உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரூடகத்‌ தாவரம்‌ 237

நூலோதி. M.S. Mani, General Entomology, Oxford and IBH Publishing Co., New Delhi, 1982; K.K. Nayar, T.N. Ananthakrishnan and B.V. David, General and Applied Entomology, Tata-McGraw- Hill Publishing Company Ltd. New Delhi, 1983. ஈரூடகத் தாவரம் நீர்த் தாவர வகையில் ஈரூடகத்தாவரங்கள் (amphi bious plants) அடங்கும். இத்தாவரங்களின் அடிப் பகுதி நீர்ப்பரப்பிற்குக் கீழும் நுனிப்பகுதி நீர்ப்பரப் பிற்கு மேலும் அமைந்திருக்கும். நீரின் அளவு குறைந் தாலும், இத்தாவரங்கள் சேற்றில் வளருபவை, அடிக் கடி நீரில் மூழ்கும் நிலப்பகுதியில் வாழும் தாவரங் களும் இவ்வகை ஈரூடகத் தாவரங்களுக்கு எடுத்துக் ஈரூடகத் தாவரம் 237 காட்டுகளாகும். குறைவான நீர் உள்ள பகுதி களிலும் ஈரூடகத்தாவரங்கள் வளர்கின்ற றன (எ.கா) ரெனன்குலஸ் அக்வாட்டிலிஸ், சஜிடேரியா சஜிட்டி ஃபோலியா, அலிஸ்மாபிளான் டேகோ. பாண்டிடேரியா. சேறு நிறைந்த நிலப்பகுதியிலும் நீர் அலைகள் உள்ள பகுதிகளிலும் இவ்வகைத் தாவ ரங்கள் வளர்கின்றன. இப்பகுதிகளில், நீர் மட்டம் நிலத்திற்கு மிக அருகில் உள்ளது. சில நேரங்களில் நிலம், நீரில் மூழ்கி இருக்கும். மற்ற நேரங்களில் நீர்மட்டம் மிகக் குறைந்து காணப்படும். எனவே, இத்தாவரங்கள் மிக விரைவில் இம்மாற்றங்களுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக் கொள்கின்றன. அதாவது இவை தம் வாழ்க்கையை நீர்த்தாவரங்கள் போன்றும் நிலத்தாவரங்கள் போன்றும் அமைத்துக் கொள் கின்றன (எ.கா) டைஃபா, பிராக்மைடிஸ் கம்யூனிஸ். காரக்ஸ், சைப்பிரஸ், ஜன்கஸ், எலயோகாரிஸ், ஈரூடகத் தாவரங்கள், நீரின் விளிம்பிலும் சேறு ரௌன்குலஸ் அக்வாட்டிலிஸ் காற்ற வெளியிலுள்ள நிலை நீர் மட்டம் ரில் மூழ்கி உள்ள இலை