536 உயிரியல் கடிகைகளும், செயல் நிகழ்வொழுங்கும்
உயிரியல் கடிகைகளும், செயல் நிகழ்வொழுங்கும் இனமும் தாம் வாழும் சுற்றுப்புறத்தில் ஒரு குறிப் பிட்ட சூழ்நிலையின் குறிப்பிட்ட வாழிடத்தை நிரப்பு கிறது. இனம் என்பது இனச்சேர்க்கையின் மூலம் பரி மாறிக் கொள்ள முடிந்த ஜீன் தொகுதியைக் கொண்ட ஓர் அடிப்படை மரபியல் அலகாகும். இனக் குழுவின் ஒரு தனிவுயிரி என்பது, இந்த ஜீன் தொகுதியினுள் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குத் தற்காலிகமாகத் தாங்கியுள்ள ஒரு கொள்கலனே யாகும். உயிரினங்களின் தனித்தன்மை. பெரும்பாலான இனங்களில் காணப்படும். தனித்தன்மை வெவ் வேறு இனங்களில் உறுப்பினர்கள் தம்மிடையே சேர்க்கை செய்வதில்லை என்பதையும், அதனால் ஓர் இனத்தின் பண்புகள் பிறிதொரு இனத்திற்குக் கடத்தப்படுவதில்லை என்பதையும் தெளிவாக்கு கின் றது. ஓர் இனத்தின் தனித் தன்மை அதற்கே உரித்தான தனிப்பட்ட ஜீன் தொகுதியி னால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு தலைமுறையைச் சேர்ந்த உயிரிகள் தம் பெற்றோரிடமிருந்து இந்த ஜீன்களை நேரடியாகப் பெற்றுக் கொள்கின்றன. பெற்றோரின் ஜீன்கள் பல்வேறு வகைகளில் மாறி இணைதலே இதற்குச் காரணமாக உள்ளது. எனினும் குறிப்பிட்ட இனத்தை நிர்ணயிக்கும் பண்பு களில் உறுப்பினர்கள் மாறுபடுவதில்லை. ஓர் இனத் தைப் பிறிதொரு இனத்திலிருந்து வேறுபடுத்தும் பண்புகள் அவ்வினத்தைச் சேர்ந்த அனைத்து உறுப் பினர்களுக்கும் பொதுவானவையாகவும் அந்த இனத் தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட வேறொரு இனத்தின் உறுப்பினர்களில் காணப்படாதவையாக வும் உள்ளன. இனத்தின் தனி உயிரிகளில் காணப்படும் பண்பு வேறுபாடுகள். பொதுவாக எல்லா இனங்களிலுமே தனி உயிரிகளின் பண்புகளில் சிறிய அல்லது பெரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த வேறு பாடுகள் தொடர்ச்சியாகவும் பரம்பரையாகவும் கடத்தப்படுகின்றன. ஜீன்களில் ஏற்படும் திடீர் மாற்றங்கள்தாம் இதற்குக் காரணம். இந்த வேறு பாடுகள் இனப்பெருக்கத் தனிமைக்கு தனிமைக்கு அப்பாற் பட்டவை. எனினும் உயிரிகளில் பலவுருத்தன்மை ஏற்பட இவ்வகை வேறுபாடுகள் காரணமாகின்றன. சில இனங்களில் உடலமைப்பில் பெரும் வேறுபாடுகள் காணப்படாவிட்டாலும், அவற்றின் தனி உயிரிகள் தனித்தனி இனங்கள் என்று கருதப்படும் அளவிற்கு இனப்பெருக்கத் தனிமை பெற்றுள்ளன. இத்தகைய னங்கள் உரு ஒத்த இனங்கள் எனப்படும். . வேறு சில இனங்களில் தனி உயிரிகளிடையே உடலமைப்பில் பெரும் வேறுபாடுகள் காணப்பட்டா லும் அவற்றிற்கிடையே ஜீன் பாய்தலைத் தவிர்க் கின்றன. இனப்பெருக்கத் தனிமை தோன்றவில்லை. இத்தகைய இனங்களுக்கு வேற்றுரு இனங்கள் என்று பெயர். மு. அ. அக்பர் பாஷா உயிரியல் கடிகைகளும், செயல் நிகழ்வொழுங்கும் புவி இயற்கைச் சூழலில் சீரான சுழற்சி மாற்றங்கள் நடைபெறுகின்றன. புவி தன் சாய்ந்த அச்சுவாட்டத் தில் சுழலும்போது சூரியனை நோக்கியுள்ள பக்கத் திலும், அதன் எதிர்ப்பக்கத்திலும் முறையே பகலும், இரவும் மாறி மாறி வருகின்றன. இவ்வாறு புவி ஒரு முறை முழுமையாகச் சுழலுவதற்கு 24 மணி நேரம் ஆகிறது. சூரியன் அடுத்தடுத்து இரண்டு முறை உதிப் பதற்கிடையிலுள்ள கால இடைவெளி ஒரு சூரிய நாள் எனக் குறிப்பிடப்படுகிறது. இதுபோலவே நிலா அடுத்தடுத்து இரண்டு முறை தோன்றுவதற்கிடைப் பட்ட காலம் ஒரு சந்திர நாள் ஆகும். சந்திர நாள், சூரிய நாளைவிடக் கூடுதலாக ஐம்பது நிமிடங்கள் கொண்டது. சந்திரனும், சூரியனும் பூமியை அவற் றின் ஈர்ப்பு விசைக்கு உட்படுத்துகின்றன. இவற்றின் இணைந்த ஈர்ப்பு விசை உச்ச நிலையை அடையும் போது உயரமான அலைகள் உண்டாகின்றன. இத் தகைய அதிக ஈர்ப்பு விசையை உந்து ஈர்ப்புவிசை எனக் கூறுவர். இந்த விசை குறைவாக இருக்கும் போது துள்ளு ஈர்ப்பின் காரணமாகத் தாழ்வான அலைகள் உண்டாகின் றன. புவி தன்னைத்தானே சுற்றீக்கொண்டு ஆண்டுக் கொரு முறை சூரியனையும் சுற்றி வருகிறது. அவ் வாறு சுற்றும்போது அதன் மைய அச்சு, சற்றுச் சாய்வாக உள்ளதால் புவியின் வடபாதியும், தென் பாதியும் வெவ்வேறு காலங்களில் சூரியனுக்கு நேரெ திரே வருகின்றன. இதனால் புவியில் சீரான பருவ கால மாற்றங்கள் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. இணைந்து செயல் உயிரிகளின் இயற்கையோடு படுதல். உயிரினங்கள் அவை வாழும் சுற்றுப்புறச் சூழலோடு இணைந்து செயல்படுகின்றன. இவ்வடிப் படையில் தாவரங்களும் விலங்கினங்களும் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. இரவில் இயங்கும் விலங்கினங்களான எலி, பூனை, ஆந்தை, கரப்பான், பூச்சி, விட்டில் பூச்சி போன்ற விலங்கினங்கள் இரவில் சுறுசுறுப்பாக இயங்கி உணவு தேடுகின்றன; பகலில் ஓய்வெடுக்கின்றன; பகலில் இயங்கும் விலங்கினங்க ளான பெரும்பாலான பறவை, தேனீ, வண்ணத்துப் பூச்சி, ஓணான் போன்றவை பகலில் சூரிய ஒளியில் இரைதேடுகின்றன. சில தாவரங்களில் பூக்கள் பகலில் மலர்கின்றன. ஏனையவற்றில் இரவில் மலர்கின்றன.