766 உறுத்தலடக்கி
766 உறுத்தலடக்கி வதில் தாமதம், தூங்கிக் கொண்டே இருக்க முடி யாமை, விரைவிலேயே விழித்து எழுந்து விடல் என் பனவாகும். எப்போதாவது உறக்கமின்மை என்பது இயல்பானதேயாகும். இரைப்பைப் புண், மார்பு வலி, ஆஸ்த்மா போன்ற சில நோய்களும், விட்டு விட்டு அல்லது நாட்பட்ட உறக்கமின்மையை உண்டாக்குகின்றன. எனினும் உறக்கமில்லாதோரில் பெரும்பாலோர் உளநோய் கொண்டவர்களாக உள்ளனர். தூக்க மருந்துகள் சிலநேரத்தில் பயனளித் தாலும், இயன்ற வரை அவற்றைத் தவிர்ப்பது நலம் தரும். நீண்ட நாளாக மருந்து எடுத்துக் கொண் டால் அவையும் பயனளிப்பதில்லை. அடிப்படை உள நோயைக் கண்டுபிடித்து உரிய மருத்துவம் அளிப்பதுதான் நீண்டகாலம் பயனைக் கொடுக்கும். மு.கி.பழனியப்பன் உறிஞ்சிக் கோடு காண்க: நிறமாலையியல் உறிஞ்சு குழல் (மின்) பூலோமெட்ரிக் முறைகளில் பயன்படும் மின்திறனை உறிஞ்சும் மின்தடைக்கான உயர் வெப்பக் குணகம் கொண்ட மெல்லிய கம்பியே உறிஞ்சு குழல் (barretter) எனப்படும். அதன் தடையளவின் மாறு பாடு அதனுள் வெளியாகும் மின் திறனின் அள வைக் குறிக்கிறது. இக்கருவி மின்திறனை நேரடி யாக அளவிடவோ, தெரியாத வானொலி அலை வெண் திறனுடன் (radio frequency power) அதற்குச் சமமாக நேர்மின் ஆற்றலை ஒப்பிடவோ பயன்படு கிறது. பொதுவாக ஓர் உறிஞ்சு குழலின் முழு நீளம் ஏறத்தாழ ஓர் அங்குலமாகும். இது ஒரு வீட்ஸ் டோன் சமனியில் (wheatstone bridge) தெரிந்த நேர்மின் அழுத்தம் செலுத்தப்படும் ஒரு பகுதியாகப் பயன்படுகிறது. முதலில் சமனி, அளக்க வேண்டிய வானொலி அலைவெண் திறனை வெளிப்படுத்தும் உறிஞ்சு குழலோடு சமச்சீராக்கப்படுகிறது. வானொலி அலை வெண் திறன் பின்னர் துண்டிக்கப்படுகிறது. செலுத் தப்படும் நோமின் அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலம் சமனி மீண்டும் சமச்சீர் நிலைக்குக் கொணரப் படுகிறது. இவ்விரு நிகழ்வுகளிலும் உறிஞ்சு குழலில் வெளியிடப்படும் நேர்மின் திறன் செலுத்தப்படும் வானொலி அலைவெண் திறனுக்கு ஓரளவு சமமாக இருக்கும். மெல்லிய கம்பி அல்லாத உறிஞ்சி குழலின் ஏனைய பகுதிகளில் ஓட்டு உயர் அலைவெண் இழப்புகள் (parasitic high frequency losses) ஏற்படும் போது, நேர்மின் திறனும், வானொலி அலைவெண் ணும்,முற்றிலும் சமம் என்று ஏற்றுக் கொள்வதால் பிழைகள் ஏற்படக் கூடும். கம்பியின் நீளம் அலை நீளத்தோடு ஒப்பிடும்போதும் குளிர்விக்கும் எந்திர வியல் கருவி, நேர்மின்னோட்டம் மற்றும் வானொலி அலைவெண்களில் வேறுபட்ட மின்னோட்டப் பகிர்வு கள் உருவாக்கும்போதும் இப்பிழைகள் ஏற்படும். இப்பிழைகளைக் கவனத்தோடு ஆய்வு செய் தால் அவற்றை முழுமையாக அறிந்து கொள்ளலாம். வெற்றிடத்தில் இயங்கும் வோல்லஸ்டன் (wollasten ) கம்பிகள் மற்றும் ஹைட்ரஜன் சூழலில் இயங்கும் விளக்கிழைகள் போன்ற நுட்பமான உறிஞ்சி குழல் களை வடிவமைக்க இயலும். போதுமான உணர் தன்மை கொண்ட சமனி களுடன் பயன்படுத்தினால், உறிஞ்சு குழல்களின் துணையால் 16-8 வாட் வரை குறைந்த மின் திறனை அளவிட முடியும். நுண்ணலைகளில் குறைந்த இயற்பியல் பரிமாணங்களில் பராமரிக்க வேண்டிய தேவை, அளவிடக்கூடிய உயர்நிலை மின்திற னுக்கு எல்லையை நிர்ணயிக்கிறது. அது நூறு வாட் வரை அமையக் கூடும். தடை அளவீட்டிற்கும், மின்திறன் ஒப்பிடலுக் கும் பயன்படும் துணை நேர்மின் சுற்றுகளில் வானொலி அலைவெண் வீணாகாமல் வெளிவிடப் படவேண்டிய வானொலி அலைவெண் திறனை உடனடியாக ஈர்க்கும்படி உறிஞ்சு குழல்களை இயக்கவேண்டும். அவை எந்த மின்பாதைகளுடன் பயன்படுத்தப்படுகின் றனவோ, அவற்றின் மின் மறுப்புப் பண்புகளுக்கேற்ற மின்தடை கொண்டவை யாக அமைய வேண்டும். மின்பாதைக்கு ஏற்படும் தடங்கலற்ற மாறுதல்கள் அவற்றில் எதிர் விளைவு ஏற்படுத்தாதவாறு நிறுவ வேண்டும். வானொலி அலைவெண்ணின் பண்புகளைப் பாதிக்காதவாறு நேர்மின்னோட்ட இணைப்புகளைக் கொடுக்கும் வகையில் ஏற்ற மாற்றுப் பாதை முனையங்களை அவற்றில் அமைக்க வேண்டும். உறுத்தலடக்கி எஸ். சுந்தரசீனிவாசன் கரடு முரடான தோல் நைவுகளுக்கு தடலப்படும் களிம்பையோ,நீர்மத்தையோ உறுத்தலடக்கி (demuls- cent) எனலாம். இலத்தீன் மொழியில் டிமல்சீர்(demul- cere) என்பதற்கு மிருதுவாக்குதல் என்பது பொரு ளாகும். இது, சிலேட்டுமப் படலத்தைப் பாதுகாத்து உறுத்தலையும் அடக்குகிறது. கோந்து கொண்ட