உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/725

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலோகம்‌ நீட்டுவிப்பு 705

அடையும்போது கரைசலை விட்டு உலோக அணுக் களாக வெளியே தள்ளப்படும். தக்க சூழ்நிலையை ஏற்படுத்தி, அவ்வித அணுக்களை ஒரு தொடர்ச்சி யான மென்படலமாக எதிர்மின்வாய் மேல் படியச் செய்ய இயலும். தேவைப்படும் கருவி. மின் முலாம் பூசுதலுக்குக் குறைந்த அழுத்த நேர் மின்னோட்டம் அளிக்கும் கருவி, உலோகக் கரைசல் மற்றும் வேறு சில நீர்மங் களுக்கான பொருள்கள், பொருத்தமான மின்முனை கள் ஆகியவை தேவைப்படுகின்றன. மின் மாற்றியுடன் கூடிய ஒருவழிப்படுத்தி (rectifier) அல்லது இயக்கியுடன் கூடிய மின்னாக்கி (generator), பொதுவாக மின்னோட்டம் அளிக்கும் கருவியாகப் பயன்படுகிறது. மின் முலாம் பூசும் தொட்டிகளுக்கு மின் அழுத்தக் கட்டுப்படுத்தி மிகவும் தேவையாகும். பயன்படுத்தும் மின் கருவிக்கேற்ற கட்டுப்படுத்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் எடை உலோகத்தின் படியும் காட்டும் கருவி, வெப்பத்தை நுட்பமாகக் கட்டுப்படுத்தத் தேவை யான வெப்பநிலைப்பாதிப்பு, குறிப்பிட்ட காலத்தில் முலாம் பூசுதலை நிறுத்தக்கூடிய காலக் கட்டுப் படுத்தி முதலியவையும் பயன்படுகின்றன. மின் முலாம் பூசும் பூசும் முறைக்குப் பயன்படும் தொட்டிகள், மின்னாற் பகுபடு பொருளின் தன்மை யைப் பொறுத்து, எஃகுத் தொட்டிகளாகவோ, உட் புறம் நெகிழி (plastic) பூசப்பட்ட அல்லது ரப்பர் எனப்படும் இழுபொருள் பூசப்பட்ட எஃகுத் தொட் டிகளாகவோ இருக்கலாம். மின்முலாம் பூசும் முறை. மின் முலாம் பூசவேண்டிய பொருள்களை முதலில் தூய்மைப்படுத்த வேண்டும். அவற்றின் மேலுள்ள எண்ணெய் மெழுகுப் பிசுக்குகளைக் காரக்கரைசலில் அமிழ்த்திப் போக்க வேண்டும். பிறகு, தூய நீரிலிட்டு ஒட்டிக் கொண்டி ருக்கும், காரக் கரைசலை நீக்க வேண்டும். அதன் பின் பொருள்களின் மேலுள்ள துரு போன்றவற்றை எஞ்சிய அமிலத்தின் துணை கொண்டு அகற்ற வேண்டும் அமிலம் பயன்தரா விடில் சயனைட் கரை சலால் அகற்றலாம். இவ்விதம் தூய்மை பெற்ற பொருள்களைக் கையால் தொடாமல் கவனமாக முலாம் பூசுதற்கான தொட்டிக்குள் உள்ள மின்னாற் பகுபடுபொருள் கரைசலில் மூழ்கும்படி வைக்க வேண்டும். உலோகத்திற்கும், கரைசலுக்கும், தேவையான உலோகப்படிவத் தடிமனுக்கும் ஏற்ற வாறு, செலுத்தவேண்டிய மின்னோட்டம், மின் அழுத்தம், கால அளவு ஆகியவற்றை முன்னரே கணக்கிட்டு அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். கரைசலைச் சரியான அளவில் சரியான வெப்பநிலை யில் வைத்திருக்க வேண்டும். முலாம் பூசப்பட்டபின் அ.க.5-45 தொட்டியிலிருந்து உலோகம் நீட்டுவிப்பு 705 பொருள்களை வெளியில் எடுத்துத் தூய குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பிறகு அவற்றைக் கொதிக்கும் நீரில் அமிழ்த்தி இறுதியாகக் காற்று அல்லது சூடாக் கப்பட்ட அறை இவற்றில் உலர்த்த வேண்டும். அ. இளங்கோ உலோகம் நீட்டுவிப்பு இது ஒரு குளிர்நிலை உருவாக்க (coldworking) முறை யாகும். உலோக நீட்டுவிப்பு முறையில் நீட்டுவிக்க வேண்டிய உலோகக் கம்பி அல்லது தண்டை, அச்சு எனவாம். கடின எஃகுக் கட்டியில் உள்ள துளையின் வழியே இழுத்து அதன் விட்டத்தைக் குறைத்து நீளத்தை அதிகரிக்கலாம். உலோகக் கம்பிகளைத் தயாரிக்க இம்முறையே முக்கியமானதாகக் கருதப் படுகிறது. அன்றியும் நீட்டுவிப்பு முறையில் குழாய், தண்டு ஆகியவற்றை உருவாக்கலாம். குளிர் நிலை நீட்டுவிப்பிற்கு மூலப்பொருள் மிகவும் நீட்சித் தன் மையுடன் இருக்க வேண்டும். மூலப்பொருளிலிருந்து இறுதி வடிவைப் பெற, பல கட்டங்களில் மீண்டும் மீண்டும் நீட்டுவிக்கலாம். ஒரு முறை நீட்டுவித்த வுடன் மூலப்பொருளின் நீட்சித் தன்மை குறைந்து கடினமாக மாறும். மீண்டும் அதன் நீட்சித் தன் மையை நிலைநிறுத்த பதப்படுத்தல் என்ற வெப்பச் செயல்முறை உதவுகிறது. பிறகு அடுத்த கட்ட நீட்டுவிப்பைத் தொடரலாம். தண்டு நீட்டுவிப்பு. இரும்பு, இரும்பு அல்லாத உலோகத் தண்டுகள், வெப்ப உருட்டு (hot-rolled) முறையால் ஆக்கப்பட்ட பாளங்களிலிருந்து (billets) உருவாக்கப்படுகின்றன. முதல் உருட்டுக்குப்பின் தண்டின் அளவை மீண்டும் குறைக்க வேண்டியிருக் கலாம். அந்நிலையில் உள்ள தண்டுகளைக் கீழ்க் காணும் நோக்கங்களுக்காகக் குளிர்நிலை உருவாக்க முறையில் நீட்டுவிக்கலாம். அவை, நீண்ட தண்டு களை நேராக்குதல், அளவுகளை நுட்பமாக்குதல். பளபளப்பான வழவழப்பான தளத்தை அளித்தல், சில சமயங்களில் வலிமையையும் கடினத்தையும் கட்டுப்படுத்துதல் என்பன. செயல்முறைத் தத்துவம். முதலில் தண்டின் தளத்தை வேதி முறைப்படி தூய்மைப்படுத்த வேண் டும். எஃகுத் தண்டுகளை 3-10% கந்தக அமிலம் கலந்த நீரில் மூழ்க வைக்கலாம். 60-70°C வெப்ப நிலை வரை சூடாக்கப்பட்ட தூய்மைப்படுத்தும் இக் கரைசல், வெப்ப உருட்டுவிப்பு முறையில் உருவான தண்டின் மேல் இருக்கும் ஆக்சிஜன் படிவத்தை நீக்குகிறது. தூய்மையாக்கப்பட்டபின், தளத்தில் உள்ள அமிலக் கரைசலை நீக்கத் தண்டுகளைத் தூய நீரில் கழுவுகின்றனர். பிறகு அமிலத்தை