உயரமானி 451
கருவியில் சரியீடு அமைப்பு உள்ளது. அனைத்து உயர் நிலை அழுத்தமானிகளிலும் இத்தகைய சரியீடு அமைப்பு, செந்தரமாக இருப்பதால் வெவ்வேறு களைச் விமானங்களில் உள்ள கருவிகள், வெவ்வேறு உயர் நிலைகளிலும் ஒரேவகை அளவுகோலாகப் பயன் படும். பொதுவாக விமானிகள் இக்கருவிகளில் ஏற் படக்கூடிய பிழைகளைச் சரி செய்து நுட்பமாகக் கணக்கிட்டுத் தெரிவிக்கும் வகையில் மின் எந்திர வியல் கணிப்பொறிகளும் இதில் பொருத்தப்பட்டி ருக்கும். இவ்வாறு தெரிவிக்கக் கூடிய அளவீடு செவ்வனே சுட்டிக்காட்ட, அந்த அளவீடு களும் நம்பத்தக்கனவாக இருக்க, பல்வேறு மேம் பாடான வழிமுறைகளும், இக்கருவியில் கையாளப் படும். இவை தற்போது மிகுதியாகப் பயன்படு கின்றன. இதனால் விமானி உடனுக்குடன் தவறில்லா மல் அளவீடுகளைக் குறித்துக் கொள்ள இயலும். தானியங்கிக் காட்டிகளினால் 0.5% நுட்பமாக உயர மானிகளைப் பயன்படுத்தி உயரத்தை அறியலாம். ஆனால் கணிப்பொறிகளைப் பயன்படுத்தி 0.2% நுட்பமாக உயரத்தை அளக்க முடியும். தற்காலத்தில் கணிப்பொறிகளைப் பெரிதும் பயன்படுத்துகின்றனர். உயரமானி 451 ரேடியோ உயரமானி. குறைந்த ஆற்றல் உள்ள ராடார் புவியின் மேல் லிண்ணூர்தியின் தொலைவை அளவிடுகிறது. ரேடியோ உயரமானி அடிக்கடி மோச மான காலநிலையின்போது விண்ணூர்திகளைத் தரை யில் இறக்கப் பயன்படுகிறது. பார்வையின் உதவி யின்றித் தானாகத் தரை இறங்கவும், மலைப்பாங் கான பகுதிகளில் நிலப்பரப்பை அறிந்து கொள்ள வும் ரேடியோ உயரமானிகள் பெரிதும் உதவியாக உள்ளன. ரேடியோ உயரமானிகள் குண்டுகளிலும், ஏவுகணைகளிலும், குண்டு தாக்குதலிலும் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட உயரங்களில் வெடிப்ப தைத் தூண்டப் பயன்படுகின்றன. இக்கருவிகள் விண் வெளி ஊர்திகள் தரையிறங்கப் பயன்படுகின்றன. மற்ற ராடார் கருவிகளைப் போன்று இந்த உயரமானி ரேடியோ அறையின் தரையிலிருந்து இலக்குப் பொருள்களுக்குச் சென்று திரும்பவும் வருவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தைத் தீர்மானித்து, உயரத்தைக் கணக்கிடுகிறது. தரை முழுமையாக, கிடையாக, சமதளமாக இருந்தால் ஆடிப் பிரதிபலிப்புப் போன்ற அலைகள் எதிர் துடிப்பு மூலம் அலைபரப்பி பரப்பி ஏற்பியக் குழாய் மாறும் பின் தங்கல் கேட் ஆக்கி ஒன்றாகப் உயர கலக்கிப் பொருத்தும் சுற்றுகள் பிரிக்கும் ஏற்பி பீன் தங்கச் சரியாக்கும் செர்வோ காட்டி அ.க. 5-29அ படம் 2. தானியங்கித் துடிப்பு உயரமானி 3