உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ஆயமுறைகள்‌, படிகவிளக்கம்‌

1 62 ஆயமுறைகள், படிகவிளக்கம் இன்னும் சில வகுப்புகளில் இதிலும் குறைந்த சமச்சீர்மைகளைத் தாங்கி இயல்பு வகுப்பில் காணப் படும் ஒரு முழுப் படிகத்தின் ஒரு கால் (1) பங்கு பக்கங்களை மட்டும் பெற்றுப் படிக வடிவெடுக்கின் றன. அவ்வமயம் அவைகளைக் கால் பட்டக வடிவம் (tetartohedron) என்று அழைக்கிறார்கள். முகம் (face).ஒரு படிகத்தின் முக்கிய பிரிவு அதன் முகமாகும். ஒரு படிகத்தின் முகம் என்பது படிக வடிவத்தில் அடிப்படையாக அமைந்த அணுக்களால் இணைக்கப்பட்ட சமதளங்களுக்கு இணையான ஒரு பரப்பு ஆகும். ஒரு படிகத்தில் அடிக்கடிக் காணக் கூடிய முகம் அதிகமான அணுக்களால் பின்னப்பட்ட வலைத்தளமாக இருக்கும். இத்தகைய இருதளங் களுக்கு இடையே நிறைய இடைவெளி காணப்படும் போது அந்தத் தளங்களுக்கு இணையாக முகங்கள் சேர்ந்து காணப்படும். இத்தகைய படிகத்தின் பக் கங்கள் சம முகங்களைக் கொண்டவைகளாக இருக் கலாம். ஃபிளவர்ஸ்பார் (flourspar) என்னும் கனி மம் ஒத்த சதுரப் பக்கங்களால் சேர்க்கப்பட்ட பருச் சதுரமாக காட்சியளிக்கும்போது அதை ஒத்த முகப் (like face) படிக வடிவம் என்று கூறலாம். இதனின்று வேறுபட்டு ஒரு படிகத்தில் பக்கங்களின் எண்ணிக் கையிலோ இத்தகைய அணுக்கோப்புத் தளங்களின் எண்ணிக்கையிலோ மாறுபட்டுக் காணப்படும் பொழுது அதை ஒவ்வா முகங்களைக் கொண்டுள்ள படிகமாகக் கருதுகிறார்கள். ஒரு படிக வடிவத்தின் முகம், அப்படிகத்தின் h,k,l என்ற படிக அச்சுக்களை அசமத்தொலைவில் சந்திக்கின்றது என்று கருதப் படுகிறது. செஞ்சமச்சதுரப் படிகத் தொகுதியில் 48 முகங்களும் அறுகோணப் படிகத்தொகுதியில் 24 முகங்களும் நாற்கோணப் படிகத் தொகுதியில் 16. முகங்களும் செஞ்சாய் சதுரப் படிகத் தொகுதி யில் 8 முகங்களும் உள்ளன. இவற்றில் முற்கூறிய படிகத் தொகுதிகளிலுள்ள முகங்கள் ஒன்று சேரும்போது அனைத்து முகங்களும் மூடப்பட்டு முழுஉருவப் படிகம் கிடைக்கும். அத்தகைய அமைப்பு மூடிய படிக வடிவம் (closed form) என்று குறிக்கப்படும் (படம் (4). ஏனைய படிகத் தொகுதி 4 களில் உள்ள ஒத்த முகங்கள் இணையும்போது அவை முழுமையான படிக வடிவத்தைப் பெறுவ தில்லை. இத்தகைய முகங்களால் ஆன அமைப்பு திறந்த படிக வடிவம் (open form) என்று குறிப்பிடப் படுகிறது (படம் 15 அ,ஆ,இ). அலகு அல்லது அடிப்படை வடிவம் (unit or fundamental form) என்பது அந்த வடிவம் நாம் கற்பனையில் கொண்ட படிக அச்சுக்களின் அலகு நீளங்களுக்குச் சமமான தன்னளவுகளைப் (parame- ters) பெற்றிருக்கும். இவ்வமைப்பின் முகங்கள் அவை படிக் அச்சுக்களைச் சந்திக்கும் தொலைவைப் பொறுத்துச் சுட்டெண்களால் அழைக்கப்படுகின் றன. அச்சுட்டெண்களை அடைப்புக் குறியில் hk l எனக் காட்டுகிறார்கள். செஞ்சமச் சதுரப் படிகத் தொகுதியிலுள்ள அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒரு தனிப்பெயரில் அழைக்கப்படுகின்றது. பிற படிகத் தொகுதிகளிலுள்ள அமைப்புகள் பொதுப் பெயரின் கீழ் அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு அமைப்பின் முகங்கள் இரு படிக் அச்சுக்களுக்கு இணையாக இருக்கும்பொழுது அதை இணைவடிவு (pinacoid) என்றும், செங்குத்து அச்சிற்கு இணையா கவும் கிடை அச்சுகளைச் சந்திக்கும்படியாகவும் அமைந்துள்ள முகங்களைக் கொண்ட அமைப்பைப் பட்டகம் (prism) என்றும், ஒரு கிடை அச்சிற்கு இணையாகவும் ஏனைய அச்சுக்களைச் சந்திக்கும் படியான இடத்திலும் அமைந்துள்ள முகங்களாலான அமைப்பைக் குவிமட்டம் (dome) என்றும் மூன்று படிக அச்சுக்களையும் சந்திக்கும்படியான பக்கங் களால் ஆன அமைப்பைக் கூம்புப் பட்டகம் (pyra- mid) என்றும் குறிப்பிடலாம். இவை யாவும் கூம்புப் பட்டகத் தளத்தைத் தவிர ஒரு திறந்த அமைப்பின் வகையைச் சேர்ந்தனவாகும். படிகத் திரளில் வளாகம் (zone) என்று ஒரு பகுப்பைக் காண்கிறார்கள். தொடர்ச்சியாகப் பல முகங்கள் ஒரு படிகத்தில் அமையும்பொழுது அத் தொடர் முகங்களின் சந்திப்பு விளிம்புகள் ஒன்றுக்கு ஒன்று இணையாகவும் அதற்கு இணையாக வரையப் UKIT 100 010 011/ E 311 101 110 110 ili படம் 14. மூடியபடிக வடிவமுடைய பருச்சதுரம் எண்முகப்பட்டகம், பன்னிருபட்டசும்