250 இந்தியப் பொறியாளர் நிறுவனம்
250 இந்தியப் பொறியாளர் நிறுவனம் உறுப்பினர் அப்பிரிவைத் தேர்ந்தெடுத்து மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுவர். இந்நிறுவனத்தி னரால் ஏற்படுத்தப்படும் விதிமுறைகளுக்கேற்ப இணைக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகளின் தொழில் நுட்ப செயல்களில் ஈடுபடலாம். இணைக்கப்படாத பிரிவில் உள்ள இணை உறுப்பினர்கள், மாணவர்கள், தொழில் நுட்பவியலாளர்கள், பயனடையும் மற்றும் நன்கொடை வழங்கும் உறுப்பினர்கள் ஆகியோர் எந்தவொரு பொறியியல் பிரிவிலும் இணைக்கப்பட மாட்டார்கள். தேர்வுகள். இந்நிறுவனத்தில் உறுப்பினராகவோ துணை உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்படுவ தற்கு இந்நிறுவனத்தினரால் (அ) மற்றும் (ஆ) பிரிவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாணவர் களாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மாணவர் தேர் தல்கள் தேவைப்படுமானால் அதையும் இந்நிறுவனம் நடத்துகின்றது. இத்தேர்வுகளுக்கான நேரம், இடம் முதலான விதிமுறைகளையும் தேர்வுக்கட்டணம், பாடங்கள், தேர்வு எழுத அனுமதிக்கும் தகுதிகள் போன்ற விதிமுறைகளையும் இந்நிறுவனம் வகுக் கின்றது. உரிமைகளும் சலுகைகளும் (அ) இந்நிறுவனத்தின் விதிமுறைகளுக்கும் ஒழுங்கு முறைகளுக்கும் உட்பட்ட அனைத்து உரியை களையும், சலுகைகளையும் ஆய்வு உறுப்பினர்கள் பெற்றுள்ளனர். (ஆ) உறுப்பினர்களும் துணை உறுப்பினர்களும் ஒரு மாநில மையம், உள்மையம், துணை மையம், ஒரு பிரிவு ஆகியவற்றின் தலைவர் பதவியை வகிக்க இயலாது. தவிர இந்நிறு வனத்தின் விதிமுறைகளுக்கும் ஒழுங்கு முறை களுக்கும் உட்பட்ட அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் உறுப்பினர்களும் துணை உறுப்பி னர்களும் பெற்றுள்ளனர். துணை மையத்தில் தலைவர் பதவிக்கு ஆய்வு உறுப்பினரே இல்லாத போது உறுப்பினர் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக் கப்படத் தகுதியுள்ளவராகிறார்.(இ) இணை உறுப்பி னர்கள், மாணவர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் ஆகியோர் எவ்விதமான பதவியையும் வகிக்கவோ, வாக்களிக்கவோ இயலாது. தவிர இந்நிறுவனத்தின் விதிமுறைகளுக்கும், ஒழுங்குமுறைகளுக்கும் பட்ட அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் இவர்கள் பெற்றுள்ளனர். உட் மேற்கண்ட அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த வர்களுக்கும் உள்ள உரிமைகளையும் சலுகைகளை யும் அவர்களைத்தவிர, மற்றவர்களுக்கு, விதி முறை களின் மூலமாகவோ தனிப்பட்டவர்களின் செயலின் மூலமாகவோ மாற்ற இயலாது. ஒவ்வொரு ஆய்வு உறுப்பினரும், உறுப்பினரும், துணை உறுப்பினரும் தங்களின் பெயருக்குப் பின் னால் முறையே (F.I.E., M.IE., A.M.I.E.) என்ற ஆங்கிலப் பட்டங்களைச் சுருக்கிய எழுத்துக்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். பொறியியலின் ஒவ்வொரு பிரிவின் செயல்களைக் கவனிப்பது அவ்வப் பிரிவுகளுக்கான குழுக்களின் வேலையாக இருந்தாலும், அறிவியல், தொழில் நுட்பம், பொறியியலில் தனிப்பட்ட தொடர்ச்சியான கவனம் செலுத்துவதன் மூலம் பொதுவான மற்றும் பிரிவுகளுக்கிடையிலான ஓர் ஒருங்கிணைந்த செயல் பாட்டிற்கு ஒவ்வொரு பிரிவும் வழிவகுக்கின்றது. இத்தகைய செயல்பாடுகளை நிறைவேற்ற தொழில் நுட்பம், பொறியியலின் வளர்ச்சிக்கான குழு (com- mittee for the advancement of technology and enginee- ring ) ஒன்று இந்நிறுவனத்தால் நிறுவப்பட்டது. இக் குழு பின்வரும் செயல்களில் தனிக்கவனம் செலுத்து கின்றது. ஆய்வு, புதுப்பொருள் உருவாக்கம், குறிப் பிட்ட நோக்கத்திற்கான தொழில் நுட்பம் ஆகிய வற்றின் முன்னேற்றம் வடிவமைப்பு, அறிவை வளர்த் தல், பொறியியல் செய்திப் பணிகளை வளர்த்தல், தொழில் நுட்பச் செயல்களில் குறிப்பீடுகளையும் செந்தரங்களையும் உருவாக்குதல் மற்றும் செயல் படுத்தல், இந்நிறுவனத்தின் வெளியீடுகளை வெளி யிடல், நாட்டின் அறிவியல் தொழில் நுட்ப கொள்கை களை இந்நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து விழிப் புடன் கண்காணித்தல் தொழில் நுட்ப ஆய்வறிவு மற்றும் தொழிற்சாலை வளர்ச்சியில் ஒருங்கிணைந்து செயல்படுதல், பல பொறியியல் பிரிவுகளுக்கிடை யேயான ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவை இக்குழுவின் இன்றியமையாத பணிகளாகும். பொதுக்குழுக் கூட்டங்கள் (அ) ஆண்டுதோறும் பொதுவாக டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் இந்நிறுவனம் முடிவு செய்த இடத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடை பெறும். இக்கூட்டத்தில் இணைக்கப்பட்ட உறுப் பினர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். (ஆ) சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் பின்வரும் காரணங்களுக்காகக் கூட்டப்படலாம். விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டியிருந் தாலோ நீக்கம் வேண்டியிருந்தாலோ கூட்டப்படலாம். செய்ய இந்நிறுவனத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு அமைக்கப்பட்ட குழுவினால் ஏற்றுக் கொள்ளப் பட்ட தீர்மானம், இணைக்கப்பட்ட உறுப்பினர் உறுதிபடுத்தப்பட வேண்டியிருந்தால் களால் கூட்டப்படலாம். 500 இணைக்கப்பட்ட உறுப்பினர்களுக்குக் குறையாமல் கையெழுத்திடப்பட்டு குறிப்பிட்ட பொருள்களைப் பற்றித் தீர்மானிக்கச் செயலர்