இயல்தனிமக் கனிமங்கள் 355
வெள்ளை நிற ஆக்சைடு படிவுகளை உண்டாக்கு கிறது. இதன் உருகு வெப்பநிலை 330°C ஆகும். இது எந்த ஒரு தனி அமிலத்திலும் கரையாத இயல் தனிமக் கனிமமாகும். 11.5 இனம் சுட்டும் பண்புகள். மிகுந்த அளவு அடர்த்தி கொண்டுள்ளதால் இதை எளிதாக மற்ற இயல்பு தனிமங்களிலிருந்து வேறுபடுத்திக் காண லாம். தனிமமாக இயற்கையில் கிடைப்பது அரிது. வெர்மலாந்திலும் (Vermaland), சுவீடனிலும் சிறப் பான படிசுநிலையில் ஹார்ட்சிங் சுரங்கத்திலும் (harstig mine) காணப்படுகிறது. யூரல் மலைத் தொடரில் எக்கடிரின்ஸ் பர்க் (Ekaterinburg) மாவட்டத்தில் காணப்படும் தங்க மணல் படிவுத் தாதுக்களுடன் இது காணப்படுகிறது. அமெரிக்கா வில் பிராங்கலின் நியு ஜெர்சி ஆகிய இடங்களில் காணப்படுகிறது. சு.ச. நூலோதி. Ford, W. E., Dana's Text Book of Mineralogy, Fourth Edition, Wiley Eastern Limited, New Delhi, 1985; Winchel, AN., Winchell, H., Elements of Optical Mineralogy, Fourth Edition, Wiley Eastern Private Limited, New Delhi, 1968. . இயல்தனிமக் கனிமங்கள் 355 இவை ஒரே மாதிரியான அணு அமைப்பினைப் பெற்றுக் காணப்படுகின்றன. இவற்றில் நான்கு கனசதுர அணுப் பிணைப்புக்கள் ஒன்றையொன்று ஊடுருவி நெருங்கி இணைந்து காணப்படும். ஒவ்வொரு அணுவும் அதையொத்த அருகிலுள்ள 12 அணுக்களோடு தொடர்புற்றுக் காணப்படும். ஒரு கனசதுரக் கனிம அலகின் (cubic unit) நீளம் அக்கனி மத்திலுள்ள அணுவின் ஆர நீளத்தைப் பொறுத்தது. இக்கனிமங்கள் இயற்கையில் நல்ல படிகங்களாகக் கிடைப்பன அல்ல. இவை மரக்கிளைகள் போன்று படிந்து (dentritic arborescent) காணப்படுகின்றன. இவை மிருதுவாகவும், வளைந்து கொடுக்கக் கூடியவாகவும் கம்பியாக இழுத்து நீட்டக் கூடியவாக வும், வெப்பம், மின்சாரம் ஆகியவற்றை விரைவில் கடத்தக் கூடியவையாகவும், ஒளி ஊடுருவாத்தன் மையுடையவையாகவும், அடர்த்தி எண் அதிகமாகப் பெற்றவையாகவும் காணப்படும். இவற்றில் ஒன்றிற்கொன்று உள்ள இயல்புப் பண்புகளின் வேறுபாட்டைக் கீழ்க்காணும் அட்டவணையில் காணலாம். அணுவின் தங்கம் வெள்ளி செம்பு ஈயம் பரிமாணம் 4.0786 4.0862 3.6150 4.9505 இயல்தனிமக் கனிமங்கள் பல மூலகங்கள் இயல் தனிம மூலகங்களாகக் கிடைப்பி னும் ஒரு தாதுப் பாறையில் அவை முக்கிய மூலகங்க ளாகவோ, கனிமங்களாகவோ கிடைப்பது அரிது. இருப்பினும் தங்கம், செம்பு, வெள்ளி, வைரம், கந்தகம் போன்றவை தொன்று தொட்டு இயல் தனிமக் கனிமங்களாகப் பாறைகளினின்று பிரித் தெடுக்கப்படுகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டில் பிளாட்டினம் என்னும் மூலக்கனிமம் இவ்வகையான செறிவுடன் காணப்பட்டது. மற்ற மூலகங்கள் இம்மாதிரியாக இயல்தனிமக் கனிமங்களாகக் கிடைப்பினும் அவற்றைப் பிரித்தெடுக்கும் முறையில் பொருளாதார அடிப்படையில் அவை பயனற்றன வாகக் கருதப்படுகின்றன. இயல்தனிமக்கனிமங்களை உலோகம், அலோகம், பகுதி உலோகம் என மூவகையாகப் பிரிக்கலாம். உலோகங்களான டெலுரியம், ஆர்செனிக், பகுதி பிஸ்மத் ஆண்ட்டிமனி, ஆகியவை அறுகோணப் படிகத் தொகுதியின் கீழ்வரும் சாய் சதுரப்படிகப் பிரிவு முறையில் படிகமாகின்றன. கன சதுரப் படிகத் தொகுதியின்கீழ் தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் ஆகியவை படிகமாகின்றன. அ.க.4-23அ அணு அடக்கம் 4 கடினத் தன்மை 21 3 21 3 24 - 3 14 அடர்த்தி எண் 19.3 10.5 8.94 11.37 வண்ணம் மஞ்சள் வெள்ளை வெளிறிய சாம்பல் இளஞ் நிற சிவப்பு வெள்ளை இந்த உலோகங்கள் மற்ற உலோகங்களோடு இணைந்து கலந்து காணப்படும். தங்கமும் வெள்ளி யும் தங்கமும் செம்பும் பல விகிதங்களில் தடை யின்றி இணைந்து காணப்படுகின்றன. ஆனால் வெள்ளியும் செம்பும் ஒன்றோடொன்று இணைந்து கலந்து காணப்படுவதில்லை. இவ்வகை உலோகங் களுடன் காணப்படுகிறது. பாதரசம் சேர்ந்து னெனில் தங்கம், வெள்ளி ஆகியவற்றுடன் இது அடிக்கடி கலவையாகக் காணப்படுகிறது. ஆனால் இது தனிம இயல்பு மூலமாக ஆக்சிஜனேற்றப்பட்டு மாறுதல் அற்ற பாதரசத் தாதுவாகிய சின்னபார் என்னும் கூட்டுப் பொருள்களின் மேல்புறத்தில் பனித் துளி படர்ந்தாற்போல், சில எரிமலைப்பாறைப்