உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 உயர்‌ அழுத்த இயற்பியல்‌

4/8 உயர் அழுத்த இயற்பியல் குறையும், BC பகுதி பரும அச்சுக்கு இணையாக நிலையில் பருமன் உள்ளது. அழுத்தம் மாறாத விரைந்துகுறைவதை இது காட்டுகிறது. இந்நிலையில் வளிமம் நீர்மமாகிக் கொண்டிருக்கிறது. B புள்ளி பொருள் முழுதும் தெவிட்டிய ஆவிநிலையில் இருப் பதையும்,C புள்ளி பொருள் முழுதும் ஏறக்குறைய நீர்மமாகி விட்ட நிலையில் இருப்பதையும் குறிக்கின் றன. CD பகுதி ஏறத்தாழ அழுத்த அச்சுக்கு இணையாக உள்ளது. நீர்மத்தின் அழுத்தம் எவ்வளவு உயர்ந்தாலும் பருமனில் மிகச் சிறிய குறைவே ஏற்படுவதை இது காட்டுகிறது. 13.1 - 31.1°செ வெப்ப நிலைகளுக்கு இடையில் வரையப்படும் சம வெப்ப நிலைக்கோடு கள் அனைத்தும் இதே வடிவத்தில் இருக்கும். ஆனால் வெப்பநிலை மிகையானால் வரைகோட்டின் கிடைப் பகுதி சிறிது சிறிதாகக்குறைந்து 31.1°செஇல் மறைந்து விடுகிறது. அந்த நிலையில் வளிமத்திலிருந்து நீர்மத் தைப் பிரித்துணர முடியாதவாறு அவற்றின் பண்பு கள் ஏறக்குறைய ஒன்றாகி விடுகின்றன. இந்த வெப்பநிலையே மாறுதான வெப்பநிலை ஆகும். வளிமம் மாறுதான் வெப்பநிலையை விட மிகு போது வெப்பநிலையிலிருக்கும் அதன் மேல் எவ்வளவு உயர்ந்த அழுத்தத்தைச் செலுத்தினாலும் வளிமம் நீர்மமாகாது. ஒவ்வொரு வளிமத்துக்கும் வெப்பநிலையுண்டு. ஒரு குறிப்பிட்ட மாறுதான மாறுதான வெப்ப நிலையை விடக் குறைந்த வெப்ப நிலையிலிருக்கும் அனைத்து வளிமங்களையும் அழுத் தத்தைச் செலுத்தி ஆவியாக்கலாம். மாறுதான வெப்ப நிலையை விடக் குறைந்த வெப்ப நிலையி வளிமங்கள் எனப்படுகின்றன. லுள்ள ஆவிகள் பொருள் அதன் மாறுதான வெப்பநிலையை விட அதிகமான வெப்பநிலையிலிருக்கும்போது அதன் நீர்ம, வளிம நிலைகளுக்கிடையே பண்பு வேறுபாடு களைக் காண முடியாது. வெவ்வேறு வளிமங்கள் தம் மாறுதான வெப்பநிலையிலிருந்து சம அளவில் விலகியிருக்கும்போது ஒரே மாதிரியாகச் செயல்படும். கே.என். இராமச்சந்திரன் உயர் அழுத்த இயற்பியல் பொருள்களின் பண்புகளில் உயர்ந்த அழுத்தங்களின் விளைவுகளை விவரிப்பது காரணமாக ஏற்படும் உயர் அழுத்த இயற்பியல் ஆகும். பொருள்களின் பெரும்பாலான பண்புகள் அழுத்தம் காரணமாக மாற்றியமைக்கப்படுவதால் உயர் அழுத்த இயற்பியல், இயற்பியலின் அனைத்துப் பிரிவுகளிலும் பெறுகிறது. உயர் அழுத்தங்களை உண்டாக்குவதற் கும், உயர் அழுத்தங்களில் ஒரு பொருளின் இயற்பியல் பங்கு பண்புகளில் ஏற்படும் மாற்றங்களை அளவிடுவதற் கும் சிறப்புத் தன்மையான, பலசமயங்களில் திறமை தேவைப்படுகிற தொழில் நுட்ப உத்திகளைப் பயன் படுத்த வேண்டிய காரணத்தால் உயர் அழுத்த இயற்பியலை ஒரு தனித் துறையாக வகைப்படுத்துவ தும் தேவையாகிறது. இது உயர் இது உயர் வெப்பநிலை இயற்பியல், தாழ் வெப்பநிலை இயற்பியல் ஆகிய வற்றை ஒத்ததேயாகும். உயர் அழுத்த இயற்பியல் ஆய்வுகள் தனிச்சுழி வெப்பநிலையிலும், 5000 செ போன்ற உயர் வெப்பநிலைகளிலும் கூட நிகழ்த்தப் படும். ஓர் அலகுப் பரப்பில் செயல்படும் விசை, அழுத்தம் எனப்படும். அழுத்தத்தை பவுண்டு / சதுர அங்குலம், சென்ட்டிமீட்டர், வளி அழுத்தம், பார், பாஸ்கல் அல்லது நியூட்டன்/சதுர மீட்டர் போன்ற வகை அலகுகள் உள்ளன. பார் என்பது பத்து லட்சம் டைன் / சதுர சென்டிமீட்டருக்கு அல்லது ஏறத்தாழ 14.5 பவுண்டு/சதுர அங்குலத்திற்குச் சமம். அது வளி அழுத்தத்தை விடச் சற்றே குறைவானது. பெரும்பாலான ஆய்வாளர்கள் அதையே அடிப்படை அலகாகப் பயன்படுத்துகின்றனர். அனைத்து நாட்டு அளவீட்டு முறையில் (SI units) பாஸ்கல் 10- பார் என்பதே அறிந்தேற்புப் பெற்ற அலகாகும். அளவிட கிலோகிராம்/சதுர பல வரை உயர் அழுத்த இயற்பியலில் அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க ஆய்வு முறைகளில் சிக்கல்களும் அதிகரிக் கின்றன. ஆய்வு முறைகளிலுள்ள இடையூறுகளின் அளவைப் பொறுத்தே ஒரு குறிப்பிட்ட அழுத்தம் உயர் என்ற அடைமொழிக்கு உரித்தாகிறது. நீர்ம ஹீலிய வெப்ப நிலைகளில் ஆயிரம் பார்களே உயர் அழுத்தம் எனப்படும். ஆனாலும் பொதுவாக ஒரு கிலோ பாருக்கு மேற்பட்ட அழுத்தங்களையெல்லாம் உயர் அழுத்தங்கள் எனலாம். சில வகைக் கருவிகளில் அறை வெப்பநிலையில் ஐந்நூறு கிலோ பார் நீடித்த நிலையான உயர் அழுத்தம் உண்டாக்கப்படு கிறது. ஆனால் ஆய்வுப் பொருள்கள் ஏறத்தாழ ஐம்பது மைக்ரோ கிராம் அளவில் நிறையுள்ளவை யாகவே இருக்கும். எக்ஸ் கதிர் விளிம்பு விலகல் மூலமாகவோ, மின் தடை அளவீடுகள் மூலமாகவோ ஆய்வுப் பொருள்களை ஆராயப் பயன்படும் காட்சிப் பதிவு உத்திகள் சிறிய பொருள்களை ஆய்வதற்கு மிகவும் ஏற்றவை. அழுத்தம் செலுத்தப்படும்போதே. 1000-2000°செ வரை நீடித்த வெப்பநிலைகளை யும் ஏற்படுத்த வேண்டியிருக்கும் நிகழ்வுகளில், உண் டாக்கக்கூடிய நீடித்த நிலையழுத்தத்தின் மேல்வரம்பு இருநூறு கிலோபர்களாகக் குறைந்து விடுகிறது. காந்த ஒத்ததிர்வு ஆய்வுகளுக்குத் தேவைப்படும் காந்தத் தன்மையில்லாத கொள்கலன்கள் போன்ற கூடுதலான ஆய்வுத் தேவை ஏற்படும்போது இந்த மேல் வரம்பு மேலும் குறைகிறது. பெரும் வெடிப்புகளாலும், ஏவுகணைத் தாக்கு தல் மோதல்களினாலும் உண்டாக்கப்படும் அதிர்ச்சி