உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 எண்டோப்பிளாச வலை

128 எண்டோபிளாச வலை பாக்டீரியா, நீலப்பச்சைப் பாசி போன்ற உயிரிகளில் இந்த வலை காணப்படுவதில்லை. புறத்தோற்றம். இந்த வலை அமைப்பு கெய்த் போர்ட்டர் என்பவரால் 1945 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. இது செல்லுக்குச் செல் வகை களுக்கு ஏற்ப மாறுபடும் அமைப்பு உடையது. மூன்று வடிவமைப்புகளில் இதனைக் விதமான முடிகிறது. சிஸ்டர்னேக்கள். வை காண தனித்தனியாகவும் தட்டையாகவும், நீளமாகவும் உள்ள நீளக்குழல்கள் (வாய்க்கால்கள்) ஆகும். இவற்றின் பருமன் 40-50 மைக்ரான் ஆகும். தண்டுவடம் மூளை ஆகிய வற்றிலுள்ள நரம்புச் செல்களில் இந்தச் சிஸ்டர் னேக்கள் அதிகமாக உள்ளன. குமிழிகள். இவை சவ்லினால் சூழப்பட்ட, நீர்மம் நிரம்பிய, முட்டைவடிவக் குமிழிகளாகும். இவை தனித்தனியாகவும் பெரியனவாகவும் சிறியன வாகவும் சிறு கட்டங்களாகவும் உள்ளன. இவற்றைக் குறிப்பாகக் கணையத் திசுக்களில் அதிகமாகக் காணலாம். நுண்குழல்கள். சிஸ்டர்னேக்களுடனும் குமிழ் களுடனும் பின்னிக்கிடக்கும் கிளைகளுடைய மிகச் சிறுகுழல்களே நுண்குழல்கள் எனப்படுகின் ன்றன. இவற்றின் பருமன் 50-190 மைக்ரான் ஆகும். மின்னணு நுண்ணோக்கி வழியாக அகப்பிளாச வலை அமைப்பினைக் கண்டறியும்போது மேலே விவரிக்கப்பட்ட மூன்று வலை அமைப்புகளும் அடங்கிய நுண்ணுறுப்பு, செல்களில் அமைந்துள்ளது என்பதனை உறுதிப்படுத்தலாம். இச்சவ்வின் தடிமன் 50-60 ஆங்ஸ்ட்ராம் அலகு ஆகும். ஓர் ஆங்ஸ்ட்ராம் (angstrom) என்பது ஒரு மில்லிமீட்டரில் மில்லியனில் ஒரு பங்கு ஆகும். இந்தவலை அமைப்பு மூன்று அடுக்குகளால் ஆகிய சவ்வு உடையதாகும். நுண்ணுறுப்புகளின் சவ்வும். செல்லின் புறச்சவ்வும் ஒரே அடிப்படை அமைப்பு உடையன. இவற்றில் மூன்று அடுக்குகள் உள்ளன மூன்று அடுக்குகளுள் இரண்டு அடுக்குகள் புரத அடுக்கு களாகும். இவ்விரண்டிற்குமிடையில் ஒரு லிப்பிட் கொழுப்பு அடுக்கு இருக்கும். அனைத்துச் சவ்வுகளும் மூன்றடுக்குகள் உடையனவே ஆயினும், ஒவ்வொரு சவ்வும் அதில் காணப்படும் நொதிகளின் தன்மையால் அவற்றின் செயல்திறம் வேறுபடும். செல்சவ்வு, கோல் கித்தொகுப்பு ஆகியவற்றுடன் அகப்பிளாச வலை அமைப்பு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இந்த அகப்பிளாச வலை அமைப்பு இரண்டு வகையான தோற்றங்களைப் பெற்றுள்ளது. புரதம் தயாரிக்கும் ரைபோசோம்கள் பல இடங்களில் இதன் மீது ஒட்டிக்கொண்டிருக்கும். அந்தப் பகுதி சொர 1. 1. 3 பிளாச வலைப்பின்னலின் இருவிதத் தோற்றம். வலைப் ரைபோசோம்கள் 2. சொரசொரப்பான பிளாச பின்னல் 3. வழவழப்பான எண்டோபிளாச வலைப்பிள்னல் சிஸ்டர்னேக்கள் 1. வெசிக்கின்கள் ட்யூபியூல்கள் 4. ரைபோசோம்கள். சொரப்பான அகப்பிளாச வலை எனப்படும். ஏனைய பல இடங்களில் சவ்வின் மேற்பரப்பில் ரைபோசோம் கள் இருப்பதில்லை. இந்தப் பகுதி வழவழப்பான வலைப்பகுதி எனப்படுகிறது. இந்த இரண்டு வகைத் தோற்றமும் ஒரே செல்லில் காணப்படுகிறது. அகப்பிளாச வலை அமைப்பின் தோற்றமும் செயல் பாடுகளும். அகப்பிளாச வலை அமைப்பு நியுக்ளி யசின் புறச்சவ்விலிருந்து தோன்றுகிறது எனக் கருதப்படுகிறது. ஆனால் சிலர் இது செல் சவ்வி லிருந்து தோன்றுகிறது என்று கூறுகின்றனர். களைச் செயல்பாடுகள். அகப்பிளாச வலை அமைப்பின் அகப்பிளாச வலை அமைப்பு சுரத்தல், சேமித்தல், வழங்கல், உணர்வுகளைக் கடத்துதல் முதலிய பணி வலை செய்கிறது. இந்த அமைப்பு ஒரு சட்டகம் போலச் சைட்டோபிளாசத்திற்குப் பற்றுக் கோடாயுள்ளது. செல்லினுள்ளும், வெளியிலும் நீர் மங்களும், வளிமங்களும் அயனிகளும் ஊடுருவிக் கடந்து செல்ல இது பயன்படுகிறது. இன்றியமையா ஆக்க வேலைகளுக்குப் பயன்படும் பல நொதிப் பொருள்கள் இதில் உள்ளன. இவற்றின் உதவியால் புதிய பொருள்களை உற்பத்தி செய்வதுடன்