உறக்கமின்மை 765
விழிப்பு நிலையின் ஒரு மாற்றமான வெளிப் பாட்டை உறக்கம் எனலாம். சுற்றுப்புறச் சூழ் நிலைக்கு ஏற்றவாறு மூளையின் மறுவினைத் தன்மை, தூக்கத்தில் மாறுகிறது. ஆனால் உறக்கத்தின் மீது. மனத்தின் நடவடி. டிக்கை மாறுவதில்லை. பிரித் தறிந்து தெரியும் தன்மை இருக்கிறது. மூளை இயக் கம் தெரியாத நிலையில் இல்லை. ஒரு குழந்தையின் கம்மிய அழுகுரல், தூங்கும் தாயை எழுப்பி விடு கிறது. அதே நிலையில், மீண்டும் மீண்டும் நிகழும் மெல்லிய, உரப்பிய ஒலிகள், அவள் தூக்கத்தைப் பாதிப்பதில்லை. உறக்கம் மனிதனுக்கு மிகத் தேவை யான ஒன்றாக இருந்தபோதும், அதைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. மூளை, தூங்க விரும்பும் ஓர் உறுப்பாகக் கருதப்பட்டது. மூளையினுள்ளே நடக்கும் முனைப் பான நிகழ்வுகளின் வெளிப்பாடுதான் தூக்கம் எனத் தெரிகிறது.தலாமசினுள் இருக்கும் உறக்கம் உண் டாக்கக் கூடிய பகுதிகளை மின ஆற்றலால் தூண் டினால் உறக்கம் வருகிறது. அப்பகுதிகளுக்குச் சேதம் ஏற்பட்டால் நிரந்தரமாகத் தூக்கமின்றி விழித்திருக்கும் நிலை ஏற்படுகிறது. முகுளத்தில் உறக்கத்திற்கான மையநிலை இருப்பதாகத் தெரி கிறது. கண் தூக்கம் என்பது பல்வேறு நிலைகளைக் கொண்ட ஒரு நிகழ்வாகும். மூளை மின்னலை வரை படத்தின் மூலம் இரு முதன்மை வகையான தூக் கங்கள் இருப்பது தெரிய வருகிறது. அவை விரை வுக் கண் அசைவுத் தூக்கம், விரைவற்ற அசைவுத் தூக்கம் என்பன. உறக்கத்தின் பல வகை களையும், நிலைகளையும் எளிதில் பின்வருவனவற் றின் மூலம் பிரித்தறியலாம். அவை மூளை மின் அலைகளின் தன்மை, உடல் சார்ந்த தன்னியக்க மூலம் நடவடிக்கைகள் வெளிப்படும் நடத்தை, தூங்குபவரை எழுப்பத் தேவையான தூண்டலின் தன்மைகள், விழித்தெழுந்த பின் தான் கண்ட கனவு களின் உளவய வெளிப்பாடுகள் என்பனவாகும். விரைவு கண் அசைவுத் தூக்கத்தில், விரைவான கண் அசைவுகளும், கண் இமைகளின் துடிப்பும் காணப்படும். அவற்றிற்கேற்ற மாற்றங்கள் மூளை மின்னலை வரை பட த்தில் தெரியும். விரைவற்ற கண் அசைவுத் தூக்கத்தில் இதயத் துடிப்பும், இரத்த அழுத்தமும், மூச்சுவிடும் அளவும் குறையும். கண் பாவை சுருங்கி உள்ளது. இரைப்பைக் குடல் அசைவும், சுரப்பும் இயல்பு நிலையில் உள்ளன. தசைகள் தளர்ந்த நிலையில் இருக்கின்றன. புவி ஈர்ப்பு, எதிர்த் தசைகள் (கழுத்து, முதுகு, கால் களின் நீட்டுத் தசைகள்) ஆகியவற்றின் திண்மம், விழித்திருப்பவருடையதைவிடக் குறைவாகவே உள் ளது. இந்த விரைவற்ற கண் அசைவுத் தூக்கத்தில், நான்கு நிலைகள் உள்ளன. அவை மெதுவாகச் உறக்கமின்மை 765 சுழன்று கொண்டிருக்கும் கண் அசைவுகள், இயல் பான மூச்சு, துயில் நிலை, குறைந்த இதயத் துடிப்பு குறைந்த மின்னழுத்த மூளை மின்னலைகள் என்பன. குறைவான தூக்கமாக இருப்பதால் எளிதில் விழித்தெழச் செய்ய முடிகிறது. அதற்கேற்ற மின் னலை மாற்றங்கள் ஏற்படும். ஓரளவு ஆழ்ந்த தூக் கம், மெதுவான இதயத் துடிப்பு, குறைந்த இரத்த அழுத்தம், சுருங்கிய கண் பாவைக்கேற்ற மூளை மின்னலை மாற்றங்கள் தோன்றலாம். இந்த நிலை யில் ஆழ்ந்த தூக்கமும் மிகையான மின்னழுத்த மூளை மின்னலைகளும் காணப்படும். இந்த நிலை, முழுமையான நினைவிழப்பை (coma) ஒத்திருக்கும். உறக்கத்தில் ஒரு லயம் காணப்படுகிறது. இயல் பான இரவுத் தூக்கத்தில் 4-6 தூக்க வட்டங்கள் இருக்கும். ஒவ்வொரு வட்டமும் 14 மணி நேரம் நீடிக்கிறது. முதலில் விரைவற்ற கண் அசைவுத் தூக்கக் காலக் கட்டத்தைத் தொடர்ந்து விரைவு கண் அசைவுக் காலக்கட்டம் உள்ளது. சாதாரண மனிதன் அரைத் தூக்கத்தில் சில நிமிடங்களைக் கழிக்கிறான். இதுதான் முதல் கட்டம். இரண்டாம் கட்டத்தில் நடுத்தர வகையான தூக்கமும், மூன்று, நான்காம் கட்டங்களில் ஆழ்ந்த தூக்கமும் அமையும். இதைத் தொடர்ந்து விரைவு கண் அசைவுத் தூக்க நிலை உண்டாகிறது. முதிராக் குழந்தைகள் நாளொன்றுக்குப் பதி னெட்டு மணி நேரமும்,புதுப்பிறப்புகள் 12-16 மணி நேரமும், நிறை இளம் பருவத்தில் எட்டு மணி நேரமும், வயது முதிர்ந்த நிலையில் ஆறு மணி நேரமும் தூங்குவது இயல்பாகும். மது. அமைதி யூட்டிகள், தூக்க மருந்துகள் விரைவு கண் அசைவுத் தூக்கத்தைப் பாதிக்கின்றன. தூக்கத்தில் நடத்தல் அல்லது சிறிநீர் கழித்தல், அச்சமூட்டும் கனவுகள் விரைவற்ற கண் அசைவுத் தூக்கத்தில் நிகழ்கின்றன. உறக்கத்தில் செரட்டோனின், நார்எபிநெஃப்ரின் ஆகியவற்றின் பங்கு ஆராயப்படுகிறது. உறக்கமின்மை மு. ப. கிருஷ்ணன் ஒரு குறையாக நோயாளி முறையிட்டால்தான் உறக்கமின்மையை (insomnia) ஒரு நோய் நிலையாகக் கருத வேண்டும், சிலர், இயல்பாகவே நாளும் 3-4 மணி நேரம் தூங்குகின்றனர். சிலர் 9-10 மணி நேரம் உறங்குகின்றனர். அவ்வாறிருந்தும் அவர்கள், தங்களுக்கு உறக்கமின்மை இருப்பதாகக் கருதுகின்ற னர். அவர்களின் குறைகள் குறைகள் தூங்கத் தொடங்கு