உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ஆயமுறைகள்‌ வானியல்‌

68 ஆயமுறைகள் வானியல் Sok N படம் 2 N வான நடுவரை ஆய முறை (equatorial (system). விண்மீன் வழியே வட துருவத்திலிருந்து வானநடு வரைக்கு வரையப்படும் PSM என்ற குத்துவட்டத்தில் SM என்பது நடுவரைவிலக்கம் (declination) ஆகும். இவ்வட்டம் நடுவரைவிலக்க வட்டம் (declination circle) எனக் குறிக்கப்படுகின்றது. இவ்வட்டத்திற்கும் க் உச்சி வட்டத்திற்குமிடையே உள்ள கோணம் நேரக் கோணம் (hour angle) ஆகும். இது வலஞ்சுழி யாக 0' இலிருந்து.360° வரைமாறும். இதனையே கால அளவில் கூறும்போது 0 மணி முதல் 24 மணி வரை மாறும். நடுவரை விலக்கத்தை 8 என்ற குறியீட்டா லும், நேரக்கோணத்தை h என்ற குறியீட்டாலும் குறிப்பிடுவது வழக்கம். வட துருவத்திற்கும் விண் மீனுக்கும் இடையே உள்ள தொலைவு வட துருவத் தொலைவு (north polar distance) என்று குறிப்பிடப் படுகிறது. மேலும் நடுவரைக்கு மேலுள்ள விண்மீன் களின் விலக்கங்கள் நேர்ம மதிப்புடையன எனவும், கீழேயுள்ள விண்மீன்களின் விலக்கங்கள் எதிர்ம மதிப்புடையன எனவும் கொள்ளப்படுகின்றன. நடுவரைவிலக்க வட்டத்தின் அடிக்கும் (நடுவரை யின் மேல் உள்ளது) / வுக்கும் இடையே உள்ள தொலைவு வல ஏற்றம் (right ascension) & எனப் படும். வல ஏற்றமும், விலிருந்து கிழக்குத் திசையில் 0° லிருந்து 360° வரை அளக்கப்படும். நடுவரை விலக்கம், நேரக்கோணம் கொடுக்கப்பட்டாலும் அல்லது நடுவரைவிலக்கம், வல ஏற்றம் கொடுக்கப் பட்டாலும் ஒரு விண்மீனைக் குறிப்பது எளிதாகும். சூரியன் தோற்றப்பாதை ஆயமுறை (ecliptic system), தோற்றப்பாதை CL க்கு அதன் துருவம் K யிலிருந்து விண்மீன் வழியே வரையப்படும் குத்து வட்டம் நெட்டாங்கு வட்டம் ஆகும். விண்மீனுக்கும் தோற்றப்பாதைக்கும் இடையேயுள்ள தொலைவு SM வான அகலாங்கு (celestial latitude)நீ என்றும், விலிருந்து குத்து வட்டத்தின் அடிக்கு உள்ள So Z1 S N C படம் 3 படம் 4 M B