உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/795

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறைநிலைகாட்டியியல்‌ 795

களைச் (anti coagulants) சென்ற பல ஆண்டுகளாகக் கையாண்டபோதும், இதயத் தசைச் சிதைவை இம் மருந்துகள் தடுக்கவில்லை. ஆகவே இரத்த உறை எதிர் மருந்துகளைப் பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும் இடைவிடாத மார்பு வலி, இதயத் தசைச் சிதைவு, இதயத் தளர்வு, அதிர்ச்சி, இதயத் துடிப்பு, லய மாறுபாடுகள் ஆகியவற்றின் போது சில மருந்துகள் இரத்த உறை எதிர்ப்பிகளைக் கையாளுகின்றனர். போதிய ஆய்வுக்கூட வசதி இருந்தால், உறைதல் எதிர்ப்பி மருந்துகளைக் கை யாளலாம். ஹெப்பாரின். இது மிகவும் ஆற்றல் வாய்ந்த, விரைவாக வினை புரியும் உறைதலெதிர்ப்பி மருந் தாகும். 1000 யூனிட்/மி.லி. அல்லது 5000 யூனிட்/மி.லி. சிரை வழியாகக் கொடுக்கப்பட்ட ஒரு சில நிமிடத் திலேயே மருந்து வினை புரிகிறது. தசை ஊசியாகக் கொடுக்கலாம் என்றாலும், உண்டாகும் வலியும், இரத்த உறை கட்டியும் இம்முறையைத் தடை செய் கின்றன. 5000-10,000 யூனிட், 6 மணி நேரத்திற்கு ஒரு முறை 3-4 நாள்களுக்கு ஹெப்பாரின் கொடுக்க நேரிடும். இரத்த உறை நேரம் அடிக்கடி கணக்கிடப் படவேண்டும். ஹெப்பாரின் விளைவு அதிகரிப்பதால் குருதிப் பெருக்கு ஏற்பட்டால், 50 மி.கி. புரோட்ட மின் சல்ஃபேட்டைச் சிரை வழியாகக் கொடுக்கும் போது, குருதி உறைதல் இயல்பான நிலையை அடைகிறது. வாய் வழி உறைதலெதிர்ப்பி மருந்து, வார்ஃபாரின் (2.5/10 மி.கி) ஃபினைல் இண்டானிடியோன் (50 மி.சி. மாத்திரை), ஈதைல் பிஸ்குவோமசிடேட் (300 மி.கி.) ஆகியவை கல்லீரலுள் புரோதிராம்பின் உரு வவாதைத் தடை செய்கின்றன. சிரை வழியாக ஹெப்பாரின் கொடுக்கப்படும் போதே, வாய் வழி மாத்திரைகளையும் கொடுக்கத் தொடங்கலாம். இந்த மருந்துகள் உட்கொள்ளும் போது, புரோதிராம்பின் இயல்பான நேரத்தைவிட 2-2.5 முறை அதிகமாக இருக்கலாம் (இயல்பான புரோதிராம்பின் நேரம் 12-15 வினாடி). தொடக்கத்தில்வார் ஃபாரின் 20-40 மி.கி. ஆகவும் அல்லது ஃபினைல் இண்டனிடியான் 150-200 மி.கி. ஆகவும் இருக்க வேண்டும். குருதிப் பெருக்கு ஏற்பட் டால் சிரை வழியாகப் புதிய இரத்தம் அல்லது வைட்டமின் K கொடுக்கலாம். குருதிப் பெருக்கு நோயுள்ளோர் மற்றும் இரைப்பைப் புண் நோயாளி கள். இரத்தமிகு அழுத்தம் உள்ளோர் ஆகியோருக்கு உறைதலெதிர்ப்பி மருந்துகளைக் கொடுக்கக் கூடாது. வேறு ஏதாவது நோய்களுக்காக ஃபினைல் பியூட்ட சோன், சாலிசிலேட்டுகள், குளோஃபைப்ரேட் ஃபீனேபார்பிடோன் ஆகிய மருந்துகளைப் பயன் உறைநிலைகாட்டியியல் 77S படுத்துவோருக்கு உறைதலெதிர்ப்பி மருந்துகளைக் கொடுக்கக் கூடாது. உறைநிலைகாட்டியியல் அ. கதிரேசன் து நீர்மம், கரைசல் ஆகியவற்றின் உறைநிலை களைக் கண்டுபிடித்து, ஆராய்வதற்கான இயற்பியல் பிரிவாகும். கரைபொருள்கள் கரைப்பான்களில் கரையும்போது கரைப்பான்களின் உறைநிலை தாழும். இத்தாழ்வைப்பற்றிய ஆய்வே இத்துறையின் நோக்கம். ஆவியாகாத ஒரு கரைபொருள் ஒரு கரைப் பானில் கரைக்கப்படும்போது கரைப்பானின் ஆவி அழுத்தம் குறையும். இதைப் படத்திலிருந்து தெரிந்து Po Ps ஆவி அழுத்தம் திண்மம் கரைப்பான் T கரைசல் To வெப்பநிலை கொள்ளலாம். கரைசலுக்கான கோடு திண்மத்தின் கோட்டைத் தொடும் வெப்பநிலை T து கரைப் பானின் உறைநிலையான T.. ஐ விடக் குறைவாக உள் ளது. வெப்பநிலையில் கரைசலின் ஆவியழுத்தம் Ps என்பது T. வெப்பநிலையில் கரைப்பானின் ஆவியழுத் தம் P. ஐ விடக் குறைவாக உள்ளது. எனவே, கரை பொருள் சேர்க்கப்படுவதால் கரைப்பானின் உறை நிலை தாழ்கின்றது. இத்தாழ்வு Ts = T.T ஆகும். இது ஆவியழுத்தக் குறைவால் ஏற்படுகிறது. ரவுல்ட் விதிப்படி ஓர் ஆவியாகாத கரைபொருளால் ஏற்படும் அழுத்தக்குறைவு கரைபொருளின் செறி வுக்கு நேர் விகிதத்தில் இருக்கும். எனவே, Po - P P. Ns இங்கே P என்பது கரைசலின் ஆவியழுத்தத்தையும்,