உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்‌ மண்டலம்‌ 501

உயிர் மண்டலம் 501 லுள்ள பல வகைப் பாறைகளில் கனிமங்களாக சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. மண் இப்பாறைகள் தட்ப வெப்ப மாறுதல்களாலும், மழை, காற்று போன்ற இயற்கை நிகழ்வுகளாலும் காலப்போக்கில் சிதைக்கப்பட்டுச் சிறுகற்களாகித் துகள்களான பின்னர் மண்ணுடன் ணாகக் கலந்துபோகின்றன. இவற்றிலிருந்து பாஸ்ஃ பேட்டுகள் மழைநீரில் கரைந்து நிலத்தில் பெரும் பகுதியையும் நீர்நிலைகளையும், ஆறுகள் வழியாகக் கடலையும் அடைகின்றன. இங்கு வாழும் தாவரங் கள் பாஸ்ஃபேட்டுகளை எடுத்துக்கொண்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. விலங் குகள் தாவரங்களின் வழியாகத் தங்கள் பாஸ்ஃபேட் தேவையை நிறைவு செய்துகொள்கின்றன. இவ்வுயிரி கள் இறந்தால் இவற்றின் உடல்கள் மட்கி, பாக்டீரி யாக்களால் சிதைவுற்று அவற்றிலிருந்து விடுவிக்கப் பட்ட பாஸ்ஃபேட்டுகள் நிலத்தையும், நீர்நிலை களையும் அடைந்து புதுத் தாவரங்கள் வளர வழி செய்கின்றன. தம் கடலில் தங்கியுள்ள பாஸ்ஃபரஸ் பொருள்கள் மற்றுமொரு நூதனமான வழியால் வெளிக் கொணரப்படுகின்றன. கடல் மீன்களை உண்ட கரை யோரத் தீவுகளில் வாழும் கோடிக்கணக்கான கடற்பறவைகளின் எச்சங்கள் பல ஆண்டுகளாகக் கடற்கரையோரங்களில் பெருமளவு குவிந்து வி கின்றன. குவானோ எனப்படும் பொருள் மிகுதி யாகவுள்ள இந்த எச்சங்களில் பெருமளவு பாஸ்ஃ பேட்டுகளும்,நைட்ரேட்டுகளும் உள்ளன. இது பயிர் களுக்கு மிகச்சிறந்த உரமாகப் பயன்படுகிறது. தென் அமெரிக்காவின், மேற்குக் கரையோர நாடுகளான சிலி, பெரு போன்றவை ஆயிரக்கணக்கான டன் குவானோவை ஒவ்வோர் ஆண்டும் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்கின்றன. எனவே கடலில் தேங்கிய பாஸ்ஃபேட்டுகள், குவானோ உருவில் மீண்டும் நிலத்தை அடைகின்றன. பாஸ்ஃபரஸ் சுழற்சியைப் படம் 3 விளக்குகிறது. உயிர் மண்டலம் மு. இராஜேந்திரன் உலகில் உயிர் தோன்றுவதற்கு முன்பு புவி ஒரு வறண்ட கோளாக இருந்தது. அதில் பாறைகளும் ஆழமற்ற கடல்களும், மீத்தேன், அம்மோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, நீராவி ஆகியவை அடங்கிய மெல்லிய வளிமச்சுழலும் காணப்பட்டன. பூமியில் கனிமப் பொருள்கள் மட்டுமே இருந்த அந்த நிலை புவிக்கோளம் எனக் குறிப்பிடப்படுகிறது. சூரியனிட மிருந்து வெளிப்பட்ட ஆற்றல் கோடிக்கணக்கான ஆண்டுகள் தொடர்ச்சியாகப் புவி மண்டலத்தின் வெளிபரப்பைத் தாக்கியது. இதனால் ஏற்பட்ட வேதி, இயற்பியல் மாற்றங்களின் விளைவாக உலகில் முதன்முதலில் உயிர் தோன்றியது. அவ்வுயிரிகள் சூழ் நிலையிலிருந்து ஆற்றலைப் பெற்றுத் தம் இனத்தைப் பெருக்கிக்கொள்ளும் தன்மையைப் பெற்றன. இவ் வாறு புவிக்கோள வெளிப்பரப்பு உயிரிகள் வாழும் உயிர் மண்டவமாக உருவானது. உயிர் மண்டலம், நிலமண்டலம், நீர்மண்டலம், வளிமண்டலம் ஆகிய பிரிவுகளைக்கொண்டது. உல கின் நிலப்பரப்பும், பாறைகளும் நிலமண்டலத்தில் சேரும். நீர்மண்டலம் கடல், ஆறு, குளம், ஏரி, ஓடை ஆகியவற்றை உள்ளடக்கியது. புவியைச் சூழ்ந்துள்ள வளிமப் பரப்பு வளிமண்டலம் எனப்படுகிறது. வளி மண்டலத்தின் 99% தரைப்பரப்பிலிருந்து 32 கி.மீ. உயரம் வரை உள்ள பரப்பாகும். நீரில் வாழும் உயிரிகளின் இயக்கம் முற்றிலும் அவற்றைச் சூழ்ந் துள்ள நீர்ப் பரப்பினால் கட்டுப்படுத்தப்படுகிறது. புவியின் பரப்பளவு 510, 100,000 ச.கி.மீ. எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மூன்றில் ஒரு பகுதிக்குச் சற்றுக் குறைவான பகுதியே நிலப்பரப் பாகும். இந்நிலப்பரப்பின் பெரும்பகுதியில் உயி ரினங்கள் வாழ்கின்றன. புவியின் கிடைநிலை வாட் டத்தில் அனைத்துப் பகுதியிலும் உயிரினங்கள் தொடர்ச்சியாக, பரவலாகக் காணப்படுகின்றன. ஆனா னால் ஆழ்கடலிலிருந்து மலையுச்சி வரை உயி ரினங்களின் செங்குத்து வாட்டப்பரவல் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே காணப்படுகின்றது. நில நடுக் கோட்டில் புவியின் விட்டம் 12,753 கி.மீ எனக்கணக் கிடப்பட்டுள்ளது. இந்த விட்டத்தில் 1/800 பகுதி வரையில்தான் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழ் நிலை காணப்படுகிறது. அதாவது புவியில் பதினாறு கிலோமீட்டர் சுற்றளவு உள்ள பகுதியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன. முதுகெலும்பற்ற உயிரினங்கள் செங்குத்து வாட் டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியுள்ளன. ஓட்டுடலிகள், ஆழ்கடல் பகுதிகளில் காணப்படுகின் றன. சில சிலந்திகள் எவரெஸ்ட்டுச் சிகரத்தின் உச்சியில் கூடக் காணப்படுகின்றன. முதுகெலும்பி கள் செங்குத்து வாட்டத்தில் பதினான்கு கிலோ மீட்டர் அளவில் மட்டுமே வாழ்கின்றன. விலங்கினங் கள் தாவரங்களைச் சார்ந்து வாழ்கின்றன. தாவரங் களின் செங்குத்துப் பரவலின் அளவு எட்டுக் கிலோ மீட்டர்தான். தாவரங்கள் சூரிய ஒளியின் உதவி கொண்டு ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவைத் தயாரிக்கின்றன. ஆதலால் ஒளி ஊடுருவ இயலாத ஆழ்கடல் பகுதிகளில் தாவரங்கள் காணப்படுவ தில்லை. விலங்குகளின் வாழ்க்கை, அவை வாழும் சூழ் நிலையால் பெரிதும் கட்டுப்படுத்தப்படுகிறது.