உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/796

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

776 உறை நிலையியல்‌

776 உறை நிலையியல் P. என்பது கரைப்பானின் ஆவியழுத்தத்தையும், Ns என்பது கரைசலில் எத்தனைப் பங்கு கரைபொருள் (மோல்களில்) உள்ளது என்பதையும் குறிக்கும். எனவே, கரைசலின் செறிவு உயர்வாக இருக்க இருக்க அதன் உறைநிலை தாழ்ந்து இருக்கும். எனவே உறைநிலைத் தாழ்வு, அல்லது, A o Ns Ns A4 = K; N$ ΔΗ இங்கே k என்பது ஒரு மாறிலி. இம்மாறிலி நீர்மத் தின் தன்மையைப் பொறுத்தது. செறிவு குறைந்த ஈருறுப்புக் கரை சலுக்கு, Ns W,/M, W M, × "W,/M, M₁ "W₁ இங்கே,W,,M, என்பன முறையே கரைபொருளின் எடையையும் மூலக்கூறு எடையையும், W2,M, என்பன முறையே கரைப்பானின் எடையையும் மூலக்கூறு எடையையும் குறிக்கும். எனவே, ப= K W₁ M₁ X M W, செறிவினை (concentration) மூலக்கூறு குறித்தால் ATS Kf m செறிவில் இங்கே m என்பது கரைசலின் மோலாலிட்டி ஆகும் (மோவாலிட்டி என்பது ஒரு கிலோகிராம் கரைப் பானில் எத்தனை அளவு கரைபொருள் கரைந்துள் ளது என்பதைக் குறிக்கும் செறிவாகும்). K4 என் பது மோலால் உறைநிலை மாறிலியாகும். வழக்க மாக இந்த மாறிலியை உறைநிலை காட்டியியல் மாறிலி (cryoscopic constant) என்பர். இதன் மதிப்பை, K = RTO² எனும் வாய்பாட்டால் பெறலாம். இதில் R என்பது வளிம மாறிலியையும் To என்பது தூய கரைப்பா னின் உறைநிலையையும் 4 என்பது கிலோ கிராமுக் கான உள்ளுறை வெப்பத்தையும் குறிக்கும். உறை நிலைத் தாழ்வைக் கண்டறியப் பல்வேறு கருவிகள் உள்ளன. மிகப் பரவலாகப் பயன்படுவது பெக்மன் கருவியாகும். சம்பத் உறை நிலையியல் இது ஏறத்தாழ எண்பது டிகிரி கெல்வினுக்கும் தாழ்ந்த வெப்ப நிலைகளை உண்டாக்கும் கலையை யும் அவ்வெப்பநிலைகளில் பொருள்களின் தன்மை களையும், ஏற்படும் நிகழ்வுகளையும் ஆராயும் துறையாகும். தாழ் வெப்பநிலைகளை உண்டாக்குதல். தாழ்ந்த வெப்பநிலைகளை ஏற்படுத்துவதில் முதல்படியாய் அமைவது வளிமங்களை நீர்மங்களாக்குதலாகும். ஒரு வளிமம் அதன் மாறுநிலை வெப்பநிலைக்கு மிகையாக இருக்குமானால் அதனை எவ்வளவு அழுத்தத்திற்குட்படுத்தினாலும் நீர்மமாகாது. மான எனவே, ஒரு வளிமத்தை முதலில் அதன் மாறுநிலைக் கும் குறைந்த வெப்பநிலைக்கும் கொணர்ந்து போது அளவு அமுக்கினால் நீர்மமாகும். நீர்மத் தைக் குறைந்த அழுத்தத்தில் ஆவியாக்கினால் அதன் வெப்பநிலை மேலும் குறையும். இம் முறையில் அந்த நீர்மத்தின் மும்மைப்புள்ளிவரையான தாழ்ந்த வெப்பநிலையை அடைய முடியும். . ஒரு பொருளின் மும்மைப்புள்ளிக்கு, உயர்ந்த மாறுநிலை வெப்பநிலையுடைய பிறிதொரு வளி மத்தை முந்தைய நீர்மத்தின் துணை கொண்டு குளிர்விக்கலாம். இவ்வாறு அதை அதன் மாறுநிலை வெப்பநிலைக்கும் கீழுள்ள வெப்பநிலைக்கும் குளிர் விக்கலாம். பின்னர், இந்த இரண்டாம் வளிமத்தைப் போதுமான அளவு அமுக்கி நீர்மமாக்கலாம். இதை ஆவியாக்கி அதைவிடக் கீழ் வெப்பநிலைகளை உண்டாக்கலாம். இவ்வாறு வெவ்வேறு வளிமங்களை நீர்மமாக்குவதன் வாயிலாகப் படிப்படியாகத் தாழ்ந்த வெப்பநிலைகளைத் தோற்றுவிக்க முடியும். இந்த முறையைப் பிக்டெட் என்பார் பயன்படுத்தி ஆக்சிஜனை நீர்மமாக்கினார். இம்முறையில் சாதாரண வெப்பநிலைகளில் மெத்தில் குளோரைடை அமுக்கி நீர்மமாக்கலாம். நீர்ம மெத்தில் குளோ -24°C வரையான ஆவியாக்கி வெப்ப நிலையை அடையலாம். இது எதிலினின் மாறுநிலை யாகிய +10°C ஐ விடக் குறைந்தது. எனவே. இந்த 24°C வெப்பநிலைக்கு எத்திலினைக் குளிர் வித்து அமுக்கி நீர்மமாக்கலாம். நீர்ம எத்திலினை ஆவியாக்கினால் 169°C வரையான தாழ்ந்த வெப்ப நிலையை அடைய முடியும். இதைப் பயன்படுத்தி ஆக்சிஜன் வளிமத்தை அதன் மாறுநிலையாம் 118°C குறைந்த க்கும் வெப்பநிலைக்குக் குளிர்வித்து, அமுக்கி நீர்ம ஆக்சிஜனைப் பெறலாம். இதை ஆவி யாக்கி நீர்ம வளியைப் பெறலாம். ரைடை ஆனால், படிப்படியாகக் குளிர்விக்கும் முறை யைப் பயன்படுத்தி ஹைடிரஜன், ஹீலியம் ஆகிய வற்றை நீர்மமாக்க முடியாது. ஏனெனில் ஹைடிரஜன் மற்றும் ஹீலியத்தின் மாறுநிலைகளாம்