உடனொளிர்வு நுண்ணோக்கி 307
வெண் கொண்ட கதிர்களை வெளியிடும். பச்சை மஞ்சள், சிவப்பு முதலிய கண்ணுக்குத் தெரியும் கதிர்களை உடனொளிர்வுக் கதிர்கள் என்றும் பொருள் மீது பட்டுக் கிளர் நிலைக்கு உயர்த்திய கதிர்களைக் கிளர்ச்சியுட்டும் கதிர்கள் என்றும் கூறுவர். புறஊதாக் கதிர்கள் ஊடுருவும் குவார்ட்ஸ் என்னும் பொருளால். இந்நுண்ணோக்கியின் ஒளி குவிப்பானும், மற்ற வில்லைகளும் செய்யப்பட்டி ருக்கும். வெள்ளிப் பூச்சு புறஊதாக் கதிரை அதிக மாக எதிர்பலிக்காது. அதனால் முன் பரப்பில் அலுமினியம் பூசிய எதிர்பலிப்பான் பயன்படுகிறது. பொருள் மிகக் குறைவாக உடனொளிர்ந்தால் ஒரே ஒரு கண்ணருகு வில்லை கொண்ட நுண்ணோக்கி யால் இருட்டறையில் ஆய்வு செய்து உருவத்தைத் தெளிவாகக் காண முடியும். பொருள் அதிகமாக உடனொளிர்ந்தால் இரு கண்ணருகு வில்லைகள் கொண்ட நுண்ணோக்கியைப் பயன்படுத்தலாம். இதில் கதிர்கள் படும் அனைத்துப் பரப்புகளிலும் ஒளியிழப்பைத் தவிர்க்கும் பூச்சு இருக்கும். 8 மி.மீ. குவியதூரமும் இருபது மடங்கு உருப்பெருக்கமும் கொண்ட பொருளருகு வில்லை மிகவும் சிறந்தது. 1.4 எண் கொண்ட குவிப்பான்கள் ஏற்றவை. நிறப் பிரிகையற்ற கூட்டு வில்லைகளில் உள்ள பசைகள் உடனொளிர்வதால் இவற்றைத் தவிர்க்க வேண்டும். உடனொளிர்வுக் கதிர்களால் உண்டான உருவத்தைக் கிளர்ச்சிக் கதிர்கள் தாக்காத வகையில் பொருளுக் கும் உருவத்திற்கும் இடையில் இவற்றை உட்கவரும் வடிப்பான்கள் உள்ளன. பல்லுறுப்பு கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு கள், அல்புமின் போன்ற பொருள்கள் இயற்கை யாக உடனொளிர்கின்றன. இது முதல்வகை உடனொளிர்வு எனப்படும். மற்ற பொருள்கள் இயற்கையாக ஒளிரா. ஆனால் இவற்றை உட னொளிரும் சாயங்களுடன் இணைத்து ஒளிரச் செய்ய லாம். இது இரண்டாம் வகை உடனொளிர்வு எனப்படும். ஃபுளுரசின், பெர்பெரின் சல்பேட், ஆராமின், மொரின் போன் றவை உடனொளிரும் சாயங்களாகும். இவை புறஊதாக் கிளர்ச்சிக் கதி ரால் பாதிக்கப்படுவதால் உடனொளிர்வு நுண் ணோக்கியில் இவற்றை அதிக நேரம் பயன்படுத்த முடியாது. வில்லைகளை இணைக்கும் பசை, சூழ்ந் துள்ள எண்ணெய் முதலியவை புறஊதாக் கதிரில் உடனொளிர்வதால் இந்நுண்ணோக்கியில் இருண்ட பின்னணியில் உருவத்தை மிகத் தெளிவாகப் பெற முடியாது.நீலக் கதிரைக் கிளர்ச்சிக் கதிராகப் பயன்படுத்தும் நுண்ணோக்கியில் இக்குறைபாடுகள் இல்லையெனினும் உமிழப்படும் ஒளிர்வு குறைவாக இருப்பதால் நீலக் கதிரைத் தடுக்கும் மஞ்சள் நிற வடிப்பான்களைப் பயன்படுத்த வேண்டும். இவை பச்சை நிற உடனொளிர்வுக் கதிர்களையும் ஓரளவு அ.க. 5-20அ உடனொளிர்வு நுண்ணோக்கி 307 தடுத்து விடுவதால் உருவம் குறையுடையதாக இருக் கும். உடனொளிர்வு நுண்ணோக்கியில் பொருளி லிருந்து ஊடுருவி வரும் ஒளியில் வெளிச்சமுள்ள பின்னணியிலும் இருண்ட பின்னணியிலும் உரு வத்தை உண்டாக்கலாம். வெளிச்சமுள்ள பின்னணி யில் ஒளியிழப்பு மிகக் குறைவு. அதனால் மிகக் குறைவாக உடனொளிரும் பொருள்களுக்கு இம் முறை சிறந்தது. ஆனால், உருவத்தை நோக்கி வரும் புற ஊதாக் கதிர்களைத் தடுக்க நல்ல வடிப் பான்கள் தேவை. இவை இல்லாவிடில் கண்கள் தாக்கப்படும். ஒளிப்படங்கள் தெளிவாக இரா. இவ்வகை நுண்ணோக்கியிலுள்ள கட்டுமானப் பொருள்களும், வடிப்பான்களும் உடனொளிர் வற்றவையாக இருக்கவேண்டும். ஒளி குவிப்பானின் அமைப்பை மாற்றி வெளிச்சமுள்ள பின்னணியிலி ருந்து இருண்ட பின்னணிக்குச் செல்ல முடியும். கிளர்ச்சிக் கதிர் பொருளருகு வில்லை வழியாகச் செல்லாதவாறு இருண்ட பின்னணிக்குரிய ஒளி குவிப் பான் தடுக்கிறது. இருண்ட நுண்துளை பொருளருகு வில்லையின் முகப்பரப்பை விடப் பெரியதாக இருப்ப தால் இது இயல்கிறது. கிளர்வூட்டும் கதிரைத் தடுக் கும் வடிப்பான் இவ்வமைப்பில் அத்துணை முக்கிய மில்லை. இந்த வடிப்பான் இல்லாதிருந்தாலும் கண் கள் அதிகமாகத் தாக்கப்படா. பொருளருகு வில்லை யின் உடனொளிர்வும் இவ்வமைப்பில் தென்படாது. இதனால் புளூரைட் பொருளருகு வில்லைகளைப் பயன்படுத்தலாம். ஒரே சமயத்தில் பொருளின் மீது உடனொளிரத் தூண்டும் கதிர்களையும் (புற ஊதா), உடனொளிரத் தூண்டாக் கதிர்களையும் (வெண் ணிற ஒளி) விழச் செய்து இருண்ட பின்னணியில் அப்பொருளின் உடனொளிர்வு உருவத்தையும், உட னொளிரா உருவத்தையும் ஒரே சமயத்தில் காண முடியும். இருண்ட பின்னணி அமைப்பில் ஒளி இழப்பு அதிகமாதலால் அதிகமாக ஒளிரும் பொருள் களுக்குத்தான் இது ஏற்றதாகும். . நூலிழை போன்ற சில பொருள்கள் உடனொளி ரும் போது முனைவாக்கப்பட்ட ஒளியை உமிழ் கின்றன. இப்பொருள்களின் அமைப்பை ஆராய் வதற்கு முனைவாக்கப்பட்ட ஒளியில் உருவத்தை உண்டாக்கும் உடனொளிர்வு நுண்ணோக்கி பெரிதும் உதவுகிறது. பாறைகள், தாதுப்படிவங்கள் போன்ற ஒளிபுகாப் பொருள்களை ஆராய்வதற்கு இப்பொருள் களில் எதிர்பலிக்கும் உடனொளிர்வு ஒளியில் உருவத்தை உண்டாக்கும் நுண்ணோக்கி உதவு கிறது. இவ்வகை நுண்ணோக்கியிலும் வெளிச்சமுள்ள பின்னணியிலும் இருண்டபின்னணியிலும் உருவத்தை உண்டாக்கலாம். கிளர்ச்சிக் கதிரைக் குறைவாக ஊடுருவச் செய்யும் ஒளிக்கசிவுப் பொருள்களையும்,