உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 உப்புநீர்த்‌ தாவரம்‌

406 உப்புநீர்த் தாவரம் நீரின் மின்கடத்தல் நிலையை அறிந்து, கடல் நீரின் உப்புத்திறனைக் கண்டுபிடிக்க முடியும். ஏனெனில் கடல் நீரின் அடர்த்தி மின்கடத்தல் தன்மை ஆகியவை அவற்றின் உப்புத் தன்மையைப் பொறுத்தே அமை கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மீன்வளத்திற் கும் கடல் நீருக்கும் நெருங்கிய தொடர்புள்ள உப்புத்திறன் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற் கொள்ள வேண்டும். உப்புநீர்த் தாவரம் இரா. சந்தானம் சில கடற்கரை, கடற்கரையோரங்களில் உள்ள உப்பு ஏரி உப்பு ஊற்று, உப்பங்கழி முதலியவற்றில் தாவரங்கள் வாழ்கின்றன. காலநிலை மாறுதல்களால் பாதிக்கப்படாத குறிப்பிட்ட வகைத் தாவரங்களே இச்சூழலில் காணப்படுகின்றன. இத்தாவரங்களில் காணப்படும் மாலிக் அமிலம் குளோரைடு போன்ற உப்புகளைக் கரைக்க உதவுகின்றது. இத்தாவரங் களின் செல்களில் சவ்வூடு பரவு அழுத்தம் மிக அதிகமாக இருக்கிறது. உப்புச் செறிந்த பகுதிகளில் வளர்வதால், இத் தாவரங்களில் புற, அகச் செயலியல் தகவமைவுகள் காணப்படுகின்றன. வாழ்விடங்களில் உப்புகளின் அளவு அதிகமாக இருப்பதால், நிலத்தில் நீரிருந்தும் அந்நீரைத் தாவரங்கள் உறிஞ்ச முடியாத செயலியல் வறட்சி காணப்படுகிறது. எனவே வறட்சியை எதிர்க் கவும், தவிர்க்கவும், வறண்ட நிலத்தாவரங்களில் காணப்படும் தகவமைவுகள் இத்தாவரங்களி லும் காணப்படுகின்றன. பெரும்பாலான தாவரங்கள் சதைப்பற்றுடனும், ஒளி ஊடுருவும் தன்மையுடனும் உள்ளன. இத்தாவரங்களின் செல்களில் மிகுதியான செல் சாறும், குறைவான பச்சையமும் சிறிய செல் இடைவெளிப் பகுதிகளும் காணப்படுகின்றன. பெரும் பாலும் இலைகள் உருளையாகவும், அவற்றின் புறப் தூவிகளுடனும் ஸ்வேடா பகுதி சாலிக்கோர்னியா போன்ற செடிகளில் தண்டு சதைப் இலைகள் பற்றுடையதாகவும், சிறியனவாகவும் காணப்படுகின்றன. காணப்படும். ஈர்உருவ இலைகள்: கடற்கரை யோரங்களில் வளரும் தாவரங்களில் சாறுள்ள தடித்த இலைகள் காணப்படுகின்றன. உள்நாட்டில் வளரும் தாவரங் களில் ஈர் உருவ இலைகள் அமைந்துள்ளன. லோட்டஸ், கார்னி குலேட்டஸ், கன்வால்வுலஸ் அர்வென்சிஸ், மெட்ரிகேரியா இனோடோரா, சோலேனம் டல் கேமரா, கேகைல் மாரிடிமா, சாலிக்கோர்னியா ஹெர் பேசியா கா ராக்லியேரியா அஃபிசினேலிஸ், பிளான் டாகோமேஜர் போன்ற தாவரங்களில் இத்தகைய தகவமைவுகளைக் காணலாம். கூழ்ச் செல்கள். வறண்ட நிலத் தாவரங்களைப் போல் இத்தாவரங்களிலும் கூழ்ச் செல்கள் காணப் படுகின்றன. ஸ்பைனிஃபிக்ஸ் சொனேரேஷியா, ஸ்னோரோசஸ் ஆகியவற்றில் கூழ்ச் செல்களைத் தவிர புறத்தோலை அடுத்து, நீர்த்திசுவும் காணப் படுகிறது. செல்சாற்றில் உப்புகள் அதிகம் கலந்துள்ள மையால் அதன் செறிவு வெளியில் உள்ள மண்ணில் காணும் கரைபொருள்களைவிட அதிகமானது. செல்சாறும் அதிகமாகக் காணப்படும். இவற்றில் இலைகளில் வேலிக்கால்திசு (palisade tissue) அதிக மாக இருப்பதால் இலைகள் தடித்துக் காணப்படும். எ.கா: பேரிங்ட்டோனியா. உப்புநீர்த் தாவரங்களின் சாற்றுத் திரள்களில் (tracheids) நீர் சேமிக்கப்படு கிறது. சாலிக்கோர்னியா போன்ற தாவரங்களில் பாரன்கைமா செல்களில் நீர் சேமிக்கப்படுகிறது. உப்பு நீர்த் தாவரங்களை அவை வாழும் இடங் களைப் பொறுத்துப் பல வகைகளாகப் பிரிக்கலாம். பாறைகளில் வளரும் தாவரங்கள். கடலுக்கருகில் உள்ள பாறைகளில் பாசிகள், லைக்கன்கள் மாஸ் போன்ற தாவரங்களும், பீடா மாரிடிமா, கிரித்மம் மாரிடியா போன்ற சதைப் பற்றுடைய தாவரங் களும் காணப்படுகின்றன. மணலில் வளரும் தாவரம். மணலின் தன்மையை யும் ஈரத்தையும் பொறுத்துச் சில நீலப் பச்சைப் பாசி, காரா போன்ற பச்சைப் பாசி இனங்கள் வளர் கின்றன. உவர் புல்வெளி. இங்கு நிலம் வறண்டிருக்கும்; இதில் சாலிக்கோர்னியா ஹெர்பேசியா, அட்ரிப் ளெக்ஸ், கிளாக்ஸ் மாரிடிமா. ஸ்பெர்குலேரியா மெரைனா போன்ற தாவரங்கள் வளர்கின்றன. உவர்ப்புதர் நிலம். மண்ணும், களிமண்ணும் உள்ள உவர்ப்புதர் நிலத்தில் அடர்ந்த கருநீலநிற மான தாவரக் கூட்டம் காணப்படுகிறது. இங்கு ஐந்து அடி உயரமுள்ள புதர்ச்செடிகளான சாலிக் கோர்னியா ஃபுருடிகோசா, அட்ரிப்ளெக்ஸ் போர்ட் லாக்காய்டஸ், ஸ்டேடிஸ் லிமோனியம் போன்ற வெளி தாவரங்கள் காணப்படுகின்றன. வெப்ப உவர் ஏரிகளின் கரைகளில் அனாபெசிஸ் ஹாலோக் சைலான் ஸ்பைரோஸ்டேகிஸ், பிரேகிலெப்பிஸ் போன்ற தாவரங்கள் வளர்கின் றன. உவர்ச் சதுப்பும் உவர்ப் பாலையும். வட ஐரோப் பாவின் பல் கடற்கரை மண்டலங்களில் மணல் திட்டுகள் காணப்படுகின்றன. இங்கு நீர் அமைதி யாக உள்ளது; இவ்விடங்களில் உப்புச் சகிப்புத் தன்மை கொண்ட உயரமான பல்பருவக் குறுஞ் செடிகளாகிய பிராக்மைடிஸ் கம்யூனிஸ் வளர்கின்றன. இத்தாவரங்கள் நீண்ட படர் கிழங்குகளைப் பெற்றி ருக்கின்றன. தமிழகத்தில் எண்ணூரிலும், தூத்துக்