உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/826

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

806 ஊடான்‌ மீன்‌

806 ஊடான் மீன் ஊடான் மீன் இந்தியக் கடல்களில் மலேயா தீபகற்பம் வரை பரவி யுள்ள ஊடான் மீன் (getres filamentosus) ஏறத் தாழ இருபது சென்ட்டிமீட்டர் வளரக் கூடியது. இது ஆஸ்ட்டி இக்தைஸ் வகுப்பில் ஆரைத் துடுப்பு மீன்களின் துணை வகுப்பாகிய ஆக்ட்டினோட் டெரிஜையில், மேல் வரிசை டீலியாஸ்டியில், அக்காந் தோட்டெரிஜையை வரிசையில் பெர்சிடே குடும்பத் தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் உடல் பக்க வாட்டில் தட்டையாகச் சற்று உயரமான அமைப் புடையது. துடுப்புகளில் கூர் முள்ளும் துடுப்பு ஆரை களும் உள்ளன. முழு வளர்ச்சியடைந்த மீனின் முதுகுத் துடுப்பின் இரண்டாம் கூர்முள், வால் துடுப்பு வரை நீண்டுள்ளது. இளம் மீன்களில் இது குட்டையாக உள்ளது. முதுகுத் துடுப்பின் பின்பகுதியிலுள்ள நான்கைந்து கூர்முள்கள் துடுப்பு ஆரைகளை விடச் சிறியவை. மார்புத் துடுப்புகள் பெரியவை, மலப்புழைத் துடுப்பி லுள்ள மூன்று கூர்முள்களில் இரண்டு மூன்றாம் கூர்முள்கள் ஏனையவற்றைவிட நீளமானவை.வால் துடுப்பு, அதன் நடுவிலுள்ள ஆழ்ந்த பிளவால் இரு மடல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முழு வளர்ச்சியடைந்த ஊடான் மீன் வெள்ளி மேல்பாதியில் நீலநிறப் நிறமுடையது.உடலின் புள்ளிகள் நீளவாட்டத்தில் வரிசையாகக் காணப் படுகின்றன. முகத்தின் முன்பகுதி கறுப்பு நிறமுடை யது. முதுகுத் துடுப்பு உடலோடு இணைந்துள்ள இடத்திற்குச் சற்று மேலே ஒவ்வொரு கூர்முள்ளின் அடியிலும், துடுப்பு ஆரையின் அடியிலும் ஒரு சுறுப்புப் புள்ளி உள்ளது. முதுகுத் துடுப்பின் விளிம்பு சுறுப்பு நிறமானது. வால் துடுப்பு சாம்பல் நிறமாகவும், ஏனைய துடுப்புகள் மஞ்சள் நிறமாக வும் சிறு புள்ளிகளுடனும் உள்ளன. இளம் மீன் களின் உடலில் செங்குத்தான பட்டைகள் காணப் படுகின்றன. இந்த மீனின் வாய் சற்றுக் கீழ்ப்பக்க மாக அமைந்துள்ளது. வாய் முன்பக்கம் நீளக் கூடி யது. ஆறு செவுள்மூடி ஆரைகள் உள்ளன. முள் செவுள்மூடித்தகடு முழுமையானது. செதில்கள் நடுத் தர அளவுடையவை ; கண்கள் பெரியவை; பற்கள் சிறியவை; நீள் உருளை உருவம் உடையவை; காற் றுப்பை எளிய அமைப்புடையது. ஜெர்ரஸ் பொது வினத்தைச் சேர்ந்த மேலும் எட்டுச் சிறப்பின மீன் ஊடான் மீள்