உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/734

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

714 உலோக ஹைட்ரைடு

714 உலோக ஹைட்ரைடு முகமைய கனசதுர அமைப்பைக் (face centredcubic ) கொண்டிருக்கின்றன; மேலும் ஒரு ஹைட்ரஜனைச் சேர்த்துக் கொண்டு MHz அமைப்பாகும் போது அறுகோண அமைப்பாக மாறுகின்றன. . Th Hi என்ற மூலக்கூறு வாய்பாடு சரியானது எனத் தொகுப்பாய்வினாலும் X- கதிர் ஆய்வினா லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிக்கலான பொருள் மையக் கனசதுர அமைப்பைக் கொண் டுள்ளது. இரண்டுவிதமாக ஹைட்ரஜன்கள் இணைந் துள்ளன. தோரியத்துடன் ஹைட்ரஜன் அணு நாற் கர அமைப்பிலும் (Th-H = 2.46 A) ஈதல் பிணைப் பிலும் (2.29 Å) அமைந்துள்ளது. ஒவ்வொரு தோரியம் அணுவைச் சுற்றிலும் உள்ள 12 ஈதல் பிணைப்புகளில் 9 முக்கோண ஹைட்ரஜன்களாகவும் 3 நாற்கர ஹைட்ரஜன்களாகவும் இருக்கின்றன. தோரியம் அணுக்களுக்கிடையே (Th-Th) குறைந்த அளவு தூரம் 3.87 A ஆகும். ஆகவே தோரியங்களுக்கிடையே பிணைப்பு இல்லை. உள்ள மற்ற ஆக்டினைடு டைஹைட்ரைடுகள், ட்ரை ஹைட்ரைடுகள் ஆகியவற்றின் அமைப்பு லாந்தனைடு ஹைட்ரைடுகளை ஒத்திருக்கின்றது. லாந்தனைடு களைப் போல ஆக்டினைடு ஹைட்ரைடுகளில் வலு வற்ற பிணைப்பில் இணைந்துள்ளது. அணு எண் கூடும்போது லாந்தனைடு - ஹைட்ரஜன் இடைவெளி குறைவது போன்று ஆக்டினைடு ஹைட்ரைடுகளில் M-H தூரம் குறையவில்லை. பண்புகள். பல்வேறு பண்புகளைக் கொண்ட உலோகங்கள் ஹைட்ரைடுகளை உண்டாக்குவதால், ஹைட்ரைடுகளின் பண்புகளில் அதிக அளவில் மாறு பாடு காணப்படுகிறது. ஹைட்ரைடுகளின் சில பொதுவான பண்புகளாவன : உலோகமும் அதனுள் சேர்ந்துள்ள ஹைட்ரஜனும் ஒரு குறிப்பிட்ட எண் விகிதத்தில் (nonstoichiometric) இணைவதில்லை. உலோகத்தில் உறிஞ்சப்படும் ஹைட்ரஜன் அளவு வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றைப் பொறுத்த தாகும். பொதுவாகவே உலோக உலோக ஹைட்ரைடுகள் அவ்வுலோகத்தின் பண்புகளையே கொண்டுள்ளன. வெற்றிடத்தில் வெப்பப்படுத்தும்போது ஹைட்ரைடு களிலிருந்து அதிக அளவு ஹைட்ரஜன் வெளியேறி விடுகிறது; ஆயினும் ஹைட்ரஜன் முழுவதுமாக வெளியேற்றப்படுவதில்லை. ஹைட்ரஜனை உறிஞ்சி ஹைட்ரைடு உண்டாகும்போது உலோகத்தின் கட்டமைப்பு (metal lattices) அடிப்படையில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை. ஹைட்ரைடுகளின் செறிவை அளந்தறிவதாலும், X கதிர் ஆய்வினாலும் உலோகக்கூடு விரிவடைவதாகவும், படிக அமைப்பில் சிறிது உருத்திரிபு (distorted) அடைந்திருப்பதாக வும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலோக அணுக்கள் அல்லது அயனிகளுக்கிடையேயுள்ள இடைத்துளை களில் ஹைட்ரஜன் நுழைந்துள்ளது. எனவே உலோக ஹைட்ரைடுகள் இடைச்செருகல் திண்மக் கரைசல் (intersititial solid solution) என்றும் இடைச் செருகல் சேர்மம் என்றும் அழைக்கப்படுகின்றன. பிளாட்டினம், நிக்கல் ஹைட்ரைடுகள் ஹைட்ரஜ னேற்றத்திற்குச் சிறந்த வினையூக்கிகளாகப் பயன் படுகின்றன. பாதரசச் சேர்மங்களைப் பாதரசமாக ஒடுக்கமடையச் செய்கின்றன. இதனால் உலோகக் கூட்டில் உறிஞ்சப்பட்ட ஹைட்ரஜன் மூலக்கூறு உள்ளே பிரிகையடைந்து அணு நிலையில் அமைந்து உள்ளது என்று அறியலாம். உலோக ஹைட்ரைடு களில் ஒவ்வொன்றும் தனித்தனிப் பண்புகளைக் கொண்டிருப்பதால் அவற்றில் ஹைட்ரஜன் இணைந் துள்ள முறையில் (உறுதித்தன்மையில்) தொடர்ந்த தொரு வேறுபாடு இருக்கலாம். ஹைட்ரஜன் தனித்தோ உலோக அயனியுடன் பிணைப்பில் ஈடுபட்டோ இருக்கலாம். நிக்கல், பல்லேடியம், பிளாட்டினம் போன்றவற்றின் ஹைட்ரைடுகளில் ஹைட்ரஜன் இணைந்துள்ள உறுதித்தன்மை மிக அதிகமாக உள்ளது. இவற்றுடன் ஒப்பிடும்போது வேறு அநேசு ஹைட்ரைடுகளில் சிறிதளவு உலோகக் கூட்டிற்குள் துளைத்துச் செல்வ தில்லை; புற ஈர்ப்பு விசையால் கவரப்படுகின்றன. பிணைப்புக் கொள்கைகள், உலோக ஹைட்ரைடு களில் உள்ள ஹைட்ரஜன் உலோக அணுக்கூட்டினுள் அணுக்களாக இருக்கலாம் அல்லது உலோகத்தின் கடத்தும் எலெக்ட்ரான்களுடன் ஹைட்ரஜனின் எலெக்ட்ரான் சேர்ந்துகொள்ள, அது புரோட்டானா கவோ (H+) இருக்கலாம் அல்லது உலோகத்தின் கடத்தும் எலெக்ட்ரான்களிலிருந்து எலெக்ட்ரானை எடுத்துக் கொண்டு ஹைட்ரைடு அயனியாகவோ (H) இருக்கலாம். உலோகப் படிகத்தில் எலெக்ட்ரான் செறிவு பகிரப்படுவதால் H+, H- ஆகிய நிலைகளுக்கு இடையே உள்ள மின்னேற்ற வேறுபாடு குறைக்கப் மின்னேற்றமுள்ள பட்டுப் பகுதியளவு ஹைட் ரஜனாகவே இருக்கும். இம்மூன்று நிலைகளும் தொடர்ந்து ஹைட்ரைடில் காணப்படும் களாகும் (limiting cases). ஹைட்ரைடு நிலைமை களை விளக்குவதற்கு H+, H- மாதிரிகள் பயன்படு கின்றன. எல்லை அணுக்கரு காந்த உடனிசைவு ஆய்வுகளையும், படிகப்பண்புகளையும் விளக்குவதற்கு இவ்விரு கொள்கைகளையும் பயன்படுத்தலாம். இந்த மாதிரிகள் ஒரு முடிவான நிலையாகும். உண்மையாக இவற்றின் இடைப்பட்ட அமைப்பைக் கண்டு கொள் வது கடினம். பயன்கள். மின்கலங்களில், சிறப்பாக எரி பொருள் கலங்களில் இவை பயன்படுகின்றன.