உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்நிலைச்‌ சறுக்கு விமானம்‌ 431

உயர்நிலைச் சறுக்கு விமானம் 431 சுற்றும் நெம்புகோல் அடக்கமான தூக்கி கூண்டில் உள்ள கதவுகள் மூடப்படாவிடில் உயர்த்தும் பொறி இயங்காவண்ணம் ஒரு பாது காப்புக் கருவி காணப்படும். மேலும் ஒருவர் கூண்டின் சுதவு வழியாகச் சற்றே நுழைந்தவுடன் கதவுகள் மூடிக்கொண்டால் அதைத் தவிர்க்க மின் அணுப் பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கும். இக்கருவிகள் மீண்டும் கதவுகள் திறக்க வழி செய்யும். பயணிகள் பயன்படுத்தும் உயர்த்தும் பொறிகள் நிமிடத்திற்கு 30-420 மீட்டர் வரை இயங்கக்கூடியன வாகவும், சுமை தூக்கும் திறன் 700-300 கிலோ வரை உடையதாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கும். க.வேதகிரி உயர்நிலைச் சறுக்கு விமானம் இது ஒரு பொறி அமைப்பில்லாத இழைந்து செல்லும் வகையைச் சார்ந்த விமானமாகும். முதன் முதலாக இந்த உயர்நிலைச் சறுக்கு விமானம் (suil plane) மரப்பலகை, ஒட்டுப் பலகைகளால் செய்யப்பட்டது. பிறகு அலுமினியம் பயன்படுத்தப்பட்டதால் இயக் எளிதாகவும் கனமில்லாததாகவும் இருந்தது. அதிக அளவுடைய காப்பு விகிதம் (aspect ratio) கொண்ட இயக்கம் பயனளிக்கத்தக்கதாக இருந்தது. திருகுத்தாக்கி பின்னர் கண்ணாடி இழை கொண்டு, காற்றினூடே இலகுவாகச் செல்லத்தக்க வகையில் அதன் வெளியமைப்பு தகுந்தவாறு வடிவமைக்கப்பட்டது. இதனால் இயக்கம் நுட்பமாகவும், மிகு திறன் அளிப்பதாகவும் இருந்தது. சறுக்கு விமானங்களின் இறக்கைகளில் திடீ ரென்று சாய்வாக இறங்கும் அல்லது இறங்கச் செய்யும் வகையில் சறுக்குத் தடைகள் (dive - brakes) பொருத்தப்பட்டிருக்கும். சறுக்கு விமானத்தை விரைவாக இறக்குவதற்கும், குறுகிய தரைப்பரப்பில் இறக்குவதற்கும், மேற்கூறப்பட்ட தடைகள் பயன் பட்டன. கணக்கீட்டின்படி வடிவமைக்கப்பட்டிருக் கும் இத்தடை அமைப்புகளால் குறிப்பிட்ட எல்லை வேகத்தை மீறாமல் விமானத்தைச் செங்குத்தாசு இறக்க இயலும். சறுக்கு விமானத்தில் உள்ள தனிப் பட்ட தடைபடாக் காற்றழுத்தத் தளத்தால் குறைந்த அளவு வேகத்தில் இயக்கவும் முடியும். இறக்கைகளில் அமைக்கப்பட்டிருக்கும் மடிப்புப் பலகையால் (flaps) வேகத்தின் அளவீட்டை அல்லது வரம்பை வேண்டு மளவு செயலாக்க முடியும். விமானியின் கட்டுப் படுத்தும் திறமையால் விரிவான எல்லைக்குட்பட்ட விகிதத்தில் வேக அளவீட்டையும் வேறுபடுத்த இயலும். சறுக்கு விமான அமைப்பை மிகச் சாய்வாகவும் விமானி சாய்ந்து படுத்துக்கொண்டு இயக்கும் வகையில் சிறியதாகவும் உருவாக்க முடியும். சறுக்கு