428 உயர்த்தி-விமான வகை
428 உயர்த்தி-விமான வகை அவசர நிறுத்திப்பொத்தான்கள் அல்லது அழுத்திகள் பொருத்தப்பட்டு இருக்கும். உயர்த்திகளை இயக்க ஒரு சாவி வடிவமைக்கப் பட்டு இருக்கும். மின்சாரம் தடைப்படும்போது உயர்த்திகளின் இயக்கத்தை நிறுத்த, இயக்கத்தடை கள் (services brakes) பொருத்தப்பட்டு இருக்கும். படிகள் எக்காரணத்தாலோ இறுகிக்கொள்ளு நம் போது மின் இயக்கத்தை நிறுத்த, ஒரு மிதவைப் பற்சக்கர அமைப்பும் இருக்கும். உயர்த்திகள் பொதுவாகப் பல மாடிக்கட்டடங்க ளிலும் சுரங்கப்பாதைகளிலும் அலுவலகக் கட்டடங் களிலும் போக்குவரத்துத் தொடுமுனைகளிலும் (transportation terminals) வங்கிகளிலும் உணவுக் கூடங்களிலும் பள்ளிகளிலும் பயன்படுகின்றன. உயர்த்தி விமான வகை க.வேதகிரி விமானத்தின் பின்புறத்தில் உள்ள ஏற்ற இறக்கத் தட்டு, விமான வகை உயர்த்தி (air craft elevator) எனப்படும். ஆகாய விமானத்தின் சமநிலையூட்டும் மிகைத்தளம் நீளப்போக்காக இருக்கும். அதன் பின் முனைப்பகுதியில் நீளப்போக்காக விமான உந்தலைக் (pitch) கட்டுப்படுத்தும் வகையில் கீலிடப்பட்டிருக்கும் முந்துதல் (hinged) பகுதிக்கு விமானவகை உயர்த்தி என்று பெயர். கட்டுப்படுத்தும் அறையிலிருந்து விமானிஉயர்த்தி அமைப்புகளை, இயக்கி அதன் கோணத்தைத் சரிப் படுத்த முடியும். கட்டுப்படுத்தப்படக்கூடிய லகை விமான உயர்த்தி படம் (1) இல் விளக்கப்பட் டுள்ளது. இதில் விமானச் சிறகின் விளிம்பு, வளி இயக்கம் சார்ந்த குழல்வகைச் சமநிலைப்படுத்திகள் (balances ) விமானத்தின் பின்விளிம்பு ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இவற்றின் உதவியால் உயர்த்தி களைச் சாய்த்து நிறுத்த வேண்டிய வேலைகளைக் குறைக்கவோ தவிர்க்கவோ முடியும். விமானங்களின் சமநிலையான மிகைதளத்தின் மேல்வளைவை (camber) உயர்த்திகளின் சாய்வு மாறுபடுத்தக்கூடும். பின்விளிம்பில் உள்ள சிறு உயர்த்திச் சிறகுகளைக் கீழ்நோக்கி வைத்தால் அருகே உள்ள பரப்புகளில், மிகுஅளவான காற்றின் பாய்வு அல்லது வேக வீதங்கள் களத்தின் மேற்பரப் பில் கிடைக்கும். கீழ்ப்பரப்பில் ஒப்பிட்டு நோக்கும் போது சிறிது குறைந்த அளவே வேக வீதம் இருக்கும். பெர்நௌலீஸ் தேற்றத்தின்படி மேற்பரப்பில் அழுத்த நிலை குறைந்தும், கீழ்ப்பரப்பில் மிகுந்தும் இருப்ப தால் விமானம் உயரும் நிலை ஏற்படுகிறது. மடக்கப்படாத தட்டின் நிலை மிகுவேகச் சுற்றுப்புறப் பாய்வு வானூர்திக்கட்டகம் வளிஇயக்கக் குழல் நிை லைப்பாள் பாய்வு நிலைப்பட்ட பரப்பி இடைமட்ட நிலைப்படுத்தி (ஆதாரமையம்) முன் பகுதி குறைவேகச் சுற்றுப்புறப் பாய்வு மடக்கப்பட்ட தட்டு கிளிட்ட கோடு உயர்த்தியின் கட்டுப்படுத்தும் பரப்பு பின்புற முளையின் தத்துவம் குறுகிய அளவுள்ள வளைவில் நாண்வரை. கூடு தலான அளவு நாண் வரைகளை விடத் திறம்பட இயங்கும். கீலினால் ஏற்படும் நிகழ்வுகள், நாண் வரை நீளத்தில் இருமடிப் பெருக்கமாகும்; எனவே குறுகிய நாண்வரை அமைந்த விளிம்புகளில் கீழ் நிகழ் வுகள் குறைந்திருக்கும்.