உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ஆயமுறைகள்‌, வரைபட

54 ஆயமுறைகள், வரைபட 732 R 20 p p m 770 α 10. m m உ P 30 2 T2 படம் 17. சிர்க்கான் கனிமத்தின் பல்வேறு படிக வகைகள் சிறிது வேறுபாடு இருந்தாலோ, தொடர்பில்லாத சேர்மம் கலந்தாலோ, படிக வடிவம் முற்றிலும் மாறிவிடலாம். எடுத்துக்காட்டாக ஈய நைட்ரேட்டு எண்முகப்பட்டக வடிவத்தில் (octahedron) இயல் பாக உருவாகக் கூடியது. இதில் சிறிதளவு மெத்தி லின் நீலம் கலந்தால் கரைசலில் அது பருசதுரப் படிகமாக உருவெடுக்கிறது. எனவே படிகவடிவ வகை (habit) வேதியியல் உட்கூறின் இயல்புப்படிகம் உருவாகும் சூழ்நிலை முதலியவற்றைப் பொறுத் ததாகும். இதனால் படிகங்களை நுண்ணோக்கி வழி யாக மட்டும் கண்டறியக்கூடிய மிகச் சிறிய அளவி லிருந்து 18 டன் எடையுள்ள மிகப் பெரிய அளவு வரையிலும் கூட எதிர்பார்க்கலாம். அதன் அளவு எப்படி இருந்தாலும் படிக இயல்புகள் மாறு வதில்லை. அதேபோல் ஒரு படிகத்தினுடைய முகச் சுட்டெண்கள் அம்முகங்கள் அவற்றுக்கு அருகிலுள்ள அச்சுக்களைச் சந்திக்கும் தொலைவைப் பொறுத் தனவே. அந்த அளவு எப்பொழுதுமே ஒரு குறிப் பிட்ட முழு எண்ணாகவே இருக்க வேண்டும். ஒரு முகத்தை அது அச்சைச் சந்திக்கும் தொலைவை ஒரு முழு எண்ணால் குறிப்பிட வேண்டும் என்ற விகி தச் சுட்டெண் விதி (law of rational indices), ஒரு முகத்தினைக் குறியீடிட்டு அழைப்பதற்கு எளிதாக உதவுகிறது. நூலோதி ஞா. வி. இராசமாணிக்கம் . 1. Ford, W.E., Dana's Text Book of Mineralogy, Fourth Edition, Wiley Eastern Private Limited, New Delhi, 1985. 2. Read, H.H., Rutleys Elements of Mineralogy, Thoma's murby & Company, London, 1976. ஆயமுறைகள், வரைபட கொடுக்கப்பட்டுள்ள வெளியில் அமைந்த புள்ளி களை ஓர் இடத்தை மேற்கோளாகக் கொண்டு, எண் அளவுகளால் குறிக்க உதவும் மேற்கோள்திட்ட முறை அப்புள்ளிகளின் ஆயமுறை (system of co- ordinates) எனப்படும். இந்த எண் அளவுகள் ஆயங் கள் (coordinates) எனப்படும். ஆய முறை என்பது வடிவயியல் பொருள்களைப் பகுப்பியலாக விவரிப்பதற்குப் பயன்படும் கணித மொழியாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட தொகுதி யில் உள்ள புள்ளிகளின் ஆயங்கள் தெரிந்தால், மற்ற விளக்கங்களுக்குப் பதிலாக எண்முறை கணக்கீடுக ளால் அப்புள்ளிகளுக்கிடையே தொடர்புகள், அப் புள்ளிகளினால் உருவாகும் உருவங்களின் இயல்புகள் ஆகியவற்றைப் பெறலாம். தளம் (plane), முப்பருமான யூக்ளிடு வெளி (three dimensional euclidean space) ஆகியவை அனை வருக்கும் தெரிந்தனவாகும். முப்பருமான வெளியில் P என்ற புள்ளி (x, y, z) என்ற ஆயங்களால் குறிக் கப்படுகின்றது.நிலை (fixed) மதிப்புடைய X ஆயங் களின் தொகுதி ஒரு புறப்பரப்பை (surface) உரு வாக்கும். இதேபோல் Y, Z ஆயங்களும் புறப்பரப்பு களை உருவாக்குகின்றன. எனவே, P ஊடாக இந்த மூன்று ஆயப்புறப்பரப்புகள் (Co-ordinate surfaces ) அமையும். நிலை மதிப்புகளைக் கொண்ட X மற்றும் y ஆயங்களின் தொகுதி ஒரு வளைவு (curve) ஆகும். இதிலுள்ள ஒவ்வொரு புள்ளியின் வழியாகவும் மூன்று ஆயக்கோடுகள் (Co-ordinate lines) செல் லும். இக்கோடுகள் நேர்க்கோடுகளானால் இவ்வாய் முறைகள் நேர்க்கோட்டு (rectilinear) ஆயமுறை எனப்படும். சில அல்லது அனைத்து ஆயக்கோடுக ளும் நேர்கோடுகளாக இல்லாமல் இருந்தால் இம் முறை வளைகோட்டு (curvilinear) ஆய முறை எனப் படும். ஒவ்வொரு புள்ளியின் வழியாகச் செல்லும் ஆயக்கோடுகளுக்கிடையே உள்ள கோணம் (angle) செங்கோணமானால், இவ்வாயமுறை செவ்வக (rectangular) ஆயமுறை எனப்படும். கார்ட்டீசியன் ஆயமுறை (Cartesian coordinate system). இம்முறை, ஆய முறைகளில் மிகவும் எளிமை யான, பயனுள்ள ஆய முறை ஆகும். தொடக்கப்,