உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/724

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704 உலோக மின்‌ முலாம்‌ பூசுதல்‌

704 உலோக மின் முலாம் பூசுதல் பெயர். இம்முறை பொருள்களுக்கு பாதுகாப்பை அளிப்பதோடு,பொலிவையும் தருகிறது. பற்பல நோக்கங்களுக்காகவும், அவை நிறைவேறுவதற்காக வும் மின்முலாம் பூசுவதில் ஒரே உலோகத்தையும் அல்லது ஒரே கருவியையும் பயன்படுத்தலாம். நோக்கம். சுற்றுச் சூழல் அல்லது வேதியியல் சார்ந்த தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பெறு தல், உராய்வைத் தாங்கும் ஆற்றல் அளித்தல், தேய்ந்து போன பகுதிகளைச் சீராக்குதல், வெப்பச் செயல் முறையின்போது அதில் தேவையற்ற சில பகுதிகளை மட்டும் விலக்கிப் பாதுகாப்பு அளித்தல், மிகு அதிர் வுடைய மாறு மின்னோட்டத்தை ஓடச் செய்யும் கடத்திகளின் கடத்தும் தன்மையை மேம்படுத்தல், ஒன்றோடொன்று ஒட்டியுள்ள வேறுபட்ட உலோகத் தளங்களிடையே ஏற்படும் அரிப்பைத் தடுத்தல் ஆகியவை மின்முலாம் பூசுதலின் நோக்கங்களாகும். வேதித் தாக்குதலைத் தடுக்க எந்த உலோகம் பூசப்பட வேண்டும் என்பது உலோகங்களின் (அட்ட வணை) மின் வேதி வரிசையில் உள்ள அந்த உலோ கத்தின் இடத்தைப் பொறுத்தமையும். நீர் வளி மத்தை அடிப்படையாகக் கொண்ட ஏனைய உலோ கங்களின் மின்முனை அழுத்தங்கள் அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ளன. அதிக மாறு மின் அழுத்த முடைய உலோகங்கள் விரைவாக இடைநிலை அமிலங்களால் தாக்கப்படுகின்றன. ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும் இரு உலோகங்களிடையே ஈரமான மற்றும் மென்மையான அமிலத்தன்மை அல்லது உப்புத்தன்மையுடைய காற்றுப்படும்போது ஒரு மின்கலச் செயல் தோற்றுவிக்கப்படுகிறது. மின் வேதி வரிசையில் இரு உலோகம் உலோகங்களுக்கும் மின் அழுத்தம் இடையே உள்ள தொலைவைப் பொறுத்து மின்கலச் செயலின் வலிமை அமையும். இச்செயலால் நேர் மின் உலோகம் அரிக்கப்பட அதனால் ஏற்படும் துரு மென்படலமாகப் படிகிறது. இதன் மூலம் மேற்கொண்டு அரிப்பு ஏற்படுவது தடுக்கப்படு கிறது. சான்றாக எஃகின் மேல் துத்தநாகப்பூச்சைப் பூசும்போது எஃகின் அரிப்புத் தடுக்கப்படுகிறது. மின்முலாம் பூச்சு முறையால் கடினத்தன்மை யுடைய உலோகப் படிவை ஏற்படுத்தி உராய்வின் மூலம் ஏற்படும் இழப்பைத் தவிர்க்கலாம். இதனால் தான் பல எந்திர உறுப்புகளுக்குக் குரோமியம் மின் முலாம் பூசப்படுகிறது. தேய்ந்துபோன உறுப்பு களுக்கு நிக்கல் அல்லது குரோமியப் படிவுகளின் மூலம் பழைய நிலையை அளிக்கலாம். இவ் வாறு புதுப்பித்தல், முற்றிலும் புதிய உறுப்பு களைப் பொருத்துவதை விடச்சிக்கனமானதாகும். வானொலிக் கருவிகளின் கடத்தும் தன்மையை வெள்ளிமுலாம் பூசுவதன் மூலம் மிகுதிப்படுத்தலாம். கரைசலை மின்முலாம் பூசுதலின் தத்துவம். உலோக உப்பு களின் கரைசல் மூலம் மின்னோட்டத்தைப் பாயச் செய்தால், மின் ஆற்றலுடைய துகள்களாகப்பகுக்கின்றது.இத்தகைய பிரித்தல்முறை மின்னாற் பகுப்பு எனவும் அந்நீர்மம் மின்னாற்பகு படு பொருள் எனவும், துகள்கள் அயனிகள் எனவும் குறிக்கப்படுகின்றன. மின்னோட்டம் செலுத்தப் படும்போது, எதிரயனிகள் நேர் மின்வாய்க்கும். நேரயனிகள் எதிர் மின்வாய்க்கும் இடம் மாறுகின் றன. ஓர் உலோக உப்பு, நீரில் கரைந்து மின்னாற் பகுபொருளாகும்போது, உலோகப்பகுதி நேர் குறை மின்னணுக்களாக உருவெடுக்கும். எதிர் மின்வாயை மின்னாக்கி + நேர்மின்முனைகள் நேர்மின்முனை தொகுப்பு தொட்டி எதிர்மின்முலை தொகுப்பு எதிர்மின்முனைகள் துத்தநாகம் -0.76 குரோமியம் -0.56 இரும்பு -0.44 மின் தடை மாற்றி + காட்மியம் -0.40 வோல்ட் மீட்டர் நிக்கல் -0.23 வெள்ளீயம் -0.14 அம்மீட்டரி காரீயம் -0.12 நீர்வளிமம் -0.00 தாமிரம் -0.34 வெள்ளி -0.80 தங்கம் -1.36 எளிய உலோக மின்முலாம் பூசும் முறை