உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/794

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

774 உறைதலெதிர்ப்பி

774 உறைதலெதிர்ப்பி பொறிகளில் இந்த வெப்பம் நீரின் மூலம் கடத்தப் படுகிறது. உட்கனல் பொறி மிகவும் குளிர்ந்த சூழ் நிலையில் இயங்காமல் இருக்கும்போது, அப்பொறி யில் இருக்கும் நீர் உறைந்து பனிக்கட்டியாக மாறக் கூடும். அப்போது அதன் கொள்ளளவு, நீராக இருந்த போது இருந்ததைவிட அதிகமாக இருக்கும். இதன் விளைவாகக் குளிர்விக்கும் அறையின் சுவர்களில், விரிசல் ஏற்பட்டுப் பொறி பழுதடையலாம். இதைத் தடுக்க நீரில் ஓர் உறை தடைப்பொருள் (anti freeze agent) சேர்க்கப்படுகிறது. எ.கா: எத்திலின் க்ளைகால், ஆல்கஹால்கள். மெத்தனாலின் கொதிநிலை 65°C, எத்திலின் களைகாலின் கொதிநிலை 190.5°C. இதனால், எத்திலின் கிளைகால் ஆவியாகாமல் நீர்மத் தன்மை யோடு நீருடன் நிலவி உள்ளது. ஆல்கஹால்கள் எளிதில் ஆவியாக மாறி நீரிலிருந்து வெளியேறிவிடும் தன்மை கொண்டவை ஆகும். நீரில் உறைதடைப் பொருள் சேர்க்கப்படுவதால் அக்கலவையின் ஒப்படர்த்தி நீரின் ஒப்படர்த்தி யிலிருந்து மாறுபடுகிறது. நீரில் மெத்தனால் சேர்க் அக்கலவை கப்படுவதால் நீரைவிடக் குறைந்த எடையைப் பெறுகிறது. ஆனால், நீரில் களைகால் சேர்க்கப்படுவதால் அக்கலவை நீரைவிட எடை அதிக மானதாகவும் திண்மமாகவும் ஆகிறது. உறைதடைப் பொருள்களில் பெரும்பாலானவை மெத்தனால் வகைப்பட்டவை ஆகும். மெத்தனால் சேர்க்கப்படுவதால், நீரின் கொதிநிலையும், உறை நிலையும் குறைகின்றன. நீரில் சேர்க்கப்படும் மெத்த னாலின் அளவு அதிகமாக இருந்தால் மேற்காணும் வெப்பநிலைகளும் பெரும்பான்மையாகக் குறை கின்றன. நீர் - மெத்தனால் கலவையில், மூன்றில் ஒரு பங்கு மெதனாலாக இருக்கும்போது அக்கலவையின் கொதி நிலை 82.0° C ஆகும். குளிர்விக்கும் கட்டுமான அமைப்பில் நிறுவப்பட்டிருக்கும் வெப்பக்கட்டுப் படுத்தியால், மேற்கூறிய கலவையின் வெப்பநிலையை 70.0° C அளவில் இருக்கும்படி அமைத்தால், உட் கனல் பொறியின் சாதாரணமான இயக்கத்தின் போது, கொதிநிலையான 82.0°C அளவை அடைவது இயலாததாகும். நீரும் உறைதடைப் பொருளும் சேர்ந்த கல்வை யின் உறை நிலையும், அந்த நிலையைப் பெறுவதற்கு நீரில் சேர்க்கப்படும் உறைதடைப் பொருளின் அள வும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. மெத்தனால் எளிதில் ஆவியாக மாறி வெளியேறி விடுவதால் அடிக்கடி நீர்- மெத்தனால் கலவையின் ஒப்படர்த்தியை ஆய்வு செய் து வரவேண்டும். தேவையான அளவிற்கு மெத்தனாலை அவ்வப்போது சேர்ப்பதன் மூலம் கலவையில், மெத்தனாலின் அளவு உறையும் வெப்பநிலை -12 3 -15 -17.7 -20.5 -23.3 -26.1 க்ளைகால்%224 23 32 35 38 41 மெதனால்%21 24 27 30 32 35 உறையும் -28.8 -31.7 -34 4 -37.2 -40 வெப்பநிலை க்ளை கால்% 43 45 48 மெதனால்% 37 39 42 50 52 46 44 குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். உறைதடைப்பொருளுடன், நீரில், அரிப்பைத் தடுக் கும் பொருளும், துருப்பிடித்தலைத் தடுக்கும் பொரு ளும் சேர்க்கப்படுகின்றன. இவற்றின் செயல்திறன் காலப்போக்கில் குறைந்து விடும் தன்மையதாகும். ஆதலால் குளிர்விக்கும் கட்டுமான அமைப்பில் குளிர் காலம் அல்லாத பிற சமயங்களிலும், நீர் உறைந்து பனிக்கட்டியாக மாறிவிட இயலாத சமயங்களிலும் அப்படியே விட்டுவிடக்கூடாது. விட்டுவிட்டால் சில சமயங்களில் குளிர்விக்கும் கட்டுமான அமைப்பில் நேரக்கூடிய குறைபாடுகளால், அவ்வமைப்பில் இருந்து உறைதடைப் பொருள் கசிந்து குழல் உரு ளைக்குள் சென்று அங்கு அது எண்ணையின் வழ வழப்பாக்கும் திறனைக் குறைத்துவிடும். பண்பு. எந்தக் குளிர்விப்பானின் வெப்ப நிலையைக் குறைக்க வேண்டுமோ அந்தக் குளிர்விப் பானோடு இணைந்து எளிதாக நகரும் தன்மை கொண்டிருக்கவேண்டும். உறைதடைப்பொருள்- குளிர்விப்பான் கலவையின் கொதிநிலை உட்கனல் பொறி இயங்கும்போது அக்கலவை அடையக் கூடிய வெப்பநிலையைக் காட்டிலும் அதிகமானதாக இருக்க வேண்டும். வேதி மாற்றங்களை எளிதில் அடையாததாக, சிறப்பானதாக இருக்கவேண்டும். மேலும் சிறந்த வெப்பக் கடத்தியாகவும் அமைய வேண்டும். உறைதலெதிர்ப்பி க.க. இராமலிங்கம் மாரடைப்பு நோயாளிகளை விரைவிலேயே நடமாட விடுவதாலும், தூக்க மருந்துகளைக் குறைப்பதாலும், படுக்கையிலேயே கை கால்களை அசைக்கப் பணிப்ப தாலும், இதயத் தளர்வுக்கு மருத்துவம் அளிப்ப தாலும், மாரடைப்பு நோயில் ஏற்படும் இரத்த உறை கட்டி, துகள் அடைப்பு போன்ற சிக்கல்கள் மிகவும் குறைந்துவிடும். இரத்த உறைதலெதிர்ப்பு மருந்து