உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/825

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊட்டு நீர்‌ 805

செய்யும் அளவில் அவற்றில் விதியத்தை விரவ விட்டு அதிகத் தடிமனுள்ள துலக்கிகளை உருவாக்கலாம். இத்தகைய படிகங்கள் ஏழு மில்லி மீட்டர் தடிமன் மெல்லிய நுழை வரை உருவாக்கப்பட்டுள்ளன. வாயில்களையும் வெளியேறு துளைகளையும் பொருத் திய திண்ம நிலைத் துலக்கிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து உயர் ஆற்றல் துகள்களைத் தடுத்து நிறுத்தும் அளவுக்குத் தடிமனுள்ள அமைப் பைப் பெறலாம். ஜெர்மேனியத் துலக்கிகளுக்குத் துகள்களைத் தடுத்து நிறுத்தும் திறமை மிகுதி. ஆனால் அவற்றை நீர்ம நைட்ரஜன் வெப்பநிலையில் தான் இயக்க முடியும். சிலிகான் துலக்கியின் பின் பரப்பில் ஒரு மின் தடைப பூச்சை அமைத்து அதன் இருமுனைகளிலிருந்தும் சைகைகளைப் பதிவு செய் வதன் மூலம் அதை நிலை உணர்த்து (position sensitive) அமைப்பாக மாற்றலாம். ஆனால் கருவிகளின் நீளம் பத்து சென்ட்டிமீட்டருக்கு மேல் போவதில்லை. அவற்றின் நிலைப் பிரிகைத் திறன் அவற்றின் நீளத்தில் ஏறத்தாழ ஒரு விழுக்காடு மட் டுமே. க் திண்மநிலைத் துலக்கிகளை ஒரு பல உறுப்பு அமைப்பில் பொருத்தி ஒரு வினையிலிருந்து வெளிப் படக் கூடிய வெவ்வேறு வகைத் துகள்களைப் பிரித் தறிய முடியும். எடுத்துக்காட்டாக ஓர் இரட்டைத் துலக்கி அமைப்பில் முதலில் உள்ள மெலிந்த துலக்கி, துகளின் ஆற்றல் இழப்பு வீதத்திற்கு நேர்விகிதத்தி லுள்ள ஒரு சைகையை அளிக்கும். அடுத்துள்ள . தடிமனான துலக்கி, துகளின் மொத்த ஆற்றல் இழப் புக்கு நேர் விகிதத்திலுள்ள சைகையை வெளியிடும். இரு சைகைகளின் கூட்டுத் தொகையிலிருந்து மொத்த ஆற்றல் இழப்பு இழப்பு கிடைக்கும். ஆற்றல் இழப்பு வீதம் ஏறத்தாழத் துகளின் நிறைக்கும், நிறை எண்ணின் இருமடிக்கும் நேர் விகிதத்திலிருக் எனவே வெவ்வேறு கும். நிறையும் மின்னும் கொண்ட துகள்களைப் பிரித்தறிய முடியும். அணுக்கரு வினைகளிலிருந்து வெளிப்படும் மின் துகள்களைக் கண்டுபிடிக்கப் பல வகையான காந்த நிறமாலை அளவிகள் பயன்படுகின்றன. துகள் பாதை களின் வளைவு ஆரங்களிலிருந்து உந்தத்தையும் ஆற்றலையும் கணக்கிடலாம். தேவையற்ற துகள் துலக்கியை எட்டாத வகையில் திசை திருப்பி விட முடிவது இக்கருவிகளில் உள்ள ஒரு வசதியாகும். இக்கருவிகளில் இறுதி நிலை ஆற்றல் பிரிகை சிறப் பாக அமைகிறது. ஊட்டு நீர் நீராவி கே.என்.இராமச்சந்திரன் தயாரிப்பதற்காகக் கொதிகலனுக்குள் செலுத்தப்படும் நீர் கொதிகலனையும் அதன் துணை ஊட்டு நீர் 805 கூ உறுப்புகளையும் தாக்காதவாறு தூய்மையாக இருக்க வேண்டும். பொதுவாக நீர் தூய்மையற்று இருப்ப தால் அதை நேரடியாகக் கொதிகலனில் பயன்படுத்த முடியாது. எனவே அந்நீரில் உள்ள அழுக்கை வேதி முறையிலோ, ஏனைய முறைகள் மூலமோ நீக்கிக் கட்டுப்படுத்திய பிறகே ஊட்டு நீராகச் (feed water) செலுத்த வேண்டும். நீரைப் பொறுத்தும், கொதிகலனுக்குள் ஏற்படும் நீர் இழப்பைச் சீர் செய்ய அல்லது சமன்செய்யச் செலுத்தும் நீரைப் பொறுத்தும் மிகை அழுத்தக் கொதிகலனைப் பொறுத்தும் ஊட்டுநீர் தேவைப் படும் மாற்றுமுறைகள் வேறுபடுகின்றன. ஊட்டுநீர், குளிர்விக்கப்பட்ட நீராவியும் பதப் படுத்தப்பட்ட நீரும் (treated water) சேர்ந்த கலவையாகும். இக்கலவையின் விகிதங்கள் கொதி சுலனுக்குள் ஏற்படும் நீர் இழப்பைச் சரிகட்டச் செலுத்தும் ஊட்டுநீரின் தேவையைப் பொறுத்து வேறுபடும். முற்றுப்பெற்ற ஆற்றல் சுற்றில் (closed) power cycle) ஏற்படும் இழப்பு குறைவாக இருக்கும். திறந்த ஆற்றல் சுற்றில் (open power cycle) இயங்கும் வெப்பம் பதனிடும் தொழிற்சாலைகளில் நீராவிபயன்படுகையில் மிகுதியான இழப்பு ஏற்படும். நீரில் கரைந்து படிந்துள்ள திண்மப் பொருள் களைக் கொதிகலனில் பயன்படுத்தும்போது வெப்பம் கடத்தும் பகுதிகளில் ஏற்படும் துருப்பிடித்தலையும் வெப்பக்கடத்தலையும் தடுக்கக்கூடிய படிமங்களை ஏற்படுத்தும். எனவே அப்பொருள்களை நீக்கவோ துருப்பிடித்தலைத் தடுக்கும் பொருள்களாக மாற் றவோ வேண்டும். மாற்றுமுறையின் திறன் கையா ளப்படும் வழிமுறைகளைப் பொறுத்து ஊட்டுநீர் வேறுபடும். நீரில் கரைந்துள்ள வளிமங்களான ஆக்சிஜன் கார்பன் டைஆக்சைடு போன்றவற்றால் கொதிகலன் பகுதிகளில் துருப்பிடிக்கத் தொடங்கும். எனவே, நீரில் கரைந்த ஆக்சிஜன் போன்ற வளிமங்களை நீக்கிய பின்னரே ஊட்டுநீரைக் கொதிகலனுக்குள் செலுத்த வேண்டும். பெரும்பாலும் நீரைக் கொதிக்க வைத்துக் குளிர வைக்க முடியாத வெளிப்போக்கு வளிமங்களைக் குளிரூட்டிகளில் செலுத்தி மேற்கண்ட வளிமங்களை நீக்கலாம். இல்லாவிட்டால் வெப்பம் ஊட்டி வளிமம் பிரிக்கும் கருவியில் நீரைத் தெளித்து நீரில் கரைந்துள்ள வளிமங்களை மீண்டும் நீரில் கரையாதவாறு பிரிக்கலாம். மிகவும் தூய ஊட்டுநீர் அமைப்புகளில் கொதி கலனின் பகுதிகள் குழாய்கள் வெப்பம் ஊட்டும் கருவி ஆகியவற்றில் துருப்பிடித்தலைத் தவிர்க்க வேண்டும். மேலும் தாது உப்புகளைக் குளிரவைக்க நீர்ம மற்றும் வளிம நிலையிலுள்ள அம்மோனியா வைப் பயன்படுத்தலாம். -செ.சின்னராஜ்