நீர் மேலாண்மை அடிப்படையில் பயிர்செய்து விளைச்சல் பெறுவதே சிறந்த முறையாகும். உயர் வி.சிவசுப்ரமணியம்