உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்த்தி 427

துகள்கள் மோதிக் கொள்ளும். ஒரு பகுதியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆய்வுகளை ஒரே சமயத்தில் செய்ய முடியும். ஓர் அளவு வினை நிகழப் போதுமான செறிவுள்ள துகள் ஓட்டங் களையும் அடர்த்திகளையும் பெறுவதே புரோட்டான் சேமிப்பு வளையங்களை அமைப்பதில் உள்ள பெரிய தொழில் நுட்பச் சிக்கல் ஆகும். மோது சுற்றை அமைப்புகளின் செயல் திறன், ஒளித்திறன் (lumino- sity) என்ற அளவால் அளக்கப்படுகிறது. L = R ச 2 N, N, f Ab இங்கு R என்பது ஒரு நொடியில் நிகழும் இடை வினைகளின் எண்ணிக்கை; Nr. N, என்பவை இரு கற்றைகளிலும் உள்ள துகள்களின் எண்ணிக்கை; A என்பது மோதல் நிகழ்கிற இடத்தில் கற்றையின் குறுக்குப் பரப்பு; f என்பது ஒரு நொடியில் துகள் கள் இடுகிற வட்டங்களின் எண்ணிக்கை; b என்பது ஒவ்வொரு கற்றையிலும் உள்ள கொத்துகளின் எண்ணிக்கை; எனவே ஒரு நொடியில் துகள்கள் இடுகிற வட்டங்களின் எண்ணிக்கை; ஒரு நொடி யில் நிகழும் இடைவினைகளின் எண்ணிக்கைR=Lo. மாதிரிக் கருவிகளில் L க்கு 1029 - 1032/சென்ட்டி மீட்டர்20 நொடி வரையான மதிப்புகள் கிடைத் திருக்கின்றன. தொழில் நுட்பக் காரணங்களாலும் பொருளாதாரக் காரணங்களாலும் ஓரளவுக்கு மேல் துகள் ஓட்ட அளவை அதிகரிக்க முடிவதில்லை. சுற்றைகளின் அகலத்தையும் அவை குறுக்கிட்டுக் கொள்ளும் கோணத்தையும் குறைப்பதன் மூலம் ஒளி விளக்கத்தை அதிகரிக்கலாம். கற்றைகள் குறுக் கிட்டுக் கொள்ளும் பகுதியில் அவற்றை வளைக்கவும் குவிக்கவும் சிறப்பு வகையான காந்தங்களை அமைப் பதன் மூலம் இது செய்யப்படுகிறது. மிகு கடத்து திறனுள்ள காந்தங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உயர்ந்த அளவு வலுவுள்ள காந்தப் புலங்களை உண்டாக்க முடியும். அதே சமயத்தில் வளையங் களின் விட்டங்களையும் குறைக்கலாம். பல நூறு கிகா எலக்ட்ரான் வோல்ட் ஆற்றல் களில் துகள் இடைவினைகளைப் பற்றி ஆய்வு செய்யப் புரோட்டான்-புரோட்டான் மோது கற்றைச் சேமிப்பு வளையங்கள் மட்டுமே உதவ முடியும். கே.என். இராமச்சந்திரன் உயர்த்தி ஒரே சமயத்தில் பலரைக் கீழிருந்து உயரமான இடத்துக்குக் கொண்டு செல்ல உயர்த்திகள் (escala tors) பயன்படுகின்றன. இவற்றை நகரும் அல்லது உயர்த்தி 427 தானியங்கும் மாடிப்படிகள் என்றும் குறிப்பிடலாம். இவற்றில் நகரக்கூடிய படிகள் பொருத்தப்பட்டு இருக்கும். இவை ஒரு சங்கிலி அல்லது பல சங்கிலி களால் கண்ணிப்புற்சக்கரம் (sprocket wheel) மூலம் மேலும் கீழுமாக இணைக்கப்பட்டிருக்கும். மேலே உள்ள கண்ணிப்பற்சக்கரம் வழியாக ஒரு மின் இயக்கி இணைக்கப்பட்டு ணைக்கப்பட்டு இருக்கும். இக் கருவி வாயிலாக மாடிப் படிகள் மேலே நகர் வதற்குத் தேவையான சுழல் ஆற்றல் கிடைக்கும். மேலும் இப்படிகள் ஓசையின்றியும், உராய்வு விசையுடனும் இயங்கத்தக்கவாறு சாய் தளத்தின் வாயிலாக உருளிகள் (rollers) அமைக்கப் பட்டு இருக்கும். இம்மொத்த அமைப்பையும் தாங்க வல்ல ஓர் இரும்புக் கோர்வு உத்திரமும் (truss பொருத்தப்பட்டிருக்கும். பக்கவாட்டில் தடுப்புச் சுவர் போன்ற ஓர் அமைப்பும் கைப்பிடியும் அமைந்து இருக்கும். பொதுவாகச் சாய்தளத்தின் கோண 'ணம் 30* அளவில் இருக்கவேண்டும். குறைவான 1921 இல் ஓட்டிஸ் நிறுவனம் வணிக முறையில் தன் முதல் உயர்த்தியை வெற்றிகரமாக இயக்கிக் காட்டியது. பின்னர் 1932 - 33 இல் வெஸ்ட்டிங் ஹவுஸ் மின்சார உயர்த்தி நிறுவனம் மின்சாரத்தால் இயங்கவல்ல உயர்த்திகளை வெற்றிகரமாக இயக் கிக் காட்டியது. இவ்வகை உயர்த்தியில் உலோகத் தகடுகள் பக்க வாட்டில் சூழ் அடைப்பாகப் பயன் பட்டன. பின்னர் உருவாக்கப்பட்ட உயர்த்திகளில் கீழ் வரும் பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டன. படிகள் ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் இயங்க நேர்ந்தால் மிகு லேகத்தை கட்டுப்படுத்தக் கூடிய கருவி, படிகள் இயங்காவண்ணம் நிறுத்தி விடும். எக்காரணத்தாலோ சங்கிலி அறுந்துபோக நேர்ந்தால் மாடிப்படிகளை அதே இடத்தில நிறுத்தி வைக்கவும் ஒரு கருவி அமைக்கப்பட்டு இருக்கும். உயர்த்திகள் 80 செ.மீ. 120 செ.மீ. ஆகிய இரு அளவுகளில் உருவாக்கப்படுகின்றன. இந்த அளவு, இரு கைப்பிடிகளுக்கும் இடையிலுள்ள படிகளின் அகலத்தைக் குறிக்கும். 80 செ.மீ. (32") 120 செ.மீ. (48") படிகள், மணிக்கு 1620 மீ வேகத்திலும், 2160 மீ வேகத்திலும் இயங்கக் கூடியவையாக அமைக்கப்பட்டிருக்கும். மேலும் உயர்த்திகள் மணிக்கு ஐயாயிரம் பேர் வீதமும் எட்டாயிரம் பேர் வீதமும் பயன்படுத்தக்கூடிய வகையில் இரு பிரிவு களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மிகுதியான பாது காப்பு வேண்டி உயர்த்திகளில் சில பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கும். உயர்த்தி உருவாக்கப் பயன்படும் பொருள்கள் தீப் பிடிக்காலண்ணம் தேர்ந்தெடுக்கப்படும். இதற்கு களை