எண்டோபுரோக்டா 129
வளர்சிதை மாற்றப் பணிகளையும் செய்கிறது. நரம்புத் தூண்டல் உணர்வுகளைக் கடத்துகிறது. செல்களின் உள்ளே வருகின்ற பல வேதிப்பொருள்களின் நச்சுத் தன்மையை அகற்றிச் செல்களைப் பாதுகாக்கிறது. செல் பகுபடுதலுக்குப் பிறகு புதிய நியுக்ளியச் சவ் வினைத் தோற்றுவிக்கிறது. பொதுவாக இரண்டு வகை வலை அமைப்புகளும் மேற்கூறிய வேலைகளைச் செய்கின்றன என்றாலும் அவை ஒவ்வொன்றும் தனித்தனியே தங்களுக்கே உரிய சில வேலைகளைச் செய்கின்றன. ரைபோசோம் கள் நிறைந்த சொரசொரப்பான வலை அமைப்புப் பகுதி புதிய புரதப்பொருள்களை உருவாக்குகிறது. கொழுப்புச் சத்துகளை உருவாக்குதல், விலங்கிற்குப் போதுமான உணவு கிடைக்காத காலங்களில் குளுக் கோஸ் பொருளைச் சிதைத்து அதனை மூலப்பொருள் உணவாகப் பயன்படுத்துதல், கொலஸ்ட் களாக்கி ரால்கள், டெஸ்டோஸ்டீரோன்கள், புரோஜெஸ் டீரோன், ஹார்மோன்கள், கிளிசரைடுகள் முதலிய வற்றைத் தயாரித்து அளித்தல் என்பன வழவழப்பான வலை அமைப்பின் பணிகளாகும். எண்டோபுரோக்ட்டா ஆ.ந.ரங்காராம் முதுகெலும்பற்ற விலங்குகள் எட்டுப் பெரும் தொகுதி களாகவும் பதினேழு சிறு தொகுதிகளாகவும் பிரிக்கப் பட்டுள்ளன. எண்டோபுரோக்ட்டா எண்டோபுரோக்ட்டா (endoprocta) என்பது மூன்று குடும்பங்களாக உள்ள அறுபது னங்களைக் கொண்ட ஒரு சிறு தொகுதியாகும். கிரேக்க மொழியில் எண்டான் (endon) என்றால் உள்ளுக்குள் (within) என்றும், புரோக்ட்டோ (procta) என்றால் மலப்புழை (anus) என்றும் பொருள். என்டோபுரோக்ட்டாவைச் சார்ந்த விலங்குகளின் வாயும் மலப்புழையும் எதிரெதிராக உணர் நீட்சி உணர்நீட்சி களின் மகுடத்தினுள் அமைந்துள்ளன. இவற்றிற்கு எண்டோபுரோக்ட்டா என்ற பெயர் 1870 ஆம் ஆண்டில் நிட்ஸ்சி என்பாரால் இடப்பட்டது. இதற்கு முன்னர் எண்டோபுரோக்ட்டாவும், எக்டோ புரோக்ட்டாவம் பிரையோசோவா என்னும் சிறு தொகுதியில் சேர்க்கப்பட்டிருந்தன. எண்டோபுரோக்ட்டா நுண்ணிய, எளிய அமைப் புடைய தனித்த அல்லது கூட்டுயிரியாகக் கடல்நீர் அல்லது நன்னீரில் பற்றிடத்தைப் பற்றி வாழும் உயிரிகள். இவற்றில் போலி உடற்குழியும் U வடிவ உணவுப்பாதையும் உண்டு. சுடர்ச்செல்களில் முடி வுறும் ஓர் இணை முன்னோடி நெஃப்ரீடியங்கள் கழிவுறுப்புகளாகச் செயல்படுகின்றன. இனப்பெருக்க அ.க. 6-g க எண்டோபுரோக்டா 129 நாளங்களைக் கொண்ட எளிய இரண்டு இனப் பெருக்க உறுப்புகள் இவற்றிற்கு உண்டு. வாழ்க்கைச் சுழற்சியில் டிரோக்கோஃபோர் இளவுயிரி காணப்படுகி கிறது. . தாவ வாழுமிடம். கடல் கடல் நீரில் உள்ள ரங்கள், கற்கள், குச்சிகள், ஓடுகள், கடற்பஞ்சுகள், கடல் நண்டுகள் ஆகியவற்றைப் பற்றிக் கொண்டு எண்டோபுரோக்ட்டா வாழ்கின்றது. மைசோமா லோக்சோசோமா, பெடிசெல்லினா ஆகியவை கடல் எண்டோபுரோக்ட்டாக்களுக்கு எடுத்துக்காட்டாகும். அர்னடெல்லா என்னும் ஓர் இனம் மட்டும் நன்னீரில் பற்றிடத்தைப் பற்றி வாழ்கின்றது. 5 மி.மீ. அளவுடைய இந்த எண்டோபுரோக்ட் டாக்கள் ஹைட்ராய்டு பாலிப்புகளைப் போன்று காணப்படுகின்றன. ஆனால் எண்டோபுரோக்ட் டாவின் உணர்நீட்சிகளில் குற்றிழைகள் (cilia) காணப்படுகின்றன. அமைப்பு. எண்டோபுரோக்ட்டாவின் உடல் கண்டங்களற்றும், மூவடுக்கு உடற்சுவருடனும் இரு பக்கச்சமச்சீர் அமைப்புக் கொண்டுள்ளது. எண்டோ புரோக்ட்டாவின் உடலை உணர்நீட்சிகளின் மகுடம், தலை, காம்பு, தண்டு, அடித்தட்டு என்று ஐந்து பாகங் களாகப் பிரிக்கலாம். எண்டோபுரோக்ட்டாவின் கிண்ணம் போன்ற தட்டையான பாகம் தலை எனப் படுகின்றது. தலை உள்ளுறுப்புகளைக் கொண்டுள்ளது. தலையின் விளிம்பு வட்டவடிவமாக உள்ளது. இதற்கு லோபோபோர் என்று பெயர். இதனைச் சுற்றி ஒத்த நீளமுடைய, நீண்டு சுருங்கக்கூடிய, குற்றிழை களைக் கொண்ட உணர்நீட்சிகள் 8-30 வரை காணப்படுகின்றன. உணர்நீட்சிகளின் அடிப்பகுதியில் குற்றிழைகளைக் கொண்ட ஒரு பள்ளம் உண்டு. இதற்கு வெஸ்டிபியூல் அல்லது ஏட்ரியம் என்று பெயர். இதில் வாய் மலத்துளை, கழிவு நீக்கத்துளை இனப்பெருக்க நாளத்துளை ஆகியவை காணப்படு கின்றன. தலை சுருங்கி நீளக்கூடிய காம்புடன் இணைந் துள்ளது. காம்பு, தலையிலிருந்து ஒரு மெல்லிய உடல் சுவரால் பிரிக்கப்பட்டுள்ளது. காம்பின் அமைப்பைக் கொண்டு எண்டோபுரோக்ட்டாவை வகைப்படுத் தலாம். சிலவற்றில் காம்பு மென்மையாகவும், சில வற்றில் சிறு முள்களைக் கொண்டும். சிலவற்றில் மணிகள் கோத்தாற்போன்றும் காணப்படும். என்டோபுரோக்ட்டாவின் உடலைச் சுற்றிப் பாதுகாப்பிற்காக உடல் மேல்தோல் காணப்படு கின்றது. உணர்நீட்சிகளில் மேல்தோல் இல்லை. மேல்தோலின் அடியில் கியூபாய்டு செல்களும், சுரப்பிச் செல்களும், தொடு உணர்ச்சி நரம்புச் செல் களும் ஒரே வரிசையில் அமைந்துள்ளன. இதற்குப் புறப்படை என்று பெயர். இதன் கீழ், நீள்தசைகள்