உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/808

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

788 உன்னிச்செடி

788 உன்னிச்செடி நீர்ம நைட்ரஜனில் சேமித்து வைக்கப்பட்டி ருக்கும் உறை விந்தை வேண்டும்போது வெளியே எடுத்துச் சில நிமிடம் நீரில் (5°C) வைத்துப் பயன் படுத்தலாம். இந்தக் குழாய்களைக் கருவூட்டல் கருவி களில் பொருத்திக் கருவூட்டல் செய்வர். கருவூட்டல் செய்யப் பசுவினத்திற்கு முப்பது மில்லியன் விந்து அணுக்களும், எருமை இனத்திற்கு ஐம்பது மில்லிய னும் தேவைப்படுகின் றன. க உறைவிந்தின் நன்மை. உயர் இனப் பொலி காளைகளின் விந்தைப் பல ஆண்டுகள் (10-14) சேமித்து வைக்கலாம். தேவையான பொலி காளை களின் விந்தைத் தேவையானபோது பெறலாம். அதிக அளவு கருவூட்டல் செய்ய முடிகிறது. விந்தை ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்திற்கு எளிதாக டுத்துச் செல்லலாம். பொலி காளையைக் கொண்டு செல்ல வேண்டியதில்லை. சேகரிக்கப்பட்ட வீந்து கழிவு, இழப்பு முதலியவை ஏற்படாமல் முழுமை யாகப் பயன்படுகிறது. நீர்ம விந்தை நாள் ஒன்றுக்கு அல்லது இரு நாள்களுக்கு ஒருமுறை கருவூட்டல் நிலையங்களுக்கு அளிக்க வேண்டும். ஆனால் உறை வித்து வந்த பிறகு ஒரு முறை கொண்டு சென்று நீர்ம நைட்ரஜன் குடுவைகளில் வைத்து விட்டால் போதும். மீண்டும் தேவைப்படும்போதுதான் அளிக்க வேண்டும். இத னால் அலைச்சல், நேரம் வீணாவது ஆகியவை தடுக்கப்படுகின்றன. விந்தை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குக் கப்பல்கள் மூலம் கொண்டு செல்வது எளிதாகிறது. நோய் பரவுவதும் தடுக்கப் படுகிறது. இது ஒரு சிறந்த தொழிலாகவும் விளங்கு கிறது. உறை விந்து தமிழகத்தில் ஈச்சங்கோட்டை. கால்நடைப் பண்ணை, சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, நீலகிரியில் வெளிநாட்டினக் கால்நடைப் பண்ணை, கர்நாடகத்தில் ஹசர்கட்டா, கேரளத்தில் மாட்டுப்பட்டி ஆகிய இடங்களில் தயாரிக்கப்படுகின்றது. உறை விந்தில் சில குறை பாடுகள் உள்ளன. அவை சில பொலி காளைகளின் விந்து உறைவிந்து தொழில் நுட்பத்தால் உறைவ நோய்வாய்ப்பட்ட கால்நடைகளின் தில்லை; சில விந்தை உறைய வைப்பதால் பசுக்கள் பாதிக்கப்படு கின்றன. பொருட்செலவு மிகவும் அதிகமாகிறது. பா. நாச்சி ஆதித்தன் உன்னிச் செடி இதன் தாவரவியல் பெயர் லாண்ட்டானா காமிரா என்பதாகும். இது வெர்பினேசி எனப்படும் இரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இச்செடி ஐமைக்காவைத் தாயகமாகக் கொண்டது. அங்கிருந்து அதன் வண்ண மலர்களுக்காகப் பிற வெப்பமண்டல நாடுகளில் புகுத்தப்பட்டதால் ஆங்காங்கே நிலைத்து விட்டது. சில பகுதிகளில் கேடு தரும் களைச்செடி யாகவும் மாறியுள்ளது. இச்செடி இந்தியா முழு வதிலும் பரவியிருப்பதைக் காணலாம். லான்ட்டானா என்ற இனத்தில் நூற்றைம்பது சிற்றினங்கள் உள் ளன. உன்னிச் செடிக்கு மகதம்பூ என்ற பெயரு முண்டு. வளரியல்பு. உன்னிச் செடி ஓர் உயரமான செடி யாகும். பொதுவாக இரண்டு மூன்று மீட்டர் உயரம் வளரக்கூடியது. இது பெரும்பாலும் புதர்போன்றும் சில சமயம் கொடி போன்றும் வளரக் கூடியது. தண்டு நான்கு பட்டைகளாக இருக்கும். இதன் மூலை களில் வளைந்த சிறு முள் காணப்படும். கிளைகளில் தடித்த தூவிகள் உண்டு. இலை. எதிரிலையடுக்கு அமைப்புடையது; இலை யடிச் செதில் அற்றது. இலைக்காம்பு 3-5 செ.மீ நீளமிருக்கும். இலைப்பரப்பு 5-7 செ.மீ. முட்டை வடிவம் கொண்டது. ஓரங்கள் பற்கள் போன்றது. இலைகளிலும் சிறு முள்கள் காணப்படும். மேலும் கீழ்ப்பரப்பில் சொரசொரப்பான தூவிகள் காணப் படும். செடி அருவெறுக்கத்தக்க மணமுடையது. மஞ்சரி. தண்டு நுனி ஸ்பைக் மஞ்சரியாகும். இலைக்கோண மஞ்சரிகள் சிறியவை. மஞ்சரிக்காம்பு சற்று நீண்ட தலை வடிவம் கொண்டது. பூவடிச் செதில்கள் சிறியவை. முட்டைவடிவம் கொண்டவை. மலர். முழுமையானவை. இருபால் ஒழுங்கற் றவை. இருபக்கச் சமச்சீரும் ஐந்து அங்கப்பூவும் கொண்டவை. புல்லிவட்டம். சிறிய கிண்ணம் போன்றது. மடல் கள் எண்ணிக்கைக்கு உரிய அறிகுறிகள் இல்லை. தூவிகளைக் கொண்ட டது. அல்லிவட்டம், ஐந்து அல்லிகள் இணைந்த, ஈருதடு வகையாகும். மேலுதட்டைச் சேர்ந்த இரு அல்லி மடல்களும் இணைந்து காணப்படும். கீழுதட்டில் மூன்று அல்லி மடல்கள் இருக்கும். நான்கு அல்லிகள் மடல்களே கொண்டது. மடல்கள் சமமற்றவை. நுனி வட்டமாக இருக்கும். அல்லிக்குழல் குறுகலாக நீண்டிருக்கும். நடுவில் சற்றுப் பருத்துக் காணப் படும். மகரந்தத்தாள். நான்கு அல்லி இணைந்தவை. மகரந்தக் கம்பிகள் சமநீளமுள்ளவை. ஆனால் அல்விக்குழலில் இரு மகரந்தத்தாள்கள் மற்றவற்றை விட உயரத்தில் அமைந்திருக்கும். இவ்வமைப்பிற்கு டைடினாமல் என்று பெயர். மகரந்தப்பை அறைகளைக் கொண்ட து. இரு சூலகம். இரு சூலறைகளும் இணைந்தவை. மேல் மட்டச்சூல்பை சூல்கள் அறைக்கு ஒன்றாக இரண்டு