இயல்தனிமக் கனிமங்கள் 357
இக்கனிமங்களும் சற்று, தங்கச் செறிவு பெற்றவை யாகக் காணப்படும். சிறிதளவு தங்கத்தைத் தன்னுள் தாங்கிய நிலையில் டெட்ராடைமைட், சில்வானைட், காலாவெரைட், பெட்சைட், நாகியாகைட் போன்ற டெல்லுரியத் தாதுக்களிலும், ஸ்டாப்னைட், சின்ன பார். மேக்டைட், ஹேமடைட், தனிம இயல்புக் கனிமங்களான பிஸ்மத் அர்செனிக் போன்ற கனிமங் களிலும் காணப்படுகின்றன. குவார்ட்சு பாறைகளின் அல்லதுதாதுபடுகையின் மேற்புறத்தில் இருக்குமாயின் அவை தங்க இழைகள் செறிவிழந்து, அரிக்கப்பட்டுக் காணப்படும். ஆனால் ஆழம் செல்லச்செல்ல தங்கம் அவற்றில் நன்றாகத் திடம் பெற்றுக் காணப்படும். தங்கம் தங்கத்தாதுக்களி ஆரம்பகாலத்தில் லிருந்து பிரித்து எடுக்கப்படாமல், அம்மாதிரி பாறைகளுக்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கு களில் தங்கச் செறிவு பெற்றுக் காணப்படும் மணல், சரளைக்கல் படிவுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு வந்தது அவற்றைக் கன கனிமச் செறிவுப் பாறை கள் என்பர். அதன் அடர்வுத் தன்மை, எடை ஆகிய வற்றைக் கொண்டு, ஓடும் நீரின் பிரிக்கும் விசையைப் பயன்படுத்தி மணற்படிவுகளிலிருந்து தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு வந்தது. அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா, கலிபோர்னியா, பிரேசில், ஆஸ்தி ரேலியா போன்ற நாடுகளிலும் இம்முறை தொன்று தொட்டுப் பயன்பட்டு வந்தது. ஆனால் இன்று பெரும்பாலும் தங்கம், தங்கச்செறிவுப் பாறைத் தாதுக்களிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோல் வண்டல் படிவு களில் காணப்படும் தனி இயல்புத் தங்கம், தட்டை யாகவும், நுண்ணிய இழைகளாகவும் அது ஒட்டி யிருந்த பாறைகளிலிருந்து அது கடத்திக் கொண்டு வரும் தூரத்தைப் பொறுத்து உருவிழந்தும் காணப்படும். பல துகள்களும், இழைகளும் இவ்வாறு கடத்தப்படும்பொழுது ஒன்றிணைந்து சுருட்டப் வரைகூடக் வெட்டி பட்டுச் சீர் செய்யப்படாத கட்டிகளாகக் (nuggets ) காணப்படுவதும் உண்டு. இதுபோல் பல கட்டிகள் ஆஸ்திரேலியாவில் 190 பவுண்டு எடையுள்ளது கண்டெடுக்கப்பட்டுள்ளன. தங்கம் செறிந்த வண்டல் படிவுகளில் சிர்கான், கார்னெட்டு, கியனைட், மோனசைட், வைரம், டோபாஸ் கிரிடியோஸ்மைன், குருந்தக்கல், பிளாட்டினம் போன்ற கனிமங்களும் செறிந்து கலந்து காணப் படுவதுண்டு. இவற்றைத் தவிர, வைரம், அர்சினோ பைரைட் போன்ற சல்பைடுகள் சிதைந்து தம்முள் கொண்டுள்ள தங்கத்தை வெளிக் கொணர, தங்கம் பாறைகளிலிருந்தும் கிடைக்கிறது. தங்கம் எல்லா விதமான பாறைகளோடும் தொடர்புற்றுக் காணப் பட்டாலும் அமிலப்பாறைகளில் மிகுதியாகக் காணப் படும். எனவே தங்கம் வண்டல் மணற் செறிவுக் கனிமமாக (placer) ஊரல் மலைத்தொடர்களிலும், இயல்தனிமக் கனிமங்கள் 357 கலிபோர்னியா, தென் ஆப்பிரிக்க டிரான்ஸ்பாலி லுள்ள விட்வாட்டர்ஸ்ராண்டு, ஆஸ்திரேலியா விலுள்ள பால்லாராட் ( ballarat), டோர்னஸ் ஆற்றுப் படுகையிலும் (river torreus), இங்கிலாந்திலுள்ள கார்ன்வால்ஸ், (cornwalls), வடக்கு வேல்ஸ், சிலி பொலிவியா, யூக்வெட்டார் பகுதிகளிலும் கிடைக் கிறது. நீர் இயக்குபடிவு வரிக்கால் தாதுப்பாறை களாக (hydrothermal vein deposits) இந்தியாவி லுள்ள கோலார், அமெரிக்காவிலுள்ள நெவேடா, எல்டோரேடா, கனடாவிலுள்ள கொலம்பியா, ஒன்டேரியா. கொலம்பியாவிலுள்ள கெனகா, ஆஸ்திரேலியாவிலுள்ள வாய்கி போன்ற இடங்களில் சாணப்படுகின்றன. கூழ் நிலையில் தங்கம், நெவாடாவிலுள்ள கார்வின் என்னும் பகுதியில் களிமண் பாறைகளில் வெப்ப நீர் இயக்கத்தினால் பரவிக் கிடைப்பதைக் கண்டுள்ளனர். தங்கம் பணப்புழக்கத்தில் நாணயங்களாகவும், தொன்றுதொட்டு ஆபரணங்களுக்காகவும் பயன் பட்டு வந்துள்ளது. தங்கமுலாம் பூசுவதற்கும், தங்கப் பல் கட்டுவதற்கும் பயன்படுகிறது. அதிவேகக் கணிப் புப்பொறிகளில் பயன்படுத்தும் மின் அலை நுண் உதிரிப் பொருள்கள் செய்யவும், வெப்ப, அழுத்த ஆய்வுப் பணிகளில் பயன்படும் பொருள்களை உள்ளடக்கும் பொதி உறை (capsule) செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளி. இது பல ஆனால் படிகவகைகளிலும் மற்ற இயல்புகளிலும் தங்கத்தைப்போன்று காணப்படும். அடர்த்தி எண் இதன் தூய்மையாக இருந்தால் 10.5 என்றும் செம்பு, ஆண்டிமெனி, பிஸ்மத், பாதரசம், தங்கம், பிளாட்டினம் இவற் விழுக்காடுகளில் கலந்திருக்கும் றுடன் பல்வேறு போல் போது 10.1 முதல் 11.1 வரை மாறுபடக்கூடும். இதனைக் கண்டறிவதற்கு இதுவே முக்கிய பண்பா கும். இது எண்முக வடிவப் பக்கத்தை 111 இரட்டுறல் தளமாகக் கொண்டு கனசதுரப் படிக வடிவில் அடிக்கடி காணப்படும். தங்கம் கிடைப்பது இது இயல்பு தனிமக்கனிமமாகக் கிடைப்பதில்லை. இது முதன்மைக் கனிமமாகக் கிடைப்பினும் பெரும் பகுதி பின்உருக் (secondary) கனிமமாக வெள்ளி தாங்கிய வரிக்கால் பாறைகளின் மேல்பகுதியில் காணப்படுகிறது. இது பின் உரு நிலையில் இருக்கும் போது வெள்ளி சல்பைடுகளின் வெப்ப நீர்த் தாக்குத லினாலும் ஆக்சிஜன் சேர்க்கையினாலும் சல்பைடு களிலிருந்து பிரிக்கப்பட்டோ வெள்ளி குளோரைடு கூட்டுப் பொருளோடு உலோக சல்பைடுகள் அல்லது ஆர்செனைடுகள் தாக்குவதால் அரிப்பதால்/ மாற்று வதால் பிரிந்து, இயல்பு தனிமக் கனிமமாக உரு வற்ற திண்மக் கனிமமாகவோ, மரக்கிளைகள்போல் பிரிந்தோ, கம்பிபோன்ற வரிவடிவிலோ காணப்