உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயர்ஸ்டெட்‌, ஹேன்ஸ்‌ கிறிஸ்டியன்‌. 69

ஆயர்ஸ்டெட், ஹேன்ஸ் கிறிஸ்டியன் 69 தொலைவை வான நெட்டாங்கு (celestial longitude) A என்றும் குறிக்கப்படும். நெட்டாங்கும் 0° லிருந்து 360° வரை கிழக்குத் திசையில் அளக்கப்படும். இவற் றைக் கொண்டும் விண்மீனின் இடத்தைக் குறிக்க முடியும். பால்வழி ஆய முறை (galactic system). விண்மீன் களின் இயக்கத்தை ஆராயப் பயன்படுத்தும் ஒரு முறைக்குப் பால்வழி ஆயமுறை என்று பெயர்.இங்கு முதன்மை வட்டம் பால்வழித் தளத்தில் அமைகிறது. இதற்குப் பால்வழி நடுவரை என்று பெயர். இத னுடைய ஆயங்கள் பால்வழி அகலாங்கு(Galactic lati tude) பால்வழி நெட்டாங்கு (galactic longitude) எனப்படும். 1958 ஆம் ஆண்டு வரை இதனுடைய தொடக்கப்புள்ளி பால்வழி நடுவரையும் விண்நடு வரையும் 18 மணி 40 நிமிட வல ஏற்றத்தில் வெட்டு கின்ற புள்ளியாக இருந்தது. 1958 ஆம் ஆண்டிற்குப் பிறகு பால்வழி ஆயங் களுக்கு ஒரு புதிய செந்தர (standard) ஆய்முறை உருவாக்கப்பட்டது. வட பால்வழி முறை 12 மணி 49 நிமிட வல ஏற்றத்திலும், வட நடுவரை விலக்கம் 27.4 பாகையிலும் அமைகின்ற பால்வழி ஆயமுறை பின்பற்றப்பட்டது. பால்வழி நெட்டாங்கின் தொடக் கப்புள்ளி 1950 ஆம் ஆண்டில் நடுவரையின் துருவத் தைப் பொறுத்து 123° உள்ள இருப்புக் கோணத்தில் அமைகிறது. எனவே புதிய ஆயமுறையில் ஒரு விண் மீனின் பால்வழி நெட்டாங்கு பழைய ஆயமுறையை 32°31 பாகைகள் அதிகமாக அமையும். ஆயமுறை உருமாற்றங்கள் (transformation between systems) ஒரு விண்பொருளின் ஆயங்களை ஓர் ஆயமுறையிலிருந்து மற்றோர் ஆயமுறைக்கு உருமாற்றலாம். ஒரு கோளின் விண்நெட்டாங்கும், அகலாங்கும் தெரிந்தால் அவற்றிலிருந்து அதன் வல ஏற்றத்தையும் நடுவரை விலக்கத்தையும் கண்டறிய லாம். இந்த உருமாற்றங்கள் கோளக் கோண அள வியல் (spherical trignometry) முறைகளால் நிகழ்த்தப் படுகின்றன. இந்தக் கணக்கீடுகள் கோள் வானியலின் (spherical astronomy) பாடப்பொருளாக அமைகின் றன. நடைமுறையில் விண் பயணவியலில் பெறப் படும் காட்சிக் குறிப்புகள் அடிவான ஆயமுறையி லிருந்து விண்நடுவரை ஆயமுறைக்கு மாற்றப்படும் உருமாற்றம் பெருமளவில் பயன்படும் உருமாற்றமா கும். இதற்கு வானியல் முக்கோணம் அல்லது முக் கோணத்தீர்வு பயன்படுகிறது. இந்தக் கோண முக் கோணத் தீர்வைக் கண்டறியப் பேரளவு செயல் படும் நுண்மாண் நுழைபுலமும் தேவைப்படுகின்றது. காண்க,கோளக்கோண அளவியல். ப.க. பெ.வ. நூலோதி 1. வானியல், ரா. அனுமந்தராவ், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1973 ஆயர்ஸ்டெடு (அலகு) மின்காந்த முறை அலகு அமைப்பில் உள்ள காந்தப் புல வலிமையின் அலகு. இது 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டேனிய நாட்டு இயற்பியலார் ஹேன்ஸ் கிறிஸ்டியன் ஆயர்ஸ்டெடு பெயரால் வழங்குகிறது. இது செ.மீ. கிராம் - நொடிகளில் குறிப்பிடப்படு 400 கிறது. ஒரு செ.மீ. ஆரமுடைய வட்டமான தளச் சுருள் ஒன்றின் ஒற்றைச் சுற்றில் 1/2ள அபாம்பியர் மின்னோட்டம் பாயும்போது அதன் மையத்தில் உண் டாக்கும் புல வலிமையே ஆயர்ஸ்டெடு எனப்படும். கீழ்க்காணும் சமன்பாடு (1) இல் ஆயர்ஸ்டெடுக் கும் மீட்டர் - கிலோ கிராம்-நொடி அலகுமுறை காந் தப் புலவலிமைக்கும் உள்ள உறவு தரப்பட்டுள்ளது. H NI 2r (1) இங்கு H என்பது I-மின்னோட்டம் பாயும் r ஆரமும் N சுற்றுக்களும் உள்ள தட்டையான வட்டத்தளச் சுருள் ஒன்றின் மையத்தில் ஏற்படும் காந்தப் புல வலிமையாகும். சமன்பாடு (1) இல் இருந்து சமன் பாடு (2), (3) ஆகியவை கிடைக்கின்றன. 1 ஆயர்ஸ்டெட் - (1/27 ) அபாம்பியர் × 1 சுற்று 2 × 1 செ.மீ. 10 அபாம்பியர் × 1 சுற்று 47 × 0.01 மீட்டர் 1 ஆம்பியர் - சுற்று/மீட்டர் 13 10 ஆம்பியர் 4 மீட்டர் (2) 4mX 10-3 ஆயர் ஸ்டெடு- (3) ஆயர்ஸ்டெடு என்பது செ. கி.நெ. (C.G.S.) அலகு முறையின் ஒற்றைக் காந்த துருவத் தின் மீது செயல்படும் டைன்களில் உள்ள விசையின் அளவு ஆகும். H = விசை/துருவம் என்பதால், ஆயர்ஸ்டெடு என்பது டைன்! ஒற்றைத்துருவம் ஆகும். காண்க, அலகுகளும் செந்தரங்களும், மின்; காந்தப்புலம்; ஆம்பியர் - சுற்று. ஆயர்ஸ்டெடு, ஹேன்ஸ் கிறிஸ்டியன் உலோ.செ. கண்டறிந்த மின்காந்தவியல் கோட்பாட்டைக் டேனிய நாட்டு இயற்பியல், வேதியியல் அறிஞர், ஹேன்ஸ் கிறிஸ்டியன் ஆயர்ஸ்டெடு tian Oersted) 1777 ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 14 ஆம் நாள் டென்மார்க்கு நாட்டிலுள்ள ருத்கோ (Hans Chris-