356 இயல்தனிமக் கனிமங்கள்
356 இயல்தனிமக் கனிமங்கள் பகுதிகளில் காணப்படுகின்றனவே தவிர மற்ற பகுதி களில் காணப்படுவதில்லை. தங்கம். இது தெளிவான படிகங்களாகக் கிடைப் பது அரிது. அவ்வாறு கிடைத்தாலும் எண்முகப் பட்டகப்(111) படிவில் காணப்படும். சில வேளை களில் பன்னிரு முகப்புப் பட்டகமாகவோ (dodecahe- dron) (110) ஆறு எண்முகப் பட்டகமாகவோ (hexoctahedron) (311) காணப்படும். இதன் படிகங் கள் அடிக்கடி எண்முக வடிவின் அச்சின் வழி நீண்ட சாய் சதுர வடிவைப்பெற்றுக் காணப்படும். மேலும் இதன் தகடுகள் எண்முகப் வடிவப் பக்கத் திற்கு இணையாகத் தட்டையாகவும், சில வேளை களில் அதனுடைய முனைகளுக்கு 60° கோண அளவில் கிளைகளாகப் பிரிந்தும் காணப்படும்.(III) பக்கத்தை இரட்டுறல் தளமாகக் கொண்டு இவற் றின் இரட்டுறல் படிகங்கள் தேய்வுற்ற படிகங்களாகக் (skeleton crystals) காணப்படுகின்றன. இவற்றின் பக்க விளிம்புகள் கூர்மையற்று முனைமழுங்கிக் காணப்படும். மரக்கிளைகள் போல் சிம்பு அடித் தும், இழை போன்றும் (filiform), வலைப்பின்னல் போன்றும் (reticulated) உள்ள வடிவங்களில் காண லாம். இதற்குக் கனிமப்பிளவு கிடையாது. வெட்டப் பட்டதைப் போன்ற சொர சொரப்பான (hackly) கனிம முறிவைப் பெற்றது.உலோக மிளிர்வும், 2.53கடினத்தன்மையும் 15.6 முதல் 19.3 வரையிலான அடர்த்தி எண்ணும் பெற்றுக் காணப்படுகின்றது. இவற்றின் உராய்வுத் துகள்கள் பொன்போன்ற மஞ்சள் நிறமும், சில வேளைகளில் வெள்ளி போன்ற வெண்மை கலந்தும், அரிதாக ஆரஞ்சு போன்ற சிவப்பும் பெற்றிருக்கும். தங்கம் வெள்ளி யுடன் பல அறை விகிதங்களில் இணைந்து கூட்டுப் பொருளாகக் கிடைக்கின்றது. சில வேளைகளில் செம் பும், இரும்பும் சிறிதளவு கலந்து காணப்படும். ஆஸ்திரேலியாவிலுள்ள கால்கூர்லி (kalgoorli என்னுமிடத்தில் கிடைக்கும் கடற்பஞ்சு போன்ற தங்கத்தை (sponge gold) மட்டுமே தூய தங்கம் என லாம். இதில் 99.91% தங்கம் இருப்பதாகக் கணக் கிடப்பட்டுள்ளது. மற்ற வகைகளில் வெள்ளி ஓரளவு கலந்து காணப்படுகிறது. வெள்ளியின் கலப்பிற் கேற்ப அதன் அடர்த்தி எண் குறைந்தும், வண்ணம் சற்று வெளிறியும் காணப்படும். 17.6 அடர்த்தி எண் தங்கம், 9% விழுக்காடு வெள்ளியும், 14.6 அடர்த்தி எண் கொண்ட தங்கம் 38.4 விழுக்காடு வெள்ளியும் கொண்டிருப்பனவாகக் கணிக்கப்பட் டுள்ளன. இதுபோல் 16 விழுக்காடு வரை வெள்ளி யைக்கொண்டுள்ள தங்கம், சாதாரணத் தங்கம் எனப் படும். 18 விழுக்காட்டிற்கு மேல் 36 விழுக் காட்டிற்குள் வெள்ளி இருக்குமாயின் வெளிறிய மஞ்சள் நிறத்தையும், 15.5, முதல் 12,5 வரை அடர்த்தி எண்ணையும் பெற்றுக் காணப்படும் இதன் நிறத்தை வைத்து ஆம்பர் என்றும், அர்ஜென்டைனா வில் கிடைப்பதால் அர்ஜென்டிஃபெரஸ் என்றும் இவ்வகையை அழைக்கிறார்கள். ரஷ்யாவிலுள்ள யூரல் மலைத்தொடர்களில் 20% செம்புடன் கலந்து தங்கம் காணப்படுகிறது. பிரேசிலுள்ள போர்பெஸ் என்னுமிடத்தில் கிடைக்கும் தங்கம் 1 விழுக்காடு பல்லாடியம் என்னும் உலோகத்துடன் கலந்து காணப்படுவதால் அதைப் போர்பெஸைட் என்றும் கூறுகின்றார்கள். ஆஸ்திரேலியாவில் மால்டொனைட் என்றழைக்கப்படும் தங்கம், பிஸ்மத் என்னும் உலோ கத்துடன் கலந்து கறுப்புத் தங்கம் என்றழைக்கும் வகையில் நிறம் பெற்றுக் காணப்படும். இவை அல்லாது தங்கம் கிடைக்கும் உரு, தன்மை போன்ற பண்புகளிலிருந்து தங்கம் மணித்தங்கம், நூல் தங்கம், கம்பித்தங்கம். உதிரித்தங்கம், பாசித் தங்கம், மரத்தங்கம் கடுகுத்தங்கம் என்றெல்லாம் பகுக்கப்பட்டுக் காணப்படுகின்றது. இதன் நிறம், அடர்த்தி எண், கம்பிபோல் வளையும் தன்மை போன்றவை ஏனைய கனிமங்களிலிருந்து இதனைப் பிரித்துக் காட்டுகின்றன. முட்டாள்களின் தங்கம் (fools gold) என்றழைக்கப்படும் பைரைட் என்னும் கனிமத்திலிருந்து கத்தியால் அறுக்கமுடியாத பண்பி னாலும், சால்கோபைரைட் என்னும் செப்புத் தாது விலிருந்து அதுபெற்றுள்ள நொறுங்கி விழும் பண் பினாலும் தங்கத்தை வேறுப்படுத்திக் காணலாம். சிதைவுற்று மஞ்சள் நிறம் பெற்றுள்ள பையோடைட் என்னும் கனிமத்திலிருந்து அதன் குறைந்த அடர்த்தி எண், உடையும் தன்மை போன்ற பண்பினால் தங்கத்தை எளிதில் வேறுபடுத்திக் கண்டறியலாம். தங்கத்தை இராஜதிராவகத்தைத் தவிர வேறெந்த அமிலத்தினாலும் கரைக்க இயலாது. பாதரசத்துடன் இது எளிதில் கலந்து கரைசலாக மாறிவிடும். இப்பண்பையும் அதன் உயர்ந்த அடர்த்தி எண்ணை யும் பயன்படுத்தி, தங்கத்தை அது கலந்துள்ள ஏனைய உலோகம் மற்றும் கூட்டுப் பொருள்களிலிருந்து பிரித் தெடுக்க முடிகிறது. தங்கம் எல்லாவிதப் பாறைகளிலும் பரந்து காணப்படுகிறது. பெரும்பாலும் பிரித்தெடுக்கும் அளவிற்கு மெல்லிய நரம்பு போன்று பாறைகளில் ஊடுருவிக் காணப்படும். குவார்ட்சு கனிமப் பாறைக ளோடும் பலவகையான கனகனிம மணற்செறிவு களிலும் கிடைக்கின்றது. குவார்ட்சோடு காணப்படும பொழுது, மெல்லிய கம்பி, செதில், தகடு, பாசி போன்று படர்ந்தும், சில சமயங்களில் பாறைப் பிளவுகளில் குவிக்கப்பட்ட படிகக் குவியல்களாகவும் காணப்படுகிறது. இதில் படர்ந்துள்ள தங்கச் செதில்கள் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு மெல்லியவாகவும், சிறியவாகவும் இருக்கலாம். பைரைட், சால்கோபைரைட், கலீனா, ஸ்பெலரைட் அர்சீனோபைரைட் போன்ற கனிமங்களோடு அடிக் கடி தொடர்புற்றுக் காணப்படும். சிலவேளைகளில்