உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 உயரமானி

452 உயரமானி பலிக்கப்படும். இதனால் அளக்கப்படும் தொலைவு உண்மையான உயரத்தைக் காட்டும். ஆனால் தரை ஒரே மட்டமாகப் பளபளப்பாக இல்லாததால் தரையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அலையின் ஆற்றல் சிதறி ராடாருக்கு மீண்டும் வந்து சேரும். ஆகவே, செங்குத்தாக அருகிலுள்ள புள்ளியில் இருந்து மீண்டும் வரும் ஆற்றலுக்கும், தொலை விலிருந்து வரும் ஆற்றலுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்ள முடிந்தால்தான் உயரத்தை நுட்ப மாசுக் கணக்கிட்டு அறியமுடியும். எனவே பெரும் பாலான கதிரியக்க உயரமானிகள் துடிப்பு அல்லது அதிர்வெண் பண்பேற்ற உயரமானிகளாக உள்ளன. முதலாவது மிகுந்த உயரத்திற்கும், இரண்டாவது குறைந்த உயரத்திற்கும் பயன்படுகின்றன. துடிப்பு உயரமானி. தானியங்கித் துடிப்பு உயர மானியின் எடுத்துக்காட்டு விளக்கப்படம் படம் 2 இல் காட்டப்பட்டுள்ளது. கதிரியக்க அதிர்வெண் எடுத்துச் செல்லும் அலை 025 மைக்ரோ செகண்டுக் குக் குறைவான குறுகிய துடிப்புகளோடு பண்பேற் றம் செய்யப்பட்டுள்ளது. இக்குறுகிய துடிப்புகள் குறைந்த உயரங்களில் கூட முன்னேறிச் செல்லும் துடிப்பின் முனைக்கும் தரையிலிருந்து மீண்டு வரும் துடிப்பிற்கும் உள்ள நேர இடைவெளியைக் கணக் கிட்டு அறிய உதவுகின்றன. மிக எளிதான துடிப்பு உயரமானி மீண்டும் பெறப்படும் சைகையை ஓர் எதிர்மின் வட்டப்பரப்பாக்கிக் கதிர்க்குழாயில் காட்டுகிறது. இதனால் விண்ணூர்தி எதிரொலி சைகையின் முன்னேறும் முனையின் நிலையைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் பட விளக்க அமைப் பைப் பயன்படுத்துவது கடினமாகும். தானியங்கித் துடிப்பு உயரமானிகளில் தடுப்பு அல்லது கேட் (gate) பயன்படுகின்றது. செர்வோ முறையில் (செர்வோ முறை என்பது ஒரு சிறிய உள்ளீட்டு ஆற்றலினால் ஒரு பெரிய வெளியீட்டு ஆற்றலைக் கட்டுப்படுத்தும் சுற்றின் அமைப்பாகும்) செயல்படுமாறு தடுப்பு மீண்டும் வரும் சைகையின் முன்னேறும் முனைக்கு அருகில் அமையுமாறு செய்யப்படுகிறது. தடுப்பு நிலைக்கும், பரப்பப்படும் துடிப்பிற்கும் உள்ள நேரப் பின்தங்கல் விண்ணூர்தி ஓட்டிக்குக் காட்டப் படுகிறது. இது நெடுக்கை சுழலும் (range dial) அளவீடாகக் கொள்ளப்படுகிறது. விளக்கப்படம் அதிர்வெண் பண்பேற்ற உயரமானி. அதிர்வெண் பண்பேற்ற உயரமானியின் கட்ட படம் 3 இல் காட்டப்பட்டுள்ளது. ஒரு தொடர் காட்டி சுவீப் சரியா க்கும் செர்வோ சுவீப் ஆக்கி திர்வெண் அலைப் பண்பேற்றும் அதிர்வி வடிகட்டி பெருக்கப் பெருக்கி சமநிலைக் கலக்கி உணர்சட்டம் உணர்சட்டம் படம் 3. செர்வோ சரியாக்கி சுவீப் அதிர்வெண் அலைப் பண்பேற்ற உயரமானியின் கட்ட விளக்கப்படம்