உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582 உயர்‌ வேகத்‌ தன்னியக்க நெசவு முறை

582 உயர் வேகத் தன்னியக்க நெசவுமுறை புரோப்பிலின், பாலிஎத்திலின், சணல் நார் ஆகிய வற்றில் இருந்து கைப்பைகள் செய்யப் பயன்படு கின் ன்றன. தட்டை அலைக் கூறை எந்திரங்களில் (flat wave shed machines) பாவு உத்திரம் மேலே அல்லது கீழே உள்ளது. இவற்றில் கிடைக்கூறையைப் படுத்தியபோது வில்லை. எதிர்பார்த்த வெற்றி கிடைக்க தொகுதி இயக்கங்களையுடைய எந்திரம். துணி உருளியைத் தாங்கியிருக்கும் தாங்கி (bearing) நெசவு எந்திரத்தின் சட்டத்திற்குள் அமைந்திருப்பின் ஒரு முழுத் துணி உருளியின் விட்டம் 500 - 600 மி.மீ. வரை இருக்கும். ஆனால் துணி உருளியைத் தாங்கி யிருக்கும் தாங்கி நெசவு எந்திரத்திற்கு வெளியில் அமைந்திருப்பின் துணி உருளியின் விட்டம் அதிகமாக இருக்கும். அதாவது துணி உருளியின் விட்டம் அதிகமாக இருக்கும்போது அதைத் தாங்கியிருக்கும் தாங்கி நெசவு எந்திரத்திற்கு வெளியில் அமைந்திருக் கும். ஆனால் இவ்வமைப்பு முறை நெசவாளருக்கு வேலைப்பளுவை அதிகமாக்குகிறது. ஏனெனில் நெச வாளர் அழுத்தும் கட்டையையும், விழுதுகளையும் அடையத் துணி உருளியைக் கடந்து செல்ல வேண்டும். மேலும் துணிகள் நெசவாளர்கள் நடந்து செல்லும் சிறு வழியில் நீட்டிக் கொண்டிருப்பதால் இது சேத மடைகின்றது. பெரிய துணி உருளியை தயாரிப்பதனால் தையல் விளிம்பு (seams) இல்லாத நீண்ட துணியைப் பெற லாம். அல்லது மேலே கூறிய செயல்முறைத் தொடர்ச் சியால் ஏற்படும் பொருளாதாரச் செலவைக் குறைக் கலாம். இதற்குச் சிறப்புத் தொகுதி அவகுகளைப் (batching unit) பயன்படுத்த வேண்டும். பெரும் பான்மையான தொகுதி எந்திரங்கள் இயக்கியைச் (motor) சார்ந்திராமல், நெசவு எந்திரத்துடன் தொடர்ந்து இணைக்கப் பட்டுத் துணியை நெசவு எந்திரத்திலிருந்து பெற்றுக் கொள்ளுமாறு அமைக்கப் பட்டிருக்கும். தொகுதி எந்திரம் ஆராயும் மேடை யுடனும் (inspection table), சேமிப்பானுடனும் (accumulator ) இணைக்கப்பட்டிருக்கும். துணி ஆய் வாளர் புதிதாக நெய்த துணியை ஆய்வு செய்ததும் தேவை ஏற்படின் அதைச் சீர் அமையுமாறும் செய் வார். தொகுதி இயக்கங்கள் (batch motions) 1500 மி.மீ. விட்டமுடைய துணி உருளிகளை உற்பத்தி செய்யும். இவ்வுருளிகள் ஏறத்தாழ நெசவாளர்கள் நடக்கும் பாதையில் கிடக்கும். நெசவாளரின் நடை பாதை, நெசவு எந்திரத்தின் துணியை வெளியேற் றும் பகுதிக்கும், தொகுதி இயக்கத்துக்கும் இடை யில் அமைந்துள்ளது. இவ்வமைப்பு முறை நெசவு எந்திரம் அடைத்துக் கொண்டிருக்கும் இடத்தைப் போல் 100% அடைத்துக் கொண்டிருக்கும். இது நெசவாளர் நடக்கும் நேரத்தையும் அதிகரிக்கிறது. தொகுதி இயக்கங்கள் நெசவுப் பரப்புக்குக் கீழ் தனி அறையில் நடைபெறுவதாக இருந்தால் நெசவுப் பரப்பை ஒரே சீரான அளவுடைய பரப்பாகப் பேணலாம். பின்னர் அந்தத் துணி சுழல் உருளி களுக்குக்கீழ் அமைந்துள்ள சரிவு (slot) வழியாகச் செலுத்தப்படும். தொகுதி இயக்கத்தில் நெசவு செய்வதற்கு அதிகச் செலவாகிறது. ஏனெனில் தொகுதி அலகின் விலை, அதற்கெனத் தனியாக ஓர் இடம், அதைப் பேணுதல், அதற்கு வசதி செய்தல் ஆகியவற்றால் அதிகச் செலவாகிறது. இவ்வாறு ஏற்படும் அதிகச் செலவு அதி நீளமுள்ள உயர்தரத் துணியைப் பெறு வதால் கிடைக்கும் சேமிப்பினால் ஈடு செய்யப்படும். படம் 8. ஆராயும் மேடை, சேமிப்பான் ஆகியவற்றுடன் கூடிய ஹேஜ்மேனின் தொகுதி எந்திரம் ஒன்றிற்கு மேற்பட்ட முழு அகலமுடையபாவு விட்டத் தைக் கொண்ட எந்திரங்கள். இரண்டும் அதற்கு மேற் பட்ட முழு அகலமுடைய பாவு விட்டங்கள் (warp beams ) அல்லது நான்கும் அதற்கு மேற்பட்ட அரை அகலமுடைய பாவு விட்டங்கள் தேவைப்படும். ஏனெனில், வெவ்வேறு நேரியல்பு அடர்த்தியை அல்லது நீட்டியல்பைக் கொண்ட நூலிழைகளைப் பாவு விட்டமாகச் (weavers beam) செய்ய இயலாது. இது மட்டுமன்றி, அதிக நீள வேறுபாட்டைக்