உவர்நிலத் தாவரம் 715
பல்லேடியம், ஹைட்ரஜன் மின் ன்முனையைப் பயன் படுத்திப் படிக் அமைப்பு ஆய்வின் போது மின்னழுத்தம் மாறுகிறது. ஒரு நார்மல் அமிலக் கரை சலில் ஒரு வளிமண்டல ஹைட்ரஜன் அழுத்தத்தில் 100mv மின்னாற்றல் உண்டாகிறது.. அது உடனடி யாக 45 mv ஆகக் குறைகிறது. ஒரு மணி நேரத்திற் குப்பின் முற்றிலும் குறைந்து பூஜ்யமாகிறது. பல்லே டியத்துடன் ஹைட்ரஜன் இணைந்து உண்டாகும் ஹைட்ரைடுகளின் நிலைமைகளைக் கொண்டு இதை விளக்கலாம். வேதித் தொகுப்பின் போது தொடங்குவதற்குரிய வினையைத் வீரியமுள்ள சேர்மமாக ஹைட்ரைடுகள் பயன்படுகின்றன. மேலும் வேதி வினைகளில் சிறந்த வினைவேக மாற்றிகளாகப்பயன் படுகின்றன. பிளாட்டினம், நிக்கல் ஹைட்ரைடுகள் ஹைட்ரஜன் ஏற்றத்திற்குச் சிறந்த வினையூக்கி களாகப் பயன்படுகின்றன. உலோகத்தை நுண்துகள்களாக மாற்றுவதற்கு ஹைட்ரைடுகள் பயன்படுகின்றன. மேலும் உலோ கத்தைப் பிரித்தெடுக்கவும் பயன்படுகின்றன. மாண்டு முறையில் (Mond's process) நிககல் பிரித்தெடுக்க முதலில் அதன் தாது நிக்கல் ஹைட்ரைடாக மாற்றப்படுகிறது. இது எளிதில் ஆவியாகக் கூடியது. நிக்கல் கார்போனைலைப்பிரித்துப் பின் வெப்பப் படுத்தும்போது சிதைவடைந்து தூய்மையான நிக்கல் கிடைக்கிறது. உலோகம் ஹைட்ரைடாக மாறும் போது நொறுங்கும் தன்மையுடைய தூள் தூளாக மாறிவிடுகிறது. யுரேனியம் ஹைட்ரஜனுடன் சேர்ந்து யுரேனியம் ஹைட்ரைடாக மாறுகிறது. இது வேக மாக வினைபடக்கூடிய சேர்மம். இதை மீண்டும் ஒடுக்குவதால் தூய்மையான உலோகம் நுண்துகள் களாகக் கிடைக்கிறது. இவ்வாறு ஹைட்ரஜன் ஏற்ற மும், இறக்கமும் செய்வதால், ஹைட்ரஜன் வளிமத் தைத் தூய்மைப்படுத்தவும் பயன்படுத்தலாம். ஸ்கேன்டியம், ஸிர்கோனியம் ஹைட்ரைடுகள் போன்ற நிலைத்தன்மையுடைய ஹைட்ரைடுகள் அணு மின் உலையில் நியூட்ரான்களின்வேகத்தைக் குறைப் பதற்குப் (neutron moderators) பயன்படுகின்றன. -ஜெ. செல்லப்பா நூலோதி. J.C. Bailar, et.al., Comprehensive Inorganic Chemistry, First Edition, Pergamon Press Ltd, 1973; Alberty F. Cotton, and Geoffrey, Wilkin - son, Advanced Inorganic Chemistry, Third Edition, Wiley Eastern Ltd., New Delhi, 1984. உவர்நிலத் தாவரம் கரையும் உப்புகள் செறிந்த தளத்தில் வளரும் தாவரங்கள் உவர் நிலத் தாவரங்கள் எனப்படும். உவர்நிலத் தாவரம் 715 சோடியம் குளோரைடு, மக்னீசியம் சல்ஃபேட், மக்னீ சியம் குளோரைடு, சோடியம் சல்ஃபேட், சோடியம் கார்பனேட் போன்ற உப்புகள் மண்ணிலும் நீரிலும் கரைந்துள்ளன. இத்தகைய உப்புகளை விரும்பித் தாவரங்கள் இங்கு வளர்வதில்லை. மாறாக மற்ற தாவரங்களைவிட உவர் நிலத் தாவரங்கள் உப்புத் தன்மையினைத் தாங்கிக் கொள்ளும் திறன் உடை யவை. உப்புச் செறிவான மண் பகுதி, உப்புநீர்ப்பகுதி, உப்பங்கழிகள் போன்ற இடங்களில் வளரும் தாவரங் களை. உவர்நிலத்தாவரங்கள் (halophytes) என் று பாரன் மற்றும் மேக்டகல் என்ற அறிவியல் வல்லுநர் வரையறுத்துக் கூறுகின்றனர். பெரும்பாலான உவர் நிலத் தாவரத் தொகுதிகள் கடற்கரை அருகிலும் கழிமுகங்களிலும் காணப்படுகின்றன. கடற்கரை யோரங்களில் வளரும் உவர்நிலத்தாவரங்கள், மாங் குருல் தாவரத் தொகுதி என்றும் அழைக்கப்படு கின்றன. ரைசோஃபோரா,அவிசீனியா, நிப்பா, ஏஜிசிராஸ் ஃப்ளெஜெல்லேரியா, காரப்பா, புரூகீரா போன்றவை மாங்குரூவ் தாவரத் தொகுதியில் காணப்படும் தாவரங்களாகும். கடற்கரையோரங்களிலும், கடற் கரைக் கழிமுகங்களிலும், உப்பு மண்ணிலும்,உப்பு நீரிலும் வாழும் தாவரக் கூட்டமைப்பில், மாங்குரூவ் தாவரக் காடுகள் பெரும்பான்மையாகவும், நன்கு தெரிந்தனவாகவும் உள்ளன. மாங்குரூவ் என்னும் உவர்நிலத்தாவரங்கள், வெப்பமான கடற்கரைப் பகுதிகளிலும், தட்டையான மணற் பரப்புகளிலும் வளர்கின்றன. இப்பகுதிகளில் நீர் அமைதியாகவும், நிலைபெற்றும் இருக்கும். இத்தாவரங்கள் தனித் தன்மை கொண்ட புதர்ச் செடிகளாக அல்லாமல் மரங்களாகக் காணப்படுகின்றன. மேலும் இவை மாறுதலை விரும்பாதலை. சூழ்நிலை மாறும் பொழுதும் இவை ஒரே மாதிரியாகவே செயல்படு கின்றன. இவற்றின் அமைப்பும் மாறுதலின்றிக் காணப்படுவது இத்தாவரங்களுக்கேயுரிய தனிப் பண்பாகும். உவர்நிலத் தாவரங்கள். தனிப்பட்ட செயலியல், உள்ளமைப்பான தகவமைவுகள் பெற்றுள்ளன. வறண்ட நிலத்தாவரப் பண்புகளை இவை பெற் றுள்ளன. மண்ணில் மிகு அளவில் உப்புச் செறிவு உள்ளதால், இத்தாவரங்களுக்கு, நீர் உறிஞ்சுதல் ஓர் இடர்ப்பாடாகிறது. எனவேதான் நீர் நிறைந்து இருந்தும், இத்தாவரங்களிடம் வறண்ட நிலப் பண் புகள் காணப்படுகின்றன. நீர் இருந்தும் அந்நீரைப் பெற முடியாத நிலையிலுள்ளமையால் உவர்நிலத் தாவரங்களைச் செயலிய - வறண்ட தாவரங்கள் என்பர். உவர்நிலத் தாவரங்களின் தகவமைவுகள். நீர்ச் சேமிப்புத் திசுக்கள் நிறைந்துள்ளமையால், இத் தாவரங்களின் இலைகள் சதைப்பற்றுக் கொண்டு