உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உப்பு நீக்கம்‌ 407

கம் குடியிலும் இவ்வகையான தாவரத் தொகுதிகள் காணப்படுகின்றன. கடற்கரையோரங்களில் மண் அடிப்பகுதியான அசைவற்ற நீருடைய இடங்களில் உப்பைச் சகித்துக் கொண்டு பிராக்மைடிஸ் யூனிஸ், ஸ்கிர்ப்ஸ் மாரிடி மஸ், ஸ்வேடா, சாலிக்கோர் னியா போன்ற பல்லாண்டு வளர் செடிகள் வாழ் கின்றன. சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் உப்புப் பகுதிகளில் உப்புப் படிவங்கள் மண்ணில் காணப்படும். வெப்ப நிலையும் மிக அதிகமாக இருக்கும். இப்பகுதியில் செசூவியம் போர்டலக்காஸ் ட்ரம் என்னும் தாவரம் அதிக அளவில் காணப்படு கிறது. இத்தாவரம் அதிக வெப்பத்தையும் உப்புச் சத்தைத் தாங்கும் தன்மையும் உடையது. இத் தாவரத்தின் தண்டும், இலையும் சதைப்பற்றுட னிருக்கும்; இதன் கிளைகள் படுக்கை மட்டத்தில் வளரும்; இலைகளிலும் தண்டிலும் ஆந்தோசயனின் என்ற நிறமி காணப்படுகிறது; இலைகள் வட்ட மாகவோ, நீள்வட்டமாகவோ காணப்படும்; மேலும் சாலிக்கோர்னியா, அஜ்னியா ஆர்த்ராக்னீமம் போன்ற தாவரங்களும் காணப்படுகின்றன. இத் தாவரங்கள் யாவும் சதைப்பற்றுடையவை; சாலிக் கோர்னியாவிலும், ஆர்த்ராக்னீமத்திலும் தண்டு பல இணைப்புகளுடன் காணப்படும். இவற்றில் இலைகள் தவிர லானியாவும் ஐபோமியா பைலோ பாவும் காணப்படுகின்றன. இராமேஸ்வரத்தில் காணப்படும் லானியாவுடன் ஒட்டுண்ணி காசித்தாவும் வளரும். லானியா குறைந்த உப்புள்ள பகுதிகளில் வாழ்வதால் இது ஆங்காங்கே சிதறிக் காணப்படாமல் கூட்டம். கூட்டமாகக் காணப்படுகிறது. நா.வெங்கடேசன் நூலோதி.கே.ஆர். பாலச்சந்திர கணேசன், சூழ் நிலையியல், தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம், சென்னை, 1976; கே. இராஜசேகரன், சூட்டுச் சூழ் நிலையியலும், தாவரப் புவியியலும், தமிழ் நாட்டுப் பாட நூல் நிறுவனம், சென்னை, 1974, பெரியசாமி. தாவரச் சூழ்நிலையியல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை,1970. உப்பு நீக்கம் கடல் நீர் அல்லது உப்பங்கழி நீரிலிருந்து தூய நீர் தயாரிக்கும் முறைக்கு உப்பு நீக்கம் ( desalination) என்று பெயர். இம் முறையால் பெறப்படும் நீர் மனித, விலங்கின உயிர் வாழ்க்கைக்கு ஏற்றதாகவும், பயிர்த் தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவும் நீர்ப் உப்பு நீக்கம் 407 பாசனத்துக்கு ஏற்றதாகவும், தொழில் முறைகளுக்குப் பயன்படும் வகையிலும் இருத்தல் வேண்டும். உப்பங் கழி நீரில் ஒரு லிட்டருக்கு, குறைந்தது ஒரு கிராம் அளவுக்கேனும் தாதுப் பொருள்கள் கரைந்திருக்கும். வேறு அலகில் குறிப்பிட்டால் பத்து லட்சம் பங்கு நீரில் ஆயிரம் பங்கு உப்பு கரைந்திருப்பதாகவும் இதைக் கொள்ளலாம்; அதாவது 1000 பத்து லட்சப் பங்கு ப ல. ப . (parts per million, ppm) என இதைக் கூறலாம். ஆனால் கடல் நீரில் இதைப்போல 35 மடங்கு மிகையான அளவில் தாதுப் பொருள்கள் கரைந்திருக்கும். பொதுவாக, குடிநீரில் உப்பின் அளவு 500 ப.ல.ப ஆகவும், பாசன நீரில் 1200 ப.ல.ப. அளவை மிகா மலும், விலங்கினங்களுக்கு 1200 ப.ல.ப. வரை தேவையான அளவிலும் இருத்தல் வேண்டும். தொழில் முறைகளில் இந்த அளவு பயன்பாட்டிற்கேற்ப மாறு படும். கொதிகலன்களில் பயன்படும் நீரில்தான் உப்பின் அளவு மிகக் குறைவாக இருத்தல் வேண்டும். (அதாவது 1 ப.லப.); ஆனால் கழுவும் பணிகளில் இந்த அளவு 35000 ப.ல.ப. இருக்கலாம். தூய நீரைத் தயாரிக்க வெப்ப ஆற்றல், பாய்ம அழுத்த ஆற்றல், மின் ஆற்றல் போன்ற ஆற்றல் களைக் கொண்டு பின்வரும் முறைகள் பயன்படு கின்றன. சூரிய வெப்பம் கொண்டு காய்ச்சி வடிக்கும் முறை, எதிர்வழிச் சவ்வூடு பரவல் முறை, மின்வழிச் சவ்வூடு பிரிப்பு முறை, பிற முறைகள். சூரிய வெப்பம் கொண்டு காய்ச்சி வடிக்கும் முறை. இம் முறையில் உப்பு நீரை ஆவியாக்கிக் குளிர்வித்து நன்னீரைப் பெறலாம். சூரியனின் வெப்பத்தைக் கொண்டு காய்ச்சி வடிக்கும் (solar distillation) தொழில் திறனுக்கு வேறு எந்த முதலீடும் இன்றிச் சூரிய ஆற்றலை மட்டும் பயன்படுத்தினாலே போதும். ஆவி வடித்தலில் சூரிய வெப்பத்தைப் பயன் படுத்துவது சிக்கனமானது. தடையற்ற சூரிய வெப்பம் கிடைக்க வாய்ப்பிருப்பின் ஓர் ஏக்கர் அளவுக்கு அமைந்துள்ள கருவிகளைக் கொண்டு 5000 காலன் நன்னீர் பெறவியலும். இதில் ஏனைய சூரியத் தொட்டிகளைவிடப் படுகை வகைச் சூரியத் தொட்டி எளிதாகவும், பரவலாகவும் பயன்படும் வகையில் உள்ளது. படுகை வகைச் சூரியத் தொட்டியில் சூரிய ஆற்ற லின் ஒரு பகுதி இயற்கை நீரியல் சுழற்சியால் பெரு மளவு நீரை ஆவியாக்கிக் குளிர்ந்த இடத்திற்குக் கொண்டு சென்று மழையாகவோ, பனியாகவோ மாற்றுவதற்குப் பயன்படுகிறது. இவ்வகைச் சூரியத் தொட்டியின் (basin type solar still) அடிப்பகுதி கறுப்பு நிறம் பூசப்பட்டு 5 செ. மீ உயரம் வரை உப்பு நீரைக் கொண்டதாகவும் ஒளி ஊடுருவும் வகையில் கண்ணாடியாலோ, பிளாஸ்டிக் உறையினாலோ