உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/835

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊதல்‌ நோய்‌ (சித்த மருத்துவம்‌) 815

பட்டைகள் ஆகியவற்றில் ஓரளவுக்கு அவை தடை யாகவும் உள்ளன. அனைத்துத் திசுக்களிலும், குருத் தெலும்பே புற்று பரவுவதைத் தடுக்கிறது. சிரை களும், நிணநீர்க்குழாய்களும் தமனிகளைவிட விரை வில் தாக்கமுறுவதுண்டு. இதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. விரிவான முறையில் ஆராய்ந்து நீண்டகாலம் கண்காணித்த பின்னர், பின்வரும் கருத்துக்கள் வெளி வந்துள்ளன. ஆனால் இவற்றில் கருத்து வேறுபாடு களும் உண்டு. காரணம். அழுத்தம், ஒன்றுசேர்ந்து ஒட்டிக் கொள்ளும் தன்மை குறைதல், புற்றுத் திசுக்களின் மிகை நடமாட்டம், ஒரு திசுவை மற்றொரு திசு நெருங்குவதைத் தடுத்துச் செயலாற்றும் தன்மை யின்மை, அவை வெளியிடும் அழிக்கும் என்சைம் ஆகியவையும் புற்றுநோய்க் கட்டிகளின் வகைக்குத் தக்கவாறு தனித்தனியே எதிர்ப்பொருள் இருப்பதும் தூண்டி விட்டு அது தடைக்காப்பு விளைவைத் எதிர்ப்புப் பொருளை ஏற்படுத்தும்போது ஏற்படும் அழற்சியும், புதிய திசுக்களை அழித்துப் புற்றுநோய் பரவக் காரணங்களாகின்றன. ஊடூர்தல் சுவயம் ஜோதி நிலைகள் திசு அழற்சியடையும்போது பல நோய் உருவாகின்றன. அடிப்படையில், நுண்நாளச் சுவர் களின் ஊடுருவும் தன்மை அதிகரிப்பால், பெருமள வில் நீர்மம், இரத்தத்திலிருந்து வெளிப்பட்டுத் திசுவின் செல் இடைவெளிகளில் தேங்குகிறது. வேகம் அதிகமாக இருப்பதால், இது திசுக்களில் தேங்கி, வீக்கத்தை உண்டாக்குகிறது. அழற்சியின் முதல் நிலை இரத்த நாள விரிவடை தலும் அவற்றின் ஊடுருவிச் செல்லும் ஆற்றல் அதிகரிப்பதுமேயாகும். இரண்டாம் நிலையில் செல் விழுங்கிகளும் (phagocytes) நியூட்ரோபில்களும், ஒரு செல் வெள்ளணுவும், அழற்சியடைந்த இடத் திற்கு வருகின்றன. இரத்தக் கசிவு அதிகமாகும் போது நியூட்ரோஃபில்கள், இரத்த நாளத்தின் எண்டோதீலியத்துடன் ஒட்டிக் கொள்கின்றன. இதை மார்ஜினேஷன் (margination) என்பர் (இரத்த அணுக்கள் இரத்த நாளச் சுவர்களுடன் ஒட்டிக் கொள்வது மார்ஜினேஷன் ஆகும்). பின்னர், இவை இரத்த நாளச்சுவரை ஊடுருவி, பாதிக்கப்பட்ட இடத்தை அடைய முயற்சிக்கின்றன. இடம் விட்டு இடம் மாறும் இந்த அமீபா போன்ற அசைவையே ஊடூர்தல் (diapedesis) என்பர். இந்த அசைவு 23 ஊதல் நோய் (சித்த மருத்துவம்) 8/5 நிமிடம் நீடிக்கின்றது. நியூட்ரோஃபில்களின் அசைவு, வேதி அமைப்பைப் பொறுத்து அமையும். சில வேதிப் பொருள்கள் நுண் கிருமிகள் ஆகியவற்றால் நியூட் ரோஃபில்கள் கவரப்படுகின்றன. எலும்பு மஜ்ஜையிலிருந்து வரும் மிகைச் செல் களால், அதிசுமான நியூட்ரோபில்கள் வெளி வரு கின்றன. இதற்கு வெள்ளணு ஊக்குவிக்கும் பகுதியே காரணமாகும். இது அழற்சியடைந்த திசுக்களி லிருந்து வெளிவருகிறது. ஃபேகோசைடோசிஸ் முறை மூலம், நியூட்ரோஃபில்கள் உட்புகுந்த கிருமிகளை அழிக்க முயற்சிக்கின்றன. ஆகவே அழற்சி மறு வினைகளின் பல நிலைகளில் ஊடூர்தலும் ஒரு நிலை யாகும். மு.ப. கிருஷ்ணன் ஊதல் நோய் (சித்த மருத்துவம்) உடலில் இரத்தம் குறைந்து நீர்கோத்து ஊதுதல், ஊதல் நோய் எனப்படும். சோகை, சோபை, தொம்மை நோய், அதைப்புநோய், சோகை,சுரப்பு நோய் என்ற பெயர்களும் இதற்கு உண்டு. இந்நோயில் உடற்குருதி கெட்டு, உடல் வெளுத்து, கைகால்கள் முகம் வயிறு முதலியவை இயற்கைக்கு மாறாக ஊதிக்கொண்டே வருவதால், இதை ஊதல் நோயென்றும், சோகம் உண்டாவதால் சோகை அல்லது சோவை என்றும் கூறுவர். சிலர் வீக்கம் உண்டாவதால் சோபை என்பர். எனினும், சோகை, சோவை, சோபை இம்மூன்று சொற்களும் ஒரே பொருளையுடையனவாகும். அழைப்பு, சிறப்பு என்பனவும் வீக்கம் என்பதையே குறிக்கும். அடி பட்டு வீங்குவதையும், கட்டி முதலியவற்றால் வீங்கு வதையும் சோபை என்றும் சிலர் கூறுவர். ஊதல் நோய் சோற்றில் வெறுப்பு; உடல்வலிமை குறைதல்; கைகால்கள் சோர்வடைதல்; உடல் முழுமையும் வீக்கம்; விரை பெரிய பையைப்போல் வீங்குதல்; காது குரங்கின் காதுபோல் மெலிந்து காது கேளாமை; காகத்தின் கண்ணைப்போல் சாய்ந்து நோக்குதல்; சோம்பல்; இருந்த இடத்தை விட்டு அசைய முடியாமை; படுக்கையில் கிடத்தல்; உடல் வெளுத்தல்; பெருமூச்சுவிடல், ஆயாசம், இளைப்பு, இருமல், மயக்கம், கண்கள் இருளல் என்னும் குறி குணங்களைக் காட்டும். நீரும் மலமும் கட்டுப்படும், சிலவேளை பேதி காணும்; சிறுநீர் சுரப்பது மிகவும் குறைந்து இருக்கும். நோய் வரும் வழி. வெளுப்பு நோயின் தொடர் பொருள்களை பாலும், நச்சுப் உட்கொள்ளுவ