430 உயர்த்தும் பொறி
430 உயர்த்தும் பொறி உ உயர்த்தும் பொறிகளை இயக்கத் தேவையான ஆற்றலை அளிக்கவல்ல கருவியான மின் இயக்கி மேல்மட்டத்தில் பொருத்தப்பட்டிருக்கும். உயர்த்து வதற்கு இரும்புக் கயிறுகள் பயன்படும். இக்கயிறுகள் வாயிலாக மின்னியக்கியின் சுழல் ஆற்றல் இழுவை ஆற்றலாக மாற்றப்படுகின்றது. மேலும் உயரமான மட்டத்திலிருந்து தரைமட்டத்திற்கு இறக்கவும் இவை பயன்படுகின்றன. பொருள்களையோ மனிதர்களையோ சுமந்து செல்லும் ஒரு மேடையும் வடிவமைக்கப்பட்டு இருக்கும். பொதுவாக இம்மேடை சூழ்ந்து அடைக்கப் பட்ட பகுதிக்குள் (enclosures) இருக்கும். இதைக் கூண்டு என்பர். ஓசையில்லாமலும், உராய்வு விசை குறைவாகவும் இயங்க உருளிகள் அமைக்கப்பட்டு இருக்கும். இவற்றுடன் பாதுகாப்புக் கருவிகளும் இருக்கும். ஐரோப்பாவில் 1800 இல் நீரியல் தத்துவத்தைப் பயன்படுத்தி ஓர் உயர்த்தும் பொறி வெற்றிகரமாக இயக்கிக் காட்டப்பட்டது. பின்னர் நீராவி ஆற்ற லால் இவை இயங்கின. அமெரிக்காவின் ஓடில் சகோதரர் நிறுவனம் 1889 இல் மின்சாரத்தால் இயங்கும் உயர்த்தும் பொறியை வடிவமைத்து வெற்றிகரமாக இயக்கிக் காட்டியது. இயங்கும் ஆற்றலை அளிக்க முதன் முதலாக நேர் மின் இயக்கி (DC motor) பயன்பட்டது. இம் மின்இயக்கியுடன் ஒரு மின்தடைமாற்றியைப் பயன் படுத்தும்போது தேவையான முடுக்கம் கிடைக்கிறது. எனினும் குறைந்த-வேக இயக்கத்திற்கு, ஒரு-வேகம் அல்வது இரு-வேகம் கொண்ட மாறு மின்னியக்கி (AC motor) கின்றது. தற்போது மிகுதியாகப் பயன்படு பாதுகாப்புக் கருவிகள். பின்வரும் பாதுகாப்புக் கருவிகள் உயர்த்தும் பொறிகளில் பயன்படுகின்றன. மேடை அமைக்கப்பட்ட கூண்டு கீழ்த்திசையில் அதிவேகமாக இயங்காமல் இருக்கும் பொருட்டு ஒரு வேகக் கட்டுப்பாட்டுக் கருவி அமைக்கப்பட்டு இருக்கும். உயர்த்தும் பொறி கீழே வந்து நிலையாக நிற்கும் போது அதிர்ச்சி அடையா வண்ணம் பாதுகாக்க சுருள் - வில் அல்லது எண்ணைய் வழித் தாங்கி (oil buffer) அமைந்துள்ளது. இது அதிர்வு விசையை து ஏற்றுக்கொண்டு மெதுவாக அதை மீண்டும் அளிக்க வல்லது. இக்கருவி கீழ்மட்டத்தின் தோண்டப்பட் டுள்ள பள்ளத்தில் பொருத்தப்பட்டு இருக்கும். கோபுர ஓந்தி