584 உராய்வு
584 உராய்வு படுகிறது. அழுத்தும் கட்டையின் இரண்டு இயக்க தூரத்திற்கு இடையே உள்ள வேறு றுபாடு மென்மயிரின் தடிமத்தைக் கணக்கிடப் பயன்படுகிறது. ஓடக்கட்டை இல்லாத நெசவு எந்திரங்களில் நெசவச்சுக்குப் பதிலாக இடை இயக்கத்தையுடைய கைத்துரப்பண விட்டமும், விரைத்தடிகளும் பயன் படுத்தப்படுகின்றன. இதைக் கீழ்க்காணும் படத்தில் காணலாம். ஒவ்வொரு முறையும் அவை இயங்கும் போது இரண்டு அல்லது மூன்று ஊடையை எடுத் துத் துணியின் திண்விளிம்பில் செலுத்தி, மென் மயிரை உருவாக்குகின்றன. வளைய உயரம், கைத் துரப்பண விட்டம் (breast beam) நகரும் தூரத்தி னால் கட்டுப்படுத்தப்படுகிறது. சில கனமான மென் மயிர் ஆடைகளைச் சுரிகை எந்திரங்களில் நெய்யலாம். இவ்வெந்திரங்கள் நான்கு விட்டங்களைக் கொண்டுள்ளன. இதைக் கீழ்காணும் படத்தில் காணலாம். இவை தவிர ஓடக்கட்டையற்ற நெசவு எந்தி ரங்கள், சுரிகை எந்திரங்கள், நுனி குழல் எந்திரங் கள் ஆகியவை உயர் தன்னியக்க நெசவு எந்திரங் களாக நெசவுத் தொழிலகங்களில் பயன்படுகின்றன. இரா. அன்பழகன் நூலோதி: F. Happy, Contemporary Textile Engi- neering, Academic Press Inc., Ltd, London, 1982. உராய்வு பொருள்கள் ஒன்றின்மீது ஒன்று சறுக்கிச் செல்லும் போது ஏற்படும் தடை அல்லது எதிர்ப்பு விசை உராய்வு எனப்படுகிறது. தட்டையான தளத்தின் மீது வைக்கப்பட்டுள்ள பொருளை நிலைகுத்தாக உயர்த்தி எடுப்பதில் (புவிஈர்ப்பு முடுக்கம் நீங்கலாக) எவ்விதத் தடையையும் எதிர்கொள்வதில்லை. ஆனால் அதே பொருளைத் தளத்திற்குக் கிடையாக நகர்த்திச் செல்லும் போது உராய்வினால் உண்டாகும் ஒரு வகை எதிர்ப்பு விசையை உணரலாம். S W படம் 11. நான்கு விட்டங்களையுடைய நெசவு எந்திரம் மென்மயிர் இரண்டு மென்மயிர் விட்டத்திலிருந்து நேர்முகமாக ஊட்டப்படுகிறது. இங்கு மென்மயிர் விட்டம் P எனக் குறிக்கப்படுகின்றது. இம்மென் மயிர் விட்டங்கள் அடிவிட்டங்களை (ground beams) விடப் பெரியவை. அடி விட்டங்கள் G எனக் குறிக் கப்படுகின்றன. மென்மயிரின் நீளம் 70 மி.மீட்ட ராக இருக்குமாறு துல்லியமாகப் பேணப்படுகிறது. மென்மயிர் எந்திரத்தில் வெட்டப்பட்டு, பின் நெய் யப்பட்ட ஆடைகள் இரண்டு தனித்தனியான துணி உருளிகளில் சுற்றப்படுகின்றன. துணி உருளிகள் R எனக் குறிக்கப்படுகின்றன. இரு துணிகளுக்குள் எடுத்து நுழைத்த (picks inserted) எண்ணிக்கையைப் போல் எந்திரம் இருமடங்கு சுழலும். படம் தட்டையான தளத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகத்தை நகர்த்த முற்படும்போது செயல்படும் விசைகன் படத்தில் காட்டப் பட்டுள்ளன. சறுக்கு விசைக்குச்(S) சமமான உராய்வு விசை (F) எதிர்த்திசையாகவும் புத்தகத்தின் எடைக்கு (W) நிகரான குத்து விசைத் P) தளத்திற்குச் செங்குத்தாகவும் செயல்படுகின்றன.