உறை விந்து 787
வண்ணங்களில் கிடைக்கின்றன. இதனால் ஒவ்வொரு வண்ணத்தையும் ஒவ்வொரு பொலிகாளைக்கென ஒதுக்கிக் கொள்ளலாம். எருமை இனம், பசுவினம் எனப் பிரித்து வைத்துக் கொள்ளலாம். பசுவினம் என்றால் சித்தி ஜெர்சிஃபிரிசியன் ஆகிய இனங்களுக்கு எனத் தனித்தனி வண்ணம் கொண்ட குழாய்களில் வைக்கலாம். குழாய்களில் விந்தை நிரப்பத் தனிக் கருவி உள்ளது. அவ்வாறு நிரப்பப்பட்ட குழாய்கள் இரு புறமும் அடைக்கப்படுகின்றன. இக்குழாய் முதலில் குளிர்ந்த நீரில் 5°Cஇல் வைக்கப்படுகிறது. 4-6 மணி நேரம் வைத்தபின்தான் உறைய வைக்க வேண்டும். இவ்வாறு வைத்திருப்பதற்குச் சமநிலைப்படுத்தல் என்று பெயர். பின் இவை தெர்மாஸ் குடுவைகளில் பனிக் கட்டிகள் வைத்தோ குளிர்பதனப்பெட்டி மூல உறைவிந்து 787 மாகவோ 0°Cக்கு கொண்டு வரப்படுகின்றன. உறைப்பகுதி மூலம் 1°C/நிமிடம் என்ற வீதத்தில் 0°C முதல் -15°C வரை உறைய வைக்கப்படும். பிறகு -3°C -4 °C என்ற வீதத்தில் -15°C -70° க்கு உறைய வைக்கப்படும். இவ்வாறு உறைய வைத்தபின் இவை நீர்ம நைட்ரஜனில் சேமித்து வைக்கப்படுகின்றன. நீர்ம நைட்ரஜன் - 196°C கொண்டது. இவற்றைச் சேமித்து வைக்கத் தனிக் குடுவைகள் உள்ளன. நீர்ம நைட்ரஜன் என்பது நீர்ம ஆக்சிஜன் தயா ரிக்கும்போது கிடைக்கும் துணைப் பொரு ளாகும். வளி மண்டலத்தில் இருக்கும் காற்றில் 73% நைட்ரஜன், 22% ஆக்ஸிஜன், 2% கார்பன் டை ஆக்சைடு, சிறிதளவு கிரிப்டான், ஹீலியம்,ஆர்கான், நியான், ஃப்ரியான் முதலியன உள்ளன. வெளி மண்டலத்தில் இருந்து உட்கவரப்படும் நைட்ரஜன் நீர்மமாகத் திரட்டப்படுகிறது. அ.க. 5-50அ நுண் உறைவி