உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல்‌ கடிகைகளும்‌, செயல்‌ நிகழ்வொழுங்கும்‌ 537

தாவரங்களில் சூரிய ஒளியில் ஒளிச்சேர்க்கை நடை பெறுகிறது. தாவரங்களின் வளர்ச்சி வீதம் பகலை விட இரவில் அதிகமாகக் காணப்படுகிறது. இவ் வாறே சுடலின் ஈர்ப்புவிசைக்கேற்ப ஆளிகள், நத்தை கள் போன்ற பல கடல்வாழ் விலங்குகள் செயல்படு கின்றன. ஈர்ப்புவிசைக்கேற்ப இயங்கும் ஓர் உயிரியை, புதிய சூழலில் வைத்தாலும் அது ஈர்ப்புவிசைக் கேற்ப முன்னர் இயங்கியதைப் போலவே தொடர்ந்து இயங்குவதைக் காணலாம். இதிலிருந்து உயிரினங் களில் ஒரு சீரான செயலியக்கப் பண்பு உள்ளது என்பதும், அவற்றின் இயக்கத்திற்கு இவ்வுள்ளார்ந்த பண்புகளே காரணமாக உள்ளன என்பதும் தெளி வாகின்றன. உயிரினங்கள் நேரம் அறிந்து செயல்பட இந்த உள்ளுறையும் செயலியக்கத் தன்மை பயன்படு கிறது. இவ்வாறு உயிரிகள் காலம் அறிந்து செயல் படுவதால் அவை உயிரியல் கடிகைகள் (biological clocks) எனப்படுகின்றன. உயிரியல் கடிகைகள் உயிரினங்களின் தேவைக் கேற்பச் செயல்படுகின்றன. உடலின் மற்ற செயல் களைப் பெருமளவில் பாதிக்கும் வெப்பநிலை வேறு பாடுகள் வேதிப்பொருள்கள் போன்றவற்றால் உயிரி யல் கடிகைகள் மிகுதியாகத் தாக்கமுறுவதில்லை. உயிரியின் செயல் நிகழ்வொழுங்கின் இயக்க அடிப்படையை விளக்க இரண்டு கொள்கைகள் உள்ளன. முதலாம் கொள்கைப்படி ஒவ்வோர் உயிரியினுள்ளும் காலச் சுழற்சிக்கேற்பத் தன்னிச் சையாக இயங்கும் அமைப்பு உள்ளது. இது இயற்கைச் சூழலின் சுழற்சி மாற்றங்களுக்கேற்ப இயங்கும் அமைப்பாகப் படிமலர்ச்சியடைந்து பின்பு இயற்கைச் சூழலின் மாற்றங்களினால் தாக்கமுறா மல் தன்னிச்சையாகச் செயல்படும் இயல்புடையது எனக் கூறப்படுகிறது. இரண்டாம் கொள்ை கைக் கேற்ப உயிரிகள் அவற்றின் சூழலின் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றங்களுக்கேற்ப இயங்குகின் றன எனக் கூறப்படுகிறது. அனைத்து உயிரிகளும் அவற்றின் செல்களிலும் செல்களின் நுண்உறுப்பு களிலும் உயிரியல் கடிகைகளாகச் செயல்படுகின்றன. சூரியநகன் நிகழ்வொழுங்கும் கடிகைகளும் (Solar dayclocks and rhythms or circadian rhythms). தாவ ரங்களும் விலங்குகளும் இரவு-பகல் காலங்களான 24 மணி நேர நாள் சுழற்சிக்கேற்றவாறு இயங்கு கின்றன. கோனியாலக்ஸ் என்னும் ஒற்றைச் செல் கடல் தாவரத்தின் ஒளியுமிழ்வில் 24 மணி நேரத்தில் சீரான ஏற்றத் தாழ்வு காணப்படுகிறது. உயர் தாவ ரங்களின் ஒளிச்சேர்க்கையிலும், சுவாசத்திலும் இத் தகைய சுழற்சி வேறுபாடு காணப்படுகிறது. எலுமிச்சைச் செடியில் இலைவழியாக நீர், ஆவியாக வெளியேறுவதிலும் சுழற்சி மாற்றம் காணப்படு உயிரியல் கடிகைகளும், செயல் நிகழ்வொழுங்கும் 537 கிறது. பூக்கள் மலர்வதும், வாடுவதும் இலைகளின் இயக்கமும் நிகழ்வொழுங்கு சார்ந்த சுழற்சிகளே. கடல் பேனா என்னும் குழியுடலி, கடலின் ஆழ மற்ற மணல் பாங்கான பகுதிகளில் வாழும் ஒருகூட்டு யிரியாகும். இது பகலில் சுருங்கி மணலில் புதைந்து கொள்ளும். இரவில் விரிந்த மிதவையுயிரிகளைப் பிடித்து உண்ணும். ஆய்வகத்தில் மாறாத செயற் கைச் சூழலில் வைக்கப்பட்டாலும் இது இயற்கைச் சூழலில் இயங்குவது போலவே இயங்குகின்றது. பூச்சி களில், சிறப்பாக இயங்கும் உயிரியல் கடிகைகள் உள்ளன. பூக்கள் குறிப்பிட்ட காவத்தில் மலர்வதை அறிந்துள்ள தேனீக்கள் நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பூக்களை அடைந்து தேன் உண் கின்றன. பல் மனிதர்களிடம் தூக்கத்தைப் போன்ற உயிர்ச் செயல்கள் சீராக நடைபெறுகின்றன. இரத்த அழுத்தம் நாள்தோறும் சீரான சுழற்சி மாற்றத்துக் குள்ளாகிறது. சிறு நீரகங்களால் கழிவு நீக்கம் செய் யப்படும் சோடியம், பொட்டாசியம் ஆகியவற்றின் அளவு, உள்ளங்கைகள் வெளியேற்றும் வியர்வையின் அளவு ஆகியனவும் சுழற்சி மாற்றத்துக்குள்ளாகின் றன. மனித உடலில் பகல் நேர வெப்பநிலையை விட இரவு நேர வெப்பநிலை 2° குறைவாகக்காணப் படுகிறது. குழந்தைகள் வளரும்போது அவர்களின் செயல் நிகழ்வொழுங்கும் படிப்படியாக வளர்ந்து நிலை பெறுகிறது. இதனால்தான் புதிதாகப் பிறந்த குழந்தைகளிடம் தூக்கம் உணவு உண்ணுதல் ஆகிய செயல்கள் சீரான சுழற்சி முறையில் நடப்பதில்லை. பிறந்த 15 வாரங்கள் சென்ற பின்பே குழந்தைகள் 24-25 மணி நேரச் சுழற்சியின் அடிப்படையில் உறங் கவும் விழிக்கவும் பழகிக் கொள்கின்றன. உயிரினங்களில் செயல்நிகழ்வொழுங்கு சூழ்நிலை யின் புறத்தூண்டுதல்களாலும் பாதிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாகத் தொடர்ந்து இருளில் வைக்கப் படும் தாவரங்களின் இலைகளில் ஒருசில சுழற்சிகள் மட்டுமே சீராக நடைபெறுகின்றன. மீண்டும் ஒரு முறை அவற்றில் ஒளிபடுமாறு செய்தால் அவை மீண்டும் வழக்கம்போல் முழுமையாகச் செயல்படு கின்றன. இவ்வாறு புறச்சூழல்களின் தொடர்ச்சியான தூண்டுதல்களாலேயே உயிரினங்கள் தொடர்ந்து சீராக இயங்குகின்றன. தாவரங்களிலும் விலங்கினங் களிலும் பொழுது புலர்வது, பொழுது மறைவது போன்ற இயற்கை நிகழ்வுகள் புறத்தூண்டுதல்களா சுச் செயல்படுகின்றன. உயிரியல் கடிகையும் புறச் சூழல் மாற்றங்களும் இணைந்து செயல்படுவதால் ஒரு சீர்நிலை நிலவுகிறது. உயிரினங்களின் சூழ்நிலையைச் செயற்கையாக மாற்றியமைப்பதனால் உயிரியல் கடிகைகள் நேரத்துக் கேற்பச் செயல்படுவதைப் படிப்படியாக மாற்றி